May 08, 2019

இலங்கை முஸ்லிம் சமூகம் மீதான, உளவியல் யுத்தம் - எதிர் கொள்வது எப்படி ?

உளவியல் யுத்தம் ஆயுதங்களால் நடத்தப்படும் யுத்தங்களை விட பயங்கரமானது ,அது சமூகங்களின் நாட்ட சக்தியை குறைக்கும். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது தெளிவான ஒரு உளவியல் யுத்தம் தொடுக்கப்பட்டுள்ளது .ஊடகங்களும் சில அரசியல் ,சமூகத் தலைமைகளும் மொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளியாக சித்தரிக்கின்றது.இந்த நாட்டிற்கு வேண்டாத பிரஜைகளாக சித்தரிக்கின்றனர் .முஸ்லிம் சமூகம் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்துப் போயுள்ளது .ஆனால் கவனமாக எதிர் கொண்டால் யார் எம்மீது உளவியல் யுத்தத்தை ஏற்படுத்தினார்களோ அவர்களை உளவியல் ரீதியாக வெற்றி கொள்ள முடியும் இந்த வகையில் பின்வரும் ஆலோசனைகளை முன்வைக்கின்றேன்.

01.உங்கள் குடும்பங்களில் எப்போதும் நல்ல விடயங்களையே பேசுங்கள் ,அன்மையை சம்பவங்களை பேசுவதை குறைக்கவும்.

02.வழமையான வேளைகளில் முன்பை விட அதிக ஈடுபாட்டுடன் வேலை செய்யுங்கள்.

03.உளவியல் ரீதியாகவே எம்மை பலவீனப் படுத்த எத்தனிக்கும் ஊடகங்களின் நிகழ்ச்சிகளை பார்ப்பதை தவிர்ந்து கொள்ளுங்கள் ,செய்திகளைக் கூட .

04.வீட்டில் சிறுவர்களையும் ,பெண்களையும் தைரியப் படுத்துங்கள் 

05.வேலை செய்யும் இடத்தில் வழமை போன்று நடந்து கொள்ளுங்கள் ,தேவை அற்ற விவாதங்களை தவிருங்கள் .

06.எப்போதும் உங்களை மீள் பரிசீலனை செய்து கொள்ளுங்கள்.

07.பிற சமூகங்களுடனான நற்பை பலப்படுத்துங்கள் .அவர்கள் உங்களை புரிந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் கொடுங்கள்.

08.இறை வழிபாட்டில் ஆழமாக ஈடுபடுங்கள் அது உங்களை பலப்படுத்தும்.

09.வாழ்வை வளப்படுத்தும் ,நம்பிக்கை ஊட்டும் புத்தகங்கள் ,கலை இலக்கிய வடிவங்பளை அனுபவியுங்கள் 

10.உலகில் எல்லா பிரச்சினைகளும் தற்காலிகமானது .சில பிரச்சினைகளை காலம் தீர்க்கும் என்பதை உறுதியாக நம்பி தொழிற்படுங்கள் .
நாம் வீழ்வது அல்ல முக்கியம் ,முன்பை விட பன் மடங்கு பலத்துடன் நிமிர்ந்து நிற்பதே  முக்கியமானது .

5 கருத்துரைகள்:

first of all have a trust in Allah and be strong in faith. Nothing take palace in this world without his wisdom, without his knowledge, without his plan.. So, we believe in predestination: it is part of our faith. Nothing happened without his permission. Every thing is written in his books. we, did not born in this Island as we like. Allah made us in this Island for a reason. We did not come down into this Island as we like. It is all Allah's plan and scheme. So, do not worry too much. We know well that this is a bad example for all of us. yet, this already took place we can not do anything about it. It is gone now.. Remember 95% of Sinhalese are good people. They are not bad people. we could get on with them. We have been living for the last 1000 years and they have been good with us. Sinhalese kings trusted us and they loved us in this Island. Sinhalese people most of them are kind and good. there are some bad apples among them but the majority are good people.so, we could rebuild this.... Pray with devotion and feel that Allah is with us. Please feel that nothing take place without his permission. Read that all prophets suffered, all good companions suffered, all good people suffered, we are not alone. Suffering is part of this world, Above all. think that you have done nothing wrong so, Allah will be with us always to help us. Read all duas in times, read all prayers in times. above give charities and help poors. ... Allah is best guardian for us..

ஆ லோசனைகளுக்கு நன்றி, இந்த செய்திகளை முஸ்லிம் உம்மத்தின் ஒவ்வொரு அங்கத்தவரும் வாசித்து, விளங்கி,அவற்றைச் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கும் ஒரு திட்டத்தை வகுத்துச் செயல்படுங்கள், அல்லாஹ் உங்கள் எண்ணத்துக்கும் செயலுக்கும் நிச்சியம் பலமடங்கு வெகுமதிகளை வழங்குவான் இன்ஷா அல்லாஹ்.

what you are saying is close your eyes and pretend nothing happened or happening around us. good advice.

அல்ஹம்துலில்லாஹ்...உளவியல்யத்தமோ..ஏதோ...மதுவையும்...மங்கையையும்...மாடமாளிகைகளையும் நேசிக்கர குப்பாருகள்...மரணத்தை நேசிக்கக்கூடிய முஸ்லிம்கலோடு யுத்தம் செய்வது என்பது கடினம் இதை புரிந்துகொள்ளவேண்டும்.

Post a Comment