May 29, 2019

அல்லாஹ்வின் இறையில்லத்தை உடைப்பதற்கு, எப்படி உங்களுக்கு மனம் வந்தது...?

கெக்கிராவயில் அல்லாஹ்வை வணங்கி வழிபட்டு வந்த இறையில்லத்தை அடித்து உடைப்பதற்கு எப்படி உங்களுக்கு மனம் வந்தது என்பது தான் இங்கு அதிர்ச்சியளிக்கிறது.

உண்மையான மிஸ்லிம் யாரும் இப்படியான எந்த செயலையும் ஒரு போதும் செய்யவும் மாட்டான் செய்வதற்கு அனுமதிக்க வும் மாட்டான்.

ஆனால் தங்களை முஸ்லிம்களாக கூறிக் கொண்டு கப்ருகளையும் ,அவ்லியா எனும் போர்வையில் கணடவர்களையும் வணங்கி வழிப்படும் உங்களுக்கு அல்லாஹ்வை வணங்கும் இடங்களை கண்டால் இவ்வளவு வெறுப்புக்கு காரணம் தான் என்ன?

நீங்கள் அல்லாஹ்வின் மாளிகையை  உடைப்பதற்கு முன் அங்கு என்ன நடக்கிறது என்றாவது அறிந்து கொண்டுள்ளீறா? என்றால் கிடையாது.

கசாப்பு கடையில் காட் சட்டையும் பணம் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள் மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் அழைப்புகள் வரும்போது புறக்கணித்து விட்டு உலக இலாபத்திற்காக மாரடித்த கூட்டம் நீங்கள் அல்லாஹ்வின் மாளிகையை இடைப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது.

இஸ்லாமிய பெயரில்  வாழ்பவர்கள் கூட முஸ்லிம்களின் வணக்கஸ்தலத்தை மட்டுமல்ல #ஏனை மாற்று மத வணக்கஸ்தளங்களை கொச்சைப் படுத்துவதையும், இழிவாக்குவதையும் வெருப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் காட்டித்தந்ததும் அதுவே

கேகிராவையில் அல்குர்ஆன் ஹதீஸை செயல் படுத்தும் இறை இல்லத்தை தான் உங்களால் உடைக்க முடியும் பின்பற்றும் மக்களை உங்களால் அழிக்கவோ உடைக்கவோ முடியாது.

 குர்ஆன் ஹதீஸை பின்பற்றும் மஸ்ஜிதை உடைத்ததில் உங்களுக்கு என்ன கிடைத்தது?

ஆனால் இங்கு உங்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்மதமற்றுப் போயிருக்கும் நீங்கள் மஸ்ஜிதுகளை உடைப்பது என்பது வண்முறைகளை மீண்டும் தூண்டும் செயலாகவே அமைகிறது.

நீங்கள் பள்ளியை உடைத்ததைப் போன்றே அவர்களும் உடைத்தார்கள்.

இதில் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் உண்டு?

மார்க்கத்தினை சரியாக அறிவதற்கு முயற்சிக்காத நீங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரின் போதனைகளையும் ஏற்று செயல் படுத்தும் மஸ்ஜிதை உடைக்க படை கொண்டு வந்துள்ளிர்.

படைத்தவனை மறந்து அவனின் கட்டளைகளையும், தண்டனைகளையும், மதிக்காத ,நம்பாத நீங்கள் முஸ்லிம்களா? என்ற சந்தேகமும் இருக்கிறது.

ஈமானிய தன்மை கடுகளவு உள்ளவனுக்கும் மஸ்ஜிதில் வணக்கம் செய்ய தடை விதிக்காதே என்று சொல்லும் மார்க்கத்தின் புனிதததினை நாம் செய்த கயவர்களே உங்களுக்கு அல்லாஹ்வின் அடியார்களின் சாபங்கள் சூழ்ந்து கொள்ளும் போது புரிந்து கொள்வீர்கள்.

மற்றவர்களின் திருப்தியைப் பெறவும்,திருப்திப்படுத்தவும் நீங்கள் செய்த செயல் பாரதூரமான விளைவுகளை முஸ்லிகளிடத்தில் உண்டாக்கி இருக்கிறது.

#இலங்கை_சட்டத்தின்_படி_யாரும்_எதையும்_கடவுளாக_அமைக்கவும்_வணங்கவும்- அனுமதி இருக்கையில் அல்லாஹ்வை வணங்கும் மஸ்ஜிதை உடைப்பதற்கும்,அழிப்பதற்கும்,நீங்கள் யார்?

இஸ்லாமியர்களில் தற்போதைய தீவிரவாதிகளாக நீங்கள் தான். வலம் வந்துகொண்டிருக்கிறீர்கள்.

அல்லாஹ்வை வணங்குதையே தடுக்க வேண்டாம் என்ற கட்டளை இருக்கு. போது அவனது வணக்கஸ்தளங்களை நாசம் செய்த உங்களுக்கு விரைவில் அல்லாஹ்வின் சாபமும் கேடும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற எமது சாப பிரார்த்தனையில் நாம் ஒன்றினைவோம்.

எப்படியானாலும் அல்லாஹ் போதுமானவன்.

#நீங்கள்_சதி_செய்தால்_அல்லாஹ்_அதை_விட_சதி_செய்கிறவனாக_இருக்கிறான்

ஒவ்வொன்றும் தனது வணக்கத்திலும் செயலிலும் மற்றார் வார்த்தைக்கு அடிமையாகிய நிலை தான் அல்லாஹ்வின் மாளிகைகளை உடைக்கும் அள்வுக்கு உங்களை கொண்டு சென்றுள்ளது.

நீங்கல் செய்த குற்றத்தையும் இதற்கு முன் பேரின வாதிகளால் இழைக்கப்பட்ட அல்லாஹ்வின் மாளிகை உடைப்பில் அவர்கள் தெரியாமல் கோபத்தில் செய்தார்கள்.

ஆனால் நீங்கள் அல்லாஹ்வின் மாளிகைகளின் சிறப்பையும், தன்மையையும், தண்டனையையும் தெரிந்த நீங்கள் இந்த அளவுக்கு போனது தான் ஏன் என்பது தெரியவில்லை.

அல்லாஹ்வின் அழிவுகளை கண்களினூடாக கண்டும் துந்தாதவர்களாக வாழ்ந்து உலக வாழ்க்கையில் என்றும் நிரந்தரம் இல்லை என்பதையும் நினைவில் வைத்திருங்கள்.

அல்லாஹ்வின் விடயங்களில் தவறு செய்தோர் நிச்சயம் தண்டை பெறுவார்கள்.

அரசாங்கமும் இதனை செய்தவர்களை கண்டரிந்து கைது செய்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.

 என  அரசை வேண்டிக்கொள்கிறோம்.

✒E.முபாரிஸ் றஷீதி ............

17 கருத்துரைகள்:

good thawheed jamathay alippom.srilankawuku thawheed jamath theway illay.

இஸ்லாமிய அறிவு கடுகு அளவுமில்லாத இந்த மாடுகள் மேயத்துவாழும் கயவர்கள்மீது அல்லஹுத்தா அலா பாம்புகளை ஏவிவிட்டு இவர்களை சாபடிக்கட்டும்

இந்த பகுதி மக்கள் அறிவுத்துறையில் பின்தங்கியவர்கள் என்பது நாம் அறிந்த உண்மை இவர்களிடம் இஸ்லாமிய அறிவு வீழ்ச்சியை இந்த பள்ளியை உடைத்ததைவைத்து தெரிந்து கொள்ளலாம்!

It is true.Those involved like this barbarion activities must be punished.

To:Ministry of Muslim Religious Affairs,
Please carry out an immediate investigation on this matter and bring the culprits to book. If you fail to take appropriate action this will cause more rifts among people.
Jazakallah khairan.

பயங்கரவாதத்தின் மற்றுமோர் வடிவம். மாற்றுமத வழிபாடுகளையே இடையூறு பண்ண வேண்டாமென இஸ்லாம் கூறும்போது இஸ்லாதின் பேரில் அல்லாஹ்வின் இல்லத்தை இடிக்கிறீர்களே மடையர் கூட்டம்..
அல்லாஹ் உங்களை எப்படி சோதிக்கப்போகிறானோ தெரியவில்லை.
நீதிமன்ற உத்தரவில்லாமல் கட்டிடத்தை எப்படி உடைப்பீர்கள் ?
இதற்கு உடன் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படி இன்னும் அனேக மடத்தனங்கள் அரங்கேறும்..

ALLAHVIN IRAI ILLATHITKUM, WAHABIHALIN SHEITHANIN,ILLATHIRKUM WITHIYASHAM, ARINDUHONDA ANDA OOR MAKKALUKKU ALLAH RAHMATH,SHEIVANAHA.

காபிரை சந்தோஷப்படுத்த அல்லாஹ்வின் மாளிகையை உடைத்த அப்ரஹாவின் குழந்தைகளே, அடிக்கடி வானத்தை பார்த்துக்கொள்ளுங்கள். லைலத்துல் கத்ர் இற்காக அல்ல. அபாபீல் பறவைகள் வருகின்றனவா என்று.

பள்ளியை உடைத்தது மிகப் பெரும் மன்னிக்க முடியாத குற்றம்.காட்டு மிராண்டிகலே நீங்கள் அந்த பள்ளி நிர்வாகத்தை உங்கள் ஊரின் ஜீம்மா பள்ளியின் கீழ் கொண்டு வந்திருக்கலாம்.ஆனால் நீங்கள் செய்த செயல் தவ்ஹீத் ஜாமாத் எம்மை அடுத்த இனங்கலிடம் இருந்து தூரமாக்கினார்கல்.நீங்கலோ இந்த உலகத்திலே எந்த மூலையிலும் இடம் பெறாத (Muslim களே பள்ளியை உடைத்தார்கல் என ஒரு கரும் புள்ளியை எமது ஒட்டு மொத்த சமூகத்தின் மீது சுமத்தி விட்டீர்கள்). இந்த விடயம் மற்றும் அன்மையில் நாட்டு நிலமை தெரியாமல் ஆடை அனிந்த எமது பெண்கள் இவை எமக்கு சொல்லும் ஒரு செய்தி எமது சமூகம் கல்வியில் இன்னும் அதிக தூரம் செல்லவில்லை.எமது சமூகம் கட்டாயம் கல்விக்காக இன்னும் இன்னும் தம்மை தயார் செய்ய வேண்டும்.கெக்கிராவையை சுற்றி இருக்கிற இப்படியான பின் தங்கிய Muslim கிராமங்களில் கல்வி இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும்.

கவலைதரும் விடயம்தான். பின்வரும் சுயவிமர்சனத்துக்கு விடை தேடுங்கள்.
1. சிறிய கிராமங்களில் இரண்டு மூன்றுக்கு மேற்பட்ட பள்ளிகள் ஒரே நேரத்தில் அதான் சொல்லும் போதும் பயான் செய்யும் போதும் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாத நிலை. இந் நிலையில் வேறு ஒரு உயிர் இனத்தின் கூக்குரல் சத்தம் ஞாபகத்துக்கு வரும். (நஊது பில்லாஹி மின்ஹா)
2. இப் பிரிவானது குடும்ப உறுப்பினர்களுக்கிடையேயும், ஊர்வாசிகளுக்கிடையேயும், சமூகத்தினிடையேயும் ​வெறுப்பையும் பிரிவினையையும் கொண்டு வந்து பர்ளான சமூக ஒற்றுமையை சீர் குலைத்தமை.
3. ஏனைய சமூகத்துடன் இணைந்து வாழ முடியாத இறுக்கமான சட்டங்களை வகுத்து செயற்படுகின்றமை.
4. முஸ்லீங்களின் தலைமைத்துவ அமைப்புகளுடன் இணைந்து செயற்படமுடியாத மனநி​லையிலிருப்பது.
5. தான்தோன்றித்தனமாக முடிவுகள் எடுப்பது தங்களுக்குள்ளேயே பிரிந்து பிரிந்து தனித்தனி பள்ளிகளைக் கட்டுவது.

ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து போக முடியுமாக இருந்திருந்தால் பள்ளியை இடிக்க வேண்டி வந்திருக்காது. மேற்படி விடயங்களில் தீர்வு காண காலம் தாழ்த்தத் தாழ்த்த பள்ளிகளை உடைக்கும் அளவு அதிகரிக்கலாம்.

It is wrong to destroy any worshiping place. You would've blame the specific people who did this but why are you vomiting venom against another sect of Islam. If you think that your interpretation of Islam is the correct one then keep it with yourself or be an example person like prophet(PBUH) so others may embrace your sect. Don't spread hate among people. Why are you saying that they are worshiping graves while they clearly say that they don't do that.
Where were you when Thareekathul Mufliheen Mosque in Kattankudy was attacked and destroyed with grenades by Salafis in 2004. Where were you when they took the dead body of Abdullah (Payilvaan) out grave and burn it. that is inhumane, isn't it.

PLEASE READ ABOUT MASJID LIRAR WHICH ALLAH SAYS IN HIS QURAN.

Youtube இல் ஒரு பெரும்பான்மை இனத்தவர் சிங்கள மொழியில் எழுதி இருந்த comment ஐ, இங்கு தமிழ் மொழியில் எழுதுகிறேன். "இந்த பிரச்சினை இன்னும் ஒரு வருடம் நீடித்தால் இவர்கள் (முஸ்லிம்கள்) பௌத்த துறவியும் ஆகுவார்கள்".

அவசியம் இல்லாத இடங்களில் தேவைக்கு அதிகமாக பள்ளிவாசல்களை நாம் கட்டியுள்ளோம்.
எமது நாட்டிலே இஸ்லாமிய அமைப்புக்கள் தோன்றிய அண்மைக்காலமாகத்தான் இந்த
நிலமை. ஏட்டிக்கு போட்டியாக ஒவ்வொரு குழுவும் தங்களுக்கான
பள்ளிவாசல்களை வெளிநாடுகளில்
உதித்த சமய அமைப்புகளின் அனுசரணையுடன் அவர்களின் கொள்கை கோட்பாடுகளை இங்கு
பரப்புவதற்காக கட்டப்பட்ட பள்ளிவாசல்கள்தான் மெலிந்து காணப்படுகின்றன. ஒவ்வொரு
ஊரிலும் பிரதேசத்திலும் பல தலைமைகள் உருவாகி குர்ஆன்
ஹதீஸ்களுக்கு தாங்கள் தாங்கள்
அவைகளை விளங்கிக்கொண்டதற்கேற்ப விளக்கம்
சொல்லி விவாதித்து கொண்டிருக்கின்றோம்.ஆனால் ஒரு
இஸ்லாமியன் தான் செய்கின்ற தொழில் தொடக்கம் அன்றாட கருமங்களில் ஈடுபாடும்போது ஏனய
சமூகத்தவருக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள முடியாமல்,தெரியாமல் வெறுமனே சுன்னத்தான வணக்க வழிபாடுகள்,நடைமுறைகள்,பற்றி
விவாதித்து பிரிவினையை தோற்றுவித்து கொண்டிரக்கின்றோம்.
சுன்னத்தான வணக்க வழிபாடுகளை
அல்லது பழக்க வழக்கங்களை செய்தால் அல்லது பின்பற்றினால்
அதற்கான நன்மை கூலி கிடைக்கும்
என்பதோடு அதை செய்யாவிட்டால்
ஒன்றுமில்லை என்பது எமது சிறு பிள்ளைக்கும் தெரிந்தவிடயம். இடம்
காலநேரம் சந்தர்ப்ப சூழ்நிலைகள்
என்
பதை பொறுத்து அவைகளை
பின்பற்றலாம் அல்லது தவிர்ந்து கொள்ளலாம் எனபதற்காகத்தான்
அவைகள் சுன்னத்தாக்கபட்டுள்ளன
இல்லாவிட்டால் அவைகளை அல்லாஹ்
பர்ளாக்கி இருப்பான் இதை நாம் விளங்காமல் இந்த நாட்டிலே சிறு
பான்மை மக்களான நாம் பெரும்பான்மை மக்களோடு ஒன்றித்து
கலந்து வாழவேண்டிய சூழலில் இஸ்லாத்தின் வரையறைக்குள் அந்த
மக்களின் சமய கலாச்சர பாதுகாப்பு
போன்ற விடயங்களையும் மதித்து
நடக்கவேண்டியது காலத்தின் கட்டாயத்
தேவயைாகும் என்பதை நாம் இனியும்
உணராமல் இருக்க முடியாது.
இஸ்லாம் முழுமையாக போதிக்கப்பட்டு
விட்டது. உளத்தூய்மையோடு தக்வா
வின் அடிப்படையில் அதை அணுகினால் அவரவர் ஆற்றலுக்கும்
அறிவுக்கும் சிந்தனைக்கும் ஏற்ப அது
அவர்களை வழிப்படுத்தும்.இதற்காக
கூட்டம்போட்டு மேடை அமைத்து விவாதம் நடத்தி விளக்கம் சொல்ல
தேவையில்லை.மாறாக தமது நடவடிக்கைகள் மூலம் குர்ஆன் ஹதீஸ்
சொல்கின்ற வாழ்கை முறையை
நடைமுறையில் வாழ்ந்து காட்டுவோம்
இந்த நாடே சுபீட்சமடையும்.
அதற்காக பள்ளிவாசல் உடைப்பை
எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

பயப்படாமல் இடித்து வீசுங்கள் ஒரு அபாபீலும் இங்கு வராது மஸ்ஜித் ளிரார்களை உடைக்கும் படியே நபிகளாரும் கட்டளையிட்டார்கள்

மஸ்ஜித் ளிரார் என்றால் என்னவென்று முதலில் படி மடையா.

Post a comment