Header Ads



குவைத் வாழ் இலங்கை முஸ்லிம்கள், முஸ்லிமல்லாத அமைப்புக்களுக்கு நடத்திய ஒரு இப்தார் நிகழ்வு


The Society of All Sri Lankans in Kuwait (SLK) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்ச்சி குவைத்தின், சல்மியா நகரத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் குவைத்தில் இயங்கும் முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத அனைத்து அமைப்புக்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். இதில் விசேட அதிதிகளாக இலங்கைக்கான குவைத் தூதுவர் மேன்மைதகு காண்டீபன் பாலசுப்ரமணியம் அவர்களும் மற்றும்  குவைத் சிட்டியில் அமைந்துள்ள புனித கிறிஸ்தவ தேவாலயத்தின் பிதா  ஐவன் அந்தொனி பெரேரா அவர்களும் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர். இனங்களுக்கு இடையிலான பரஸ்பர உறவை வளர்த்து கொள்ளவும் , தவறான புரிதல்களிலிருந்து விலகி கொள்ளவும் ஒரு பாலமாக இந்த இப்தார் நிகழ்ச்சியினை SLK அமைப்பினர் வருடா வருடம் நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் , இலங்கைக்கான தூதுவர் தனது உரையில் , இலங்கையில் நடந்து வரும் விடயங்கள் மிகவும் கவலை தருவதாகவும் , அனைவரும் இன மத வேறுபாடின்றி இலங்கையர்கள் என்ற அடிப்படையில் நாட்டை எந்த வொரு களங்கங்களிருந்தும் காப்பாற்ற முன் வர வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் பிதா  ஐவன் அந்தொனி பெரேரா அவர்களின் உரையில் , நாட்டில் சமாதானம் நிலவ அவராலான அனைத்து முயற்சிகளையும் செய்யவுள்ளதாகவும் அதன் முதல் படியாக அனைத்து மத முக்கிய உறுப்பினர்களையும் ஒன்று சேர்த்து ஒரு கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தவுள்ளதாகவும் , முஸ்லிம் பிரதிநிதிகள் சார்பாக அழைப்பிதழை, அவ்விடத்தில் SLK யின் பிரதி தலைவர் அஸ் செய்க். பைசல் அவர்களிடம் கையளித்தார்.

மேலும் அஸ் செய்க். பைசல் அவர்கள் தனது உரையில் , அல்லாஹ் ஒரு முஸ்லிமிடம் நோன்பின் மூலம் எதிர்பார்க்கின்ற விடயத்தினையும் மேலும் நோன்பின் மகத்துவத்தையும் பற்றி தெளிவாக விளக்கினார்.

சமூகமளித்த சிலருக்கும் அவர்களின் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பும் வழங்க பட்டது. மேலும் இந்த நிகழ்வில் IIC அமைப்பின் தலைவர் அஸ் செய்க் மன்சூர் அவர்களும் மேலும் சிரேஷ்ட SLK யின் உறுப்பினர்களான பட்டய கணக்காளர் சஜாத் , வைத்தியர் நவ்ராஸ் , சகோ ஹனிப் , அஸ் செய்க். நளீம், சகோ பைசல், சகோ ரிஹான் மற்றும் சகோ உசாமா அவர்களும் இந்த நிகழ்ச்சி நிரலை ஒழுங்கு செய்வதில் முக்கிய பங்கை வகுத்தார்கள் என்பது குறிப்படத்தக்கது.


No comments

Powered by Blogger.