Header Ads



முப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)


நீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவிரமடைந்துள்ளது.

சம்பவ இடத்தில் முப்படையினர் உள்ளபோதும், அவர்கள் முன்நிலையிலேயே முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் செய்யப்பட்டதாக அங்குள்ள ஊர் மக்கள் jaffna muslim இணையத்திடம் வேதனை தெரிவித்தனர்.

உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் சம்பவ இடத்தில் காணப்படுகின்ற போதிலும், முஸ்லிம்களைத்தான் வீடுகளுக்கு செல்லுமாறு பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்துகின்றனரே தவிர, வன்முறை நிகழ்த்தக்கூடிய நிலையில் காணப்படும் பௌத்த கிறிஸ்த்தவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கவோ அல்லது அவர்களை கைது செய்யவோ, எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

முஸ்லிம் பகுதியான பலகத்துறைக்கு செல்லும், அத்தனை வழிகளும் அடைக்கப்பட்டு, முஸ்லிம்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது போன்ற ஒரு நிலை, பலகத்துறையில் தோன்றியுள்ளதாகவும் அங்குள்ள இளைஞர்கள் jaffna muslim இணையத்திடம் மேலும் சுட்டிக்காட்டினர்.



4 comments:

  1. இன்றைய முறுகல் நிலை சில அறிக்கைகளால் தூண்டபட்டது என குற்றம் சாட்டுகிறேன். நாளை குடுவெடிக்கலாம் பாலங்கள் தகர்க்கபடலாம் என்பதுபோன்ற சிங்களவரை அச்சுறுத்தி முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிடக்கூடிய பொப்றுபற்ற சேதிகள் காலை வெளிவந்தபோதே முறுகல் எதிர்பார்த்ததுதான். புலன் ஆய்வு தகவல்கள் என்கிறபெரில் வெளிவரும் சிங்கள மக்களை அச்சுறுத்தும் கருத்துகளை அவசரகால சட்டத்தின்கீழ் தடை செய்ய வேண்டும். அவசரகாலச் சட்டம் தணிக்கை விதிகளை அமூலாக்குவதனூடாக முஸ்லிம் மக்களையும் பாதுகாக்கவும் வேண்டும்.

    ReplyDelete
  2. அவசர கால நிலை முழுமையாக இன்னும் முழுமையாக அமுல் படுத்தவில்லை போல்தான் உள்ளது இல்லாவிட்டால் அவசர கால நிலையின் போது இப்படியான சம்பவங்கள் எவ்வாறு இடம்பெற முடியும்.

    ReplyDelete
  3. அவசர காலச் சட்டம், ஊரடங்கு சட்டம் எல்லாம் முஸ்லீம்களை அடக்கி ஆளுவதற்கே தவிர அடாவடிகளுக்கு இல்லை என்பதற்கு இது ஒரு சான்று.

    ReplyDelete
  4. ஊரடங்கு என்பது முஸ்லிம் அடங்கு. என்பதுபோலத்தான் இருக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.