Header Ads



முஸ்லிம்கள் ஒரு இனமாக எப்படி, மற்றவர்களுடன் இணைந்து வாழலாம் என ஆராய வேண்டும் - ரவி

சிங்களவர், தமிழ், முஸ்லிம்கள், பறங்கியர் ஆகிய இனங்களே இலங்கையின் அடையாளம் எனவும் அடிப்படைவாதிகளுக்கு நாட்டை அழிக்க இடமளிக்க போவதில்லை எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -12- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையர்கள் என்று வாழ வேண்டும் என்பதற்காகவே நாம் சுதந்திரம் பெற்றோம். சிங்களவர், தமிழ், முஸ்லிம்கள், பறங்கியர் ஆகிய இனங்களே இலங்கையின் அடையாளம். இதுதான் எமது பலம். இதனையே நாம் பயன்படுத்த வேண்டும்.

இது சில சமயங்களில் அடிப்படைவாதத்தை நோக்கி சென்றிருக்கின்றது. 1971 - 1989 ஆம் ஆண்டுகளில் சிங்களவர்கள் தரப்பில் அடிப்படைவாதம் ஏற்பட்டது. சமய அடிப்படையில் கிறிஸ்தவ அடிப்படைவாதம் ஆரம்பமாகியது. ஒரு விதத்தில் 30 ஆண்டுகள் தமிழர்கள் தொடர்பான பிரச்சினை இருந்தது.

தற்போது இஸ்லாம் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. தற்போது மற்றவர்களை சந்தேகத்தோடு பார்க்காது. அனைவரும் இணைந்து அடிப்படைவாதத்தை தோற்கடிக்க வேண்டும். தமிழ், முஸ்லிம், சிங்களம் என இனவாதத்திற்கு இடமளிக்கக் கூடாது. இதனால், நாம் அனைவரும் கைகோர்த்து, எமது பலம், என்ன பலவீனம் என்ன என்பதை கண்டறிந்து அந்த பலவீனத்தை சரி செய்ய வேண்டும்.

முஸ்லிம்கள் ஒரு இனமாக எப்படி மற்றவர்களுடன் இணைந்து வாழும் நிலைமையை ஏற்படுத்தலாம் என்பதை நாம் ஆராய வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அனைவரும் கைகோர்த்து, ஒரு வீதமான அடிப்படைவாதத்தை தோற்கடிப்பது எப்படி என்பதை ஆராய வேண்டும்.

99 வீதமான மக்கள் ஒற்றுமையாக செயற்பட்டு காட்ட வேண்டும். ஒரு வீதமான அடிப்படைவாதிகளுக்கு நாட்டை அழிக்க இடமளிக்க போவதில்லை. வாக்கு வங்கி குறைந்து விடும் என்று அஞ்சாமல் வெளிப்படையாக இதனை பேச வேண்டும் எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. This is the right moment for the government to
    go after all religious organisations and see
    how they get funds to operate and what they
    preach their followers ! All peoples are innocent
    until a registered or unregistered organisation
    approaches and use them for a purpose in the name of
    a religion . People have no power to do this when
    governments allow organisations to function ! It is
    government responsibility to protect people from a
    wrong organisation just like N T J is now banned but
    after the damage was done ! All religious
    organisations of all communities have the blessings of
    all politicians in some way for votes and this is the
    truth . Don't try to pass the responsibility to the
    people and run away from your responsibility . Take
    measures at least to control the activities of all
    organisations running in the name of religions .
    Muslims had been voicing their concern about
    mushrooming New Islamic organisations since very long.
    It is Muslims that should protest that all governments
    failed to protect them of extremists from inside and
    outside their community .

    ReplyDelete
  2. ஒவ்வொரு திருடனினதும் கடைசி அடைக்கலம் இனவாதம். இதற்க்கு மத்தியவங்கி திருடன் மட்டும் விதிவிலக்கல்ல.

    ReplyDelete
  3. சிங்கள இனம் எப்படி ஏனைய இனங்களோடு பழகவேண்டும் என்று முதலில் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவும்.ஒரு சிறு குழுச்செய்த வேலைக்கு முழு இனத்தையும் தவறாக நோக்கும் இனம் சிங்கள இனமாகும்.வெற நாடுகளிலும் சில நேரங்களில் குண்டுகள் வெடிக்கின்றன பிறகு எல்லாம் மறந்து முன்பு போல் நாடு சீராகி பழைய நிலைக்கு செல்கின்றன ஆனால் இலங்கையில் மட்டும் இன்னும் அதேவைத்து கொண்டு பிழைப்பு நடத்துகின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.