May 16, 2019

தமிழ் பாட­சா­லை­களில் இருந்து, முஸ்லிம் ஆசி­ரி­யர்கள் இட­மாற்றம் - ஹிஸ்­புல்­லாஹ் முஸ்லிம்களுக்கான ஆளுநரா எனக் கேள்வி

கிழக்குமாகாண தமிழ் பாட­சா­லை­களில் சேவை­யாற்­றி­வரும் முஸ்லிம் ஆசி­ரி­யர்­களை இட­மாற்­றி­வரும் ஆளுநர் ஹிஸ்­புல்­லாஹ்வின் செயற்­பாடு தமிழ் மாண­வர்­க­ளது கல்­வியை பாதிப்­ப­டையச் செய்­துள்­ளது. 

எனவே கிழக்கில் தமிழ் கல்வி வல­யங்கள், பாட­சா­லை­களை மூடி பெற்றோர் வீதியில் இறங்க வேண்­டி­வரும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ். வியா­ழேந்­திரன் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

மட்­டக்­க­ளப்பில் பாட­சா­லை­களில் முஸ்லிம் ஆசி­ரி­யர்கள் இட­மாற்றம் தொடர்பாக நேற்று புதன்­கி­ழமை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வியா­ழேந்­திரனின் காரி­யா­ல­யத்தில் இடம்­பெற்ற  விசேட ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போது அவர்  இவ்­வாறு  எச்­ச­ரிக்கை விடுத்தார் .

வியா­ழேந்­திரன் மேலும் கூறு­கையில்,

கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல்.ஏ. எம்.ஹிஸ்­புல்லாஹ் தீவிர நட­வ­டிக்­கை­யாக கிழக்கு மாகா­ணத்தில் உள்ள தமிழ் பாட­சா­லை­களில் கல்வி கற்­பிக்­கின்ற முஸ்லிம் ஆசி­ரி­யர்­களை உட­ன­டி­யாக முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு இட­மாற்றம் செய்­து­வ­ரு­கின்றார்.

மட்­டக்­க­ளப்பு , பட்­டி­ருப்பு, கல்­குடா மண்­முனை மேற்கு என நான்கு தமிழ் கல்­வி­வ­ல­யங்­களில்  மாகாண, தேசிய பாட­சா­லைகள் அடங்­க­லாக 252 முஸ்லிம் ஆசி­ரி­யர்கள் இருக்­கின்­றனர். இதில் கடந்த மூன்று நான்கு தினங்­களில் 120 க்கும் மேற்­பட்ட ஆசி­ரி­யர்கள் இட­மாற்றம் பெற்று முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு சென்­றுள்­ளனர். 

பட்­டி­ருப்பு வல­யத்­திலே 123 ஆசி­ரியர் பற்­றாக்­கு­றை­யுள்­ள­துடன்  61 முஸ்லிம் ஆசி­ரி­யர்கள் கல்வி கற்­பித்து வரு­கின்­றனர். இதில் 18 முஸ்லிம் ஆசி­ரி­யர்கள் இட­ம்மாறிச் சென்­றுள்­ளனர்.  ஏனை­ய­வர்­களும் செல்­ல­வுள்­ளனர்.  கல்­வி­சாரா ஊழி­யர்கள் 12 பேரும் இவ்­வாறு இட­மாற்ற அனு­மதி கேட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றனர் 

அவ்­வாறே மட்­டக்­க­ளப்பு  வல­யத்தில் 32 முஸ்லிம் ஆசி­ரி­யர்கள் கற்­பித்து வரு­கின்­றனர். இதில் 9 ஆசி­ரி­யர்கள் இட­மாற்­றப்­பட்­டுள்­ளனர்.  கல்­குடா வல­யத்தில் 71 ஆசி­ரி­யர்கள் வெளி­யே­றி­யுள்­ளனர். மண்­முனை மேற்­கு­வ­ல­யத்தில் 22 முஸ்லிம் ஆசி­ரி­யர்கள் வெளி­யே­றி­யுள்­ளனர்.  க.பொ.த. உயர்­த­ரப்­ப­ரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புல­மைப்­ப­ரீட்சை இடம்­பெ­ற­வுள்ள நிலை­யிலும்  2 ஆம் தவணை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும் அதிபர் மற்றும் வல­ய­கல்விப் பணிப்­பா­ளரின் அனு­ம­தி­யில்­லாது இட­மாற்­றத்­துக்கு அனு­ம­தித்­தி­ருப்­பது ஏற்­பு­டை­ய­தல்ல. பொறுப்­பில்­லாது கிழக்கு மாகாண ஆளுநர் இன­ரீ­தி­யாக செயற்­ப­டு­கின்றார். 

தமிழ் வல­யங்­களில் இருந்த ஆசி­ரியர் வெற்­றி­டங்­களை காட்டி முஸ்லிம் ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்கி சிறிது காலத்தின்பின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தங்களுடைய பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெறச் செய்கின்றனர். கிழக்கு மாகாண ஆளுநர் முஸ்லிம்களுக்கான ஆளுநரா ஒட்டு மொத்த கிழக்கு மாகாண மக்களுக்கு ஆளுநரா என சந்தேகம் ஏற்படுகின்றது என்றார்.

13 கருத்துரைகள்:

முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தழில் பாடசாலைகள் சாரி அணிந்து வரச் சொல்வதாலும், அரசாங்கம் தடைவிதிக்காத ஹபாயாவுக்கு தடைவிதிப்பதாலும் இனங்களுக்கிடையிலான நல்லுரவை மற்றும் ஹபாயா அணிந்த ஆசிரியர்கள் வேண்டாம் என்று தமிழ் பெற்றோர்கள் சொல்வதாலும் இடமாற்றம் வழங்கி இருக்காலம். எனவே பாடசாலை சமூகம் மற்றும் பெற்றோர்கள் முஸ்லிம் ஆசிரியர்களின் கலசார விடயம் பாதுகக்கப்படும் என்று ஆளுனரிடம் எடுத்து சொன்னால் அவர் இடமாற்றம் வழங்கமாட்டார் போல. தமிழ் பாடசாலைகளில் சாரி அணிந்து வரச் சொல்வதால் இடமாற்றம் வழங்கி இருக்காலம்.

1.இது தற்காலிக இட
மாற்றம்.
2.நீங்களும் சிங்கள
இனவாதிகளுடன்
இணைந்த செயற்
பாடுகளை பாடசா
லைகளில் அரங்கே
ற்றிக்கொண்டிருக்
கும் சூழ்நிலையில்
எவ்வாறு தமிழ்பாட
சாலைகளில் முஸ்
லிம் ஆசிரியர்கள்
வேலைசெய்வது..

என்ன அன்னே உங்களுக்கு விளையாட்டோ,ஆடையில் பிரச்சினை படுரீயல்,பின்பு எமது ஆட்கள் Muslim பாடசாலைக்கு இடம் மாற்றம் பெற்றால் அதுக்கும் ஏதோ புலம்புகிரீர்கல்.யாராவது ஒரு நல்ல மன வியாதி வைத்தியரை கொஞ்ஞம் பாரும்.சில காலமாய் ஒரு நிம்மதி இல்லாமல் இருக்கிரீர் போலும்.

NIGA HABYAWA KALATU SCALF A KALUTU ANDA, APIDI WARUWANGA MUSLIM TEACHERS UNGAL TAMIL SCHOOLS KU. SUMMA WENDUM ANDU MATHA VILLA. UNGALUKKU MUSLIM AASIRIYARGAL ANDA PAYAM. SO ADANALA MATHIRANGA ANNA IPPA ADUKKU?

Some of Tamil bloody bigots showing their discrimination against Muslim teachers as we seen recently in Shanmuga & Awissvella schools. So if you bloody morons really care about the studies of the kids why the hell you folks show such inhuman behaviors towards Muslim teachers at first place????????I studied from a Muslim School but we never had anything like this towards Tamils or others. I remember My Tamil classmates & teachers they came to school in their usual dress code; no one ever forced before or now to wear Habaya or Hijab to them.If you bloody morons didn’t let these teachers to do their job properly of course they gadda move to another school. So first fix your bloody attitude before pointing the fingers to others.

What s 'Fishing in the trouble water' Mr Yalenthiran

மீசய பெரிசா வச்சா கூல் கூடிக்ககொள்ள மீசையில கூல் படும் புரோ.. கூல் மேல பிரியப்ட்டா மீசய கட் பண்ணித்தான் ஆகனும்..

அய்யா...மல்லாக்க படுத்துக்கொண்டு மேலே எச்சில் துப்பினால் தன் முகத்தில்தான் விழும் என்று உங்களுகுத்தெரியாத என்ன.

தமிழ் தரப்பினர் தொடர்ந்தும் வஞ்சம் தீர்க்கும் மனோபாவத்திலே எள்ளார்கள். வட- கிழக்கு யுத்தம் நடந்த காலத்தில் தமிழ் ஆசிரியைகள் முஸ்லிம் பாடசாலைகளுக்கு பொட்டு வைக்காமல், சாரி அணியாமல் அபாயா அணிந்தே வர வேண்டும் என்று எந்த முஸ்லிமும் வற்புறுத்த வில்லை. தமிழ் ஆசிரியர்களை மட்டுமே சோதனை செய்ய வில்லை. இன்று தமிழ் பாடசாலைகளில் தலை கீழாக நடக்கிறார்கள். அதை நிறுத்த வேண்டும்.

இவனுக்கும் யோகேஸ்வரனுக்கும் தினமும் ஹிஸ்புல்லாவிடம் ஒரு கப் சிறுநீர் வாங்கி குடிக்கவில்லையெண்டா தூக்கம் வராது போல என்ன ஒரு சக்கிலி பிறப்பு இவன்

வியாழேந்திரன் நீயெல்லாம் தற்போது செல்லாக்காசையா???

You and idiots like you have had to thinked earlier???????

காரணம் இன்றி இடமாற்றம் செய்ய முடியாது ஆகவே மாற்றியமைக்கான காரணத்தையும் சொல்லுங்கள் அரசியல்வாதியே

Post a Comment