Header Ads



இலங்கை பயங்கரவாதிகள், சவுதி அரேபியாவில் கைது - விசாரணைக்காக சென்றது CID

சவுதி அரேபியாவின் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத குழுவின் பிரபல சந்தேகநபர்கள் எனத் தெரிவிக்கப்படும் நான்கு பேரிடம் விசாரணையை மேற்கொள்ள பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று சவுதி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினால் சர்வதேச பொலிஸார் ஊடாக வழங்கிய தகவலின் பேரில் சவுதி பொலிஸாரினால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நால்வரில் இருவர் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் நடாத்த பயிற்சி பெற்ற முக்கிய உறுப்பினர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் இன்றைய சகோதர தேசிய நாளிதழொன்று அறிவித்துள்ளது.

இந்த இருவரையும் இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் சவுதி பொலிஸாருடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் புலனாய்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சவுதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இந்த நால்வரும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இவர்கள் கடந்த 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடாத்தப்படுவதற்கு முன்னர் சவுதி நோக்கி பயணித்துள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

1 comment:

  1. Its Not Thowheed Jamaath. It is Nation Towheed Jamaath (NTJ) Terror.

    ReplyDelete

Powered by Blogger.