May 22, 2019

ஒட்டுமொத்த இஸ்லாமியர்ளையும், கழுவி ஊற்றுகிறார்கள் - அதைபோய் பார்த்து, பொழைக்கிற வழிய பாருங்க என்கிறார் மனோ கணேசன்

- Mano Ganesan -

தமிழில் எழுதும் முஸ்லிம் ஊடகர் ஒருவர், திடீரென விழித்தெழுந்து, மலையக தமிழ் பெண்களை அசிங்கமாக கொச்சைப்படுத்தி, என்னையும் திட்டி இணையத்தில் எழுதியுள்ளார். பாருங்களேன், என்று ஒரு நண்பர் சற்று முன் என்னை அழைத்து சொல்லி, தொடர்பையும் அனுப்பினார். வாசித்தேன். என்னை திட்டுவது இவர்களில் சிலருக்கு இப்போது ஒரு நோய் ஆகிவிட்டது. இவர்கள் திட்ட, திட்ட நான் இன்னமும் அதி பிரபலம் ஆகிறேன். நான் ஒரு இரும்பு மனிதன். என்னை அசைக்க முடியாது. ஆகவே இங்கே நேரத்தை வீணடிக்காதீர்கள்!

ஆனால், ஏனிந்த அப்பாவி மலைநாட்டு தமிழ் பெண்களை பகிரங்க தளத்தில் கொச்சைப்படுத்துகிறீர்கள்? சிறுபான்மை மக்கள் மத்தியில் சச்சரவை உருவாக்குகிறீர்கள்? இதை நிறுத்துங்கள்!

இங்கே பேரினவாதிகள் சுற்றி வளைத்து, நேரிலும், இணையத்திலும் இஸ்லாமிய ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் என்று ஒட்டுமொத்த முஸ்லிம் சகோதர மக்களையே கொச்சைபடுத்தி, கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதை போய் பார்த்து, தர்க்கரீதியாக, சிங்களத்தில், ஆங்கிலத்தில் பதில் கூறி, பொழைக்கிற வழிய பாருங்கப்பா!

7 கருத்துரைகள்:

Excuse me Mano Sir, யார் என்ன எழுதியிருக்காங்கன்னு எனக்கு தெரியாது. ஆனால் எங்களுக்குள்ளேயே கருப்பு ஆடு இருக்கும் அல்லவா. நீங்கள் முஸ்லிம்களுக்கு சார்பாக ஏதோ பேசியிருப்பீர்கள் அதைப்பார்த்த சிலர் ஏதோ மருந்து கட்டுவதற்காக இப்படியும் எழுதி அதனை உங்கள் பார்வைக்குத் தந்திருக்கலாமல்லவா!

உங்களின் உன்மை முகம் தெரிந்து விட்டது ஒரு மாதகாலமாக.அவர்கள் கழுவி ஊற்றினால் அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.உங்களிடம் உதவி கோரவில்லை (இதைத்தான் சொல்வது அடுத்தவன் சோத்துக்குல் மாங்காய் பினைவது)...ஜயா,30 வருடங்களாக புலிப் பயங்கரவாதிகளும்,தமிழ் அரசியல் வாதிகளும் இந்த நாட்டில் ஆடிய ஆட்டத்தை சுய பரிசோதனை செய்யுங்கள்.2 நாள் குண்டு வெடிப்புக்கு தமிழ் சமூகம் காட்டும் ரியாக்சனை பார்க்கும் போது,ஏதோ 30 வருடங்களாக அவர்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு உரம் இட்டு நாட்டை சிங்கப்பூர் ஆக உருவாக்கியது போல் பேச்சு.சே கேவலம் ஒரு காலத்தில் ஆசியாவிலே ஜப்பானுக்கு அடுத்த நிலயில் இருந்தது இந்த நாடு.சிங்கப்பூரின் பிரதமர் லிங் சுவாங் 1965 ம் ஆண்டிலே சொன்னார்,நாம் Sri Lanka வை பின்பற்றி முன்னேற வேண்டும் என்ரார்.அப்படியாக இருந்த நாட்டை நாசமாக்கி விட்டு இப்போது அவர்கள் கழுவி ஊற்றுவதை பேச கொஞ்ஞமாவது வெட்கம் இல்லையா.

நீங்கள் சொல்லுறது அவருக்கு விளங்காது

நீங்கள் சொல்லுறது அவருக்கு விளங்காது

Dear Mr mano,
There are tons of fools in Muslim community who are not following islam. It is HARAM in Islam to spread lie and rumors about other.
I too disagree with some of your opinion but using harsh word is is not acceptable. we can have healthy conversation. It will be nice if our people (not only Muslims) learn to use good word when expressing their opinion. Please keep your Good work.

“Speak good or remain silent.” Prophet Muhammad (peace be upon him)

A mistake is mistake regardless of whoever doing it. BUT it should be confirmed that whether truly done or misinterpreted.

வசையும் வம்பும் வராத சமூகம்கள், தலைமைத்துவங்கள், அரசியல்வாதிகள் இல்லை. அதனை கணக்கெடுக்காமல் கடந்து செல்வோர்தான் இரும்பு மனிதர்கள். இது என்ன பச்ச இரும்போ?

Post a comment