May 30, 2019

ஞானசாரர் தம்மீது சுமத்திய குற்ற்சசாட்டுக்களை, அடியோடு நிராகரிக்கிறார் அப்துர் ரஹ்மான்


(அஷ்ரப் ஏ சமத்)

பொதுபலசேனா தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரோ தம்மீது சுமத்தியுள்ள குற்ற்சசாட்டுக்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் பொறியியலாளர் அப்துல் ரஹ்மான் முற்றாக நிராகரித்துள்ளார்.

தற்கொலை குண்டுதாரியான தேசிய தௌஹீத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரானுக்கும் தனக்கும் எந்தவிதமான நேரடித் தொடர்பும் கிடையாதெனவும்  தனக்கெதிராக பொதுபலசேனா உட்பட சில இனவாதச் சக்திகள் தவறான குற்றச் சாட்டுகளை சுமத்தி தன்னை அவமதித்து வருவதாகவும் பொறியியலாளர் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் மென்டேரியன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடக மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் -
2015ஆம் ஆண்டு எமது கட்சி பதியப்பட முன்னர் திருமலையிலும்; மட்டக்களப்பிலும்;  முஸ்லிம் காங்கிரஸூடன் இணைந்து  தேர்தலில் போட்டியிட்டது. அப்போது  தேர்தலில் போட்டியிடும்;   ஹிஸ்புல்லாஹ்,  சிப்லி பாருக்  உட்பட மாவட்டத்தின் சகல முஸ்லிம் வேட்பாளாகளையும்    சஹ்ரான் தனது அலுவலகத்துக்கு  அழைத்து தேர்தலில் எவ்வித குழப்பங்களுமின்றி சமாதானமாக நடைபெறுவதறகு ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறி அவரால் தயாரிக்க்பட்டதொரு  துண்டுப்பிரசுரம் ஒன்றையும் என்னிடம் கையளித்தார். அத்தருனத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தினை வைத்தே என்னையும் சஹ்ரானையும் சம்பத்தப்படுத்தி  ஞானசார தேரர் தனியார் ஊடகமொன்றின் மூலம்; பொய் பிரச்சாரம் செய்துவருகின்றார்.

எமது கட்சியின் உறுப்பிணர் ஒருவருக்கும் சஹ்ரானுக்கு ஏற்பட்ட தகராரில் சஹ்ரானுக்கு எதிராக  எமது கட்சி மட்டக்களப்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் வழக்கு தாக்கல் ஒன்றினையும் செய்திருந்தோம்.  

நான் இந்த நாட்டில் பல்கழைக்கழகம் செல்லமுடியாத மூவினங்களையும் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்காக  தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றை  20 வருடங்களுக்கு முன் ஆரம்பித்திருக்கின்றேன்;. அந் நிறுவனத்தில் ; இதுவரை 2500க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை பொறியியல்துறை என பல்வேறு துறைகளில் சர்வதேச தரத்திலான பட்டப்படிப்புககளில் எமது பிகாஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. ;இவர்கள் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளில்  தொழில் செய்து வருகின்றனர். 

கடந்த காலங்களில் எமது நாட்டின் இளைஞர்கள் க.பொ. த. உயர்தரம் வறை கற்றுவிட்டு கூழித் தொலிலாளிகளாகவும் சாரதிகளாகவுமே மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றார்கள்;. தற்பொழுது அந் நிலை மாறியுள்ளது.  இந்த உயர் கல்வி நிறுவனத்தில்    முகாமைத்துவ தலைவராக நான் இருந்தாலும்    நிறுவனத்தினை இயக்குபவர்  கொழும்பு பல்கழைக்கழகத்தின்  உபவோந்தராகவும் பல்கழைகக்கழக ஆணைக்குழுவின் தலைவராகவும் பதவி வகித்த   பேராசிரியை சானிக்கா கிம்புரேகமுவ மற்றும் சில புத்திஜீவிகளைக்  கொண்டும் இயங்குகிறது. இந்த கல்விக்குழாம் மூலம் உருவாக்கப்பட்ட இளைஞர் யுவதிகள்; வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு உழைத்து நல்ல சம்பளத்தினை பெற்று இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பினைச் செய்கின்றனர். அவர்கள் அங்கு தொழில் செய்வதுமட்டுமன்றி  அண்னியச் செலவாணியை இங்கு  அனுப்புகின்றனர். ஆனால் ஞானசார தேரர் இவ் இளைஞர்களை ஆயுதப்பயிற்சிக்கு அனுப்பவதாக பொய்யான தகவல்களை வழங்கியுள்ளார். அவரது இவ்வாறான கூற்றினை நாம் வன்மையாக கண்டிபபதோடு மறுக்கின்றேன். 

 எனது கட்சி உறுப்பிணர் ஒருவர் கட்டார் நாட்டில் எங்களது பங்குகளுடன் இலங்கை உணவகமொன்றை  ஆரம்பித்துள்ளார் அதனை ஞானசாரதேரர்  5 நட்சித்திர ஹோட்டல் ஒன்றை நடத்துவதாகச் சொல்லுகின்றார். அத்துடன் 28.08.2007ஆம் ஆண்டில் ஏசியன் ரிபியுட் என்ற வெப்தளச் செய்தியில் அப்துல் ரஹ்மான் வஹாபிசம் என்ற செய்தியையே தேரர் ஊடகங்களில் காட்டினார் ஆனால் அந்தச் செய்தி 12 வருடங்களுக்கு முன் வந்தது. அச் செய்திக்கு என்னால் அனுப்பட்ட மறுப்புச் செய்தியை அவர் பார்க்கவில்லை. இதனை வைத்தே சஹ்ரானை நாம் வெளிநாட்டுக்கு அனுப்பியதாகவும் பொய்யான வேண்டுமென்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தாhர். எமது பதியப்பட்ட அரசியல் கட்சியான நல்லாட்சிக்கான கட்சியை ஒழிப்பதற்கு   அரசியல் பின்னணியில் அவர் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாகவும்  பொறியியலாளர் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.    

3 கருத்துரைகள்:

Take legal action against Gnanasara monk.

Why do not you file a case against him????

We strongly condemn the unfounded propaganda against BCAS Institution while expressing our utmost solidarity with the Institution that has been dedicated over the past two decades to provide world-class higher education opportunities to thousands of local students of different standards, faiths and cultures with the supreme aim of transforming lives through building excellent careers. BECAS is an Institution that enjoys muti-ethnic and multi-cultural society within the institution and that truly respects the country's ethnic and cutural diversity. In this background, we call upon everyone to join hand with us to repulse the fabricated and baseless charges recently levelled against the Institution and its Leadership and ensure that the Institution continues serving the younger generation in their higher education needs. The elements that are motivating some other evel elements to vandalize a most beautiful, most required Institution like BCAS should be identified and delt with.

Post a comment