May 08, 2019

கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களிடம், பணம் கேட்டு தொல்லை - பாராளுமன்றில் அம்பலப்படுத்தினார் டக்ளஸ்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முஸ்லிமகளிடமிருந்து சிறைகளிலுள்ள கைதிகள் தொடக்கம் காவலர்கள் முதற்கொண்டு அதிகாரிகள் வரையில் பணம் கோரி தொல்லை கொடுப்பதாக தெரியவந்துள்ளதாக ஈ.பி.டி.பி செயலாளர் நாயகமும் ,எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா இன்று -08- பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார் .

அவர் தனது உரையில் மேலும் கூறியதாவது ,

பயங்கரவாத செயற்பாடுகளை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற எத்தகைய
நடவடிக்கையும், இனங்களுக்கிடையில் வெறுப்பபுணர்வுகளையோ, குரோத
மனப்பான்மையினையோ, சந்தேகங்களையோ, அச்சத்தையோ ஏற்படுத்தக் கூடாது என்பதுடன்,
குறிப்பிட்ட எந்தவொரு இனம் சார்ந்த மக்களினதும் உணர்வுகள்
புண்படுத்தப்படக்கூடாது என்பதையே நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அண்மையில் நீர்கொழும்பு பகுதியில் ஏற்பட்டிருந்த அசம்பாவித சம்பவமானது,
மதுபோதையில் ஏற்பட்டதொரு சிறு சர்ச்சையானது, மோதல் நிலைக்கு உருவெடுத்தது எனக்
கூறப்பட்டாலும், இத்தகைய சிறு சர்ச்சைகள் பாரிய மோதலாக சமூகத்தில் உருவெடுப்பது
என்பது சாதாரண விடயமாகும் என்கின்ற போதிலும், தற்போதைய நிலையில் அத்தகைய
நிலைமைகள் இரு இனங்களிடையே ஏற்படுவதென்பது பாரதூரமான விடயமாகவே கருதப்படல்
வேண்டும். தற்கொலைத் தாக்குதல்கள் ஏற்பட்ட கையுடன், இனங்கள் மத்தியில் இத்தகைய குரோதநிலைப்பாடுகள் தோற்றம் பெறாதிருக்கக்கூடிய வகையிலான முன்னேற்பாடுகள்
அவசியமாக்கப்பட்டது. அத்துடன், சோதனை நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில்
ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், இத்தகைய முன்னேற்பாடுகள் இன்னும் மிக, மிக
அவசியமாகத் தேவைப்பட்டது.

இந்தத் தேவைப்பாடானது முழுமையாகாத பட்சத்திலேயே இனக்
குரோத நிலைப்பாடுகள் கலையாதிருப்பதற்கு – அல்லது வளர்வதற்கு காரணமாகின்றன.
சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளவர்களில் சுமார் 130 – 140 பேர் வரையில்
நாட்டுக்குள் இருக்கலாம் என்றேஅரசத் தலைவரால் கூறப்பட்டு வருகின்ற போதிலும், அத் தொகையினை மீறிய வகையில்இன்று பலர் கைதாகியிருப்பதாகத் தெரிய வருகின்றது. இன்னும் தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இத்தகைய மத அடிப்படைவாதிகள் தொடர்பில் ஏற்கனவே பலமுறை முஸ்லிம் மக்கள் தரப்பில்
பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவே அம் மக்கள் தரப்பில் கூறப்பட்டு
வருகின்றது. அப்போதே இது தொடர்பில் அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் பல
அப்பாவிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும் என நான் நினைக்கின்றேன்.
அப்போது அதனைக் கைவிட்டு விட்டு, தற்போது பல உயிர்கள் பலியானதன் பின்னர்,
சோதனைகள் என்ற பெயரில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதை நான்
மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

குறிப்பாக, தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுகின்ற
மக்களிடமிருந்து சிறைகளிலுள்ள கைதிகளிலிருந்து, காவலர்கள் முதற்கொண்டு
அதிகாரிகள் வரையில் பணம் கோரி நச்சரித்து வருவதாகவும், அவர்களது
அச்சுறுத்தல்கள் தாங்காத நிலையில், பலர் பணம் கொடுத்து
வருவதாகவும் பலரும் முறையிட்டு வருகின்றனர்.
இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து பார்த்து, அதனை உடனடியாக
நிறுத்துவதற்கான நடவடிக்கையினை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்
கொள்கின்றேன்.

மேலும், நாளாந்தம் நடத்தப்பட்டுவருகின்ற சோதனைகளின்போது – தேடுதல்களின்போது
கிடைக்கின்ற அனைத்துப் பொருட்கள் தொடர்பான விபரங்களும், சந்தேகத்தின் பேரில்
கைது செய்யப்படுகின்ற நபர்கள் குறித்த விபரங்களும் உடனுக்குடன் ஊடகங்களில்
வெளிப்படுத்தப்பட்டுவருகின்றன. இந்தச் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்ற விதமானது, முஸ்லிம் சமூகம் தொடர்பில் ஓர் அச்சநிலையினை ஏனைய சமூகங்கள் மத்தியில் ஏற்படுத்தப்படுவதாகவும்ஒரு தோற்றப்பாடு தென்படுகின்றது.

மேற்படி தற்கொலைத் தாக்குதல்கள் சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவை என அரச
தலைவர் உள்ளிட்ட ஆளுங்கட்சியினரும், எதிரணியினரும், பல்வேறு மதத் தலைவர்கள்,
அரசியல் விமர்சகர்களும் வெளிப்படையாகவே கூறி வருகின்ற நிலையில், இந்த
நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களில் ஒரு சிறு தரப்பினர் – அதுவும் இந்த நாட்டின் ஏனைய அனைத்து முஸ்லிம் மக்களின் புறக்கணிப்பிற்குஉட்பட்டுள்ள ஒரு சிறு தரப்பினர் அத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருந்தார்களே அன்றி, இந்நாட்டு அனைத்து முஸ்லிம் மக்களும் அதனுடன் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்றே அனைத்து தரப்பின் குரல்களும் எடுத்துக் காட்டி வருகின்றன.
அந்தவகையில், நாடளாவிய ரீதியில் தேடுதல் – சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற
நிலையில், அதனை மேலும் மனிதாபிமான முகத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்பதையே
இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

அடுத்ததாக முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணிகின்ற ஆடைகள் தவிர்க்கப்படல்
வேண்டும் எனக் கூறப்படுகின்ற – தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், அப் பெண்கள் தலையை
மூடிச் செல்;கின்றபோது, பல்வேறு அரச நிறுவனங்களில் பல்வேறு சிரமங்களுக்கும்,
அசௌகரியங்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலமாக அப் பெண்கள்
அவமரியாதைக்கு ஆளாக்கப்பட்டு வருவதாகவும் பல முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.
எனவே, இத்தகைய உணர்வு ரீதியிலான செயற்பாடுகள் உடனடியாக
இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
குறிப்பாக, இத்தகையதொரு தடையை கொண்டு வருவதற்கு முன்பதாக முஸ்லிம் மதம் சார்ந்த
அமைப்புகளினதும் உடன்பாட்டுடன் அதனைக் கொண்டு வந்திருக்க வேண்டும். என்றாலும்,
கொண்டு வரப்பட்டுவிட்டது. அவ்வாறு கொண்டுவரப்பட்டதன் பின்னர், அது தொடர்பில்
அரசு ஒரு அறிவித்தலை விடுத்துவிட்டால், முஸ்லிம் மக்கள் அதனைப்
பின்பற்றுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இத்தகைய நிலையில், நிறுவனத்திற்கு நிறுவனம், இடத்திற்கு இடம் ‘முக்தை மூடி
ஆடைகள் அணிவோர் உட்பிரவேசிக்கக் கூடாது’ என அறிவிப்புப் பலகைகள்
தொங்கவிடப்பட்டு, அந்த மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது மட்டுமல்லாது,
அவர்களை ஒருவிதமான அவல நிலைக்குத் தள்ளுகின்றதும், ஏனைய இன சமூக மக்களின்
முன்பாக அவர்களை ஒதுக்கிக் காட்டுவதுமான செயற்பாடுகள் வரவேற்கத்தக்கதல்ல
என்பதையும் நான் இங்கு எடுத்துக் கூற விரும்புகின்றேன்.
ஒரு கையிலே தேசிய நல்லிணக்கத்தையம், மறு கையிலே தேசிய நல்லிணக்கத்தை
சிதைக்கின்ற வகையிலான
ஏற்பாடுகளையும் சுமந்துகொண்டு பயணிப்பீர்களாயின் அதனால் எவருக்கும் எவ்விதமான
நன்மைகளும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.
எனவே, தேசிய நல்லிணக்கத்தை இரு கைகளாலும் பற்றிப் பிடித்துக் கொண்டு,
முன்னேறுவார்களாயின் அதுவே, இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும்
நன்மையினைத் தரக்கூடியதாக இருக்கும்.
இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் தௌஹீத் கொள்கை அடிப்படையில் இயங்கும் பல
அமைப்புக்கள் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடாமலும் அல்லது
தூண்டாமலும் வெறுமனே சமய சார்பானதாகவும் சமூகநலன் நடவடிக்கைகளிலும் ஜனநாயக
வழிமுறைகளில் செயற்பட்டு வருகின்றன. தௌஹீத் கொள்கையில் அடிப்படையில் நமது மத
அனுஸ்டானங்களையும் சமூகக் கடமைகளையும் கடைப்பிடித்து வாழும் பெரும்பாலான
முஸ்லிம்கள் இந்த நாட்டில் இருக்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள்
அல்ல. அல்லது ஆயுதக் கலாசாரத்தை முஸ்லிம்கள் மத்தியில் பரப்புபவர்கள் அல்ல.
எனவே உண்மையான தௌஹீத் வாதியையும் இஸ்லாமிய பயங்கரவாதியையும் வேறுபடுத்தி
அடையாளங்கண்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள
வேண்டும் என்பதனையும் நான் இந்த சபையில் பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்டுக்கொள்ள
விரும்புகின்றேன்.
முஸ்லிம் மக்களில் ஒரு குறிப்பிட்ட சிறு தரப்பினரே இத்தகைய பயங்கரவாதச்
செயல்களில் ஈடுபட்டவர்கள் என இனங்காணுகின்ற நீங்கள், ஏனைய முஸ்லிம் மக்களையும்
அந்த பயங்கரவாதத்தின்பால் தள்ளிவிடாமல், உங்களது அனைத்து நடவடிக்கைகளும்
முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையே இங்கு நான் மீண்டும், மீண்டும்
வலியுறுத்துகின்றேன்.
தற்போது நோன்பு ஆரம்பத்திருக்கின்ற நிலையில், முஸ்லிம் மக்களது மத
உணர்வுகளையும் மதித்து, செயற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும்
என்பதையும் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் பொலிசாரால் பல முஸ்லிம்
இளைஞர்களும் கல்விமான்களும் மதகுருமாரும் கைதி செய்யப்பட்டு தற்போது
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் நீதிமன்ற தடுப்புக் காவலிலும், பாதுகாப்புச்
செயலாளரின் தடுத்தல் கட்டளையின்கீழும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும்
அவர்களில் பெரும்பாலானோர் எந்தக் குற்றமும் இளைத்தவர்கள் அல்ல என்றும் அவர்களிடமிருந்து ஆயுதங்களோ வெடிபொருட்களோ கைப்பற்றப்பட்டிருக்கவில்லையென்றும்  வீதியோரங்களில் அல்லது கடைகளில் விற்பனை செய்யப்படும்
வாக்கிடோக்கிகளை வைத்திருந்ததாகவும் சில இஸ்லாமிய சஞ்சிகைகளை அல்லது
புத்தகங்களை வைத்திருந்ததாகவும் தற்பொழுது இவர்கள் பயங்கரவாதத் தடைச்
சட்டத்தின்கீழ் கையாளப்படுவதாகவும் எனக்கு முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன.

இவ்வாறான எந்தக் குற்றமும் செய்யாத அல்லது சட்டத்தால் தடை செய்யப்படாத
பொருட்களை வைத்திருந்தவர்களாக கைதி செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள சகல
முஸ்லிம்கள் சார்பாகவும் பாதுகாப்பு அமைச்சும் அதன் உயர் அதிகாரிகளும்
உடனடியாகக் கவனம் செலுத்தி இத்தகைய அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்வதை
விரைவுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நான் இச்சபையில்
வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

இவ்வாறான எந்தக் குற்றமும் செய்யாத அல்லது சட்டத்தால் தடை செய்யப்படாத
பொருட்களைவைத்திருந்தவர்களாக கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து
முஸ்லிம் மக்கள் சார்பாகவும் பாதுகாப்பு அமைச்சும், அதன் உயரதிகாரிகளும் உடனடி
கவனம் செலுத்தி, அப்பாவி மக்களை விடுதலை செய்வதை விரைவுபடுத் நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

12 கருத்துரைகள்:

நேர்மையான பக்கச்சார்பற்ற நேர்த்தியான கருத்துக்கள். நன்றி

தற்கொலை குண்டுதாரிரிகள் பாவித்தவை அதிசக்தி வாய்ந்த கண்டுகள் என அரசே கூறிக் கொண்டு அடுப்படிச் சாமான்களையும் பயங்கர ஆயுதங்களாக காட்டுவது தேடலினை மலினப்படுத்துகிறது.

நன்றி டக்ளஸ் தேவானந்தா

உண்மையில் உங்கள் கருத்தை மதிக்கின்றேன் ஜயா....

விரைவில் அப்பாவி முஸ்லிம்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அதற்குரிய நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துகொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள் தலையிட்டு இந்த அப்பாவி மக்களை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்

விரைவில் அப்பாவி முஸ்லிம்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அதற்குரிய நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துகொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள் தலையிட்டு இந்த அப்பாவி மக்களை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்

தற்கொலைதாரிகளின் குண்டை விட பயங்கரமான குண்டை இன்று முஸ்லிம் சமூகம் மீது மற்றைய சமூகங்களால் போடப் பட்டிருக்கின்ற உங்களின் இந்த வார்த்தைகள் மிகவும் ஆறுதல் தருவதாக உள்ளது. நன்றி.

Thanks a lot, timely speech Hon.Douglas MP...

ஐயாஉண்மையை உரக்க சொன்னீர். உமது நல் உள்ளத்துக்கு நீங்கள் நலமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிறார்த்திக்கின்றேன்.

Valuable speech.Thank you very much Sir.

I shalute u sir....
Good timing ur excellent speech ...
Unarwuhalai puriyaatha waray thappahawe thonum ....
Arasu paartha onru nadantheriyathu...

I shalute u sir....
Good timing ur excellent speech ...
Unarwuhalai puriyaatha waray thappahawe thonum ....
Arasu paartha onru nadantheriyathu...

Post a Comment