Header Ads



என்னை சிறையிலடைத்தது போன்று, முஸ்லிம்கள் சகலரையும் பயங்­க­ர­வா­தத்­திற்குள் தள்ளி விடா­தீர்கள் - ஜனா­தி­பதி

முஸ்லிம் மக்கள் அனை­வ­ரையும் பயங்­க­ர­வா­தத்­திற்குள் தள்ளி விடா­தீர்கள் என்று இத்­த­கை­ய­வர்­களைப் பார்த்து நான் கேட்டுக் கொள்­கின்றேன். நாட்­டிற்குத் தேசிய நல்­லி­ணக்கம் அவ­சி­ய­மாகும். இந்தப் பகு­தியில் பயங்­க­ர­வா­தி­க­ளில்லை என படை வீரர்­களும், புல­னாய்வுப் பிரி­வி­னரும் தெரி­வித்­துள்­ளார்கள். எந்தக் குற்­றத்­தோடும் தொடர்­பில்­லா­த­வர்­களை பயங்­க­ர­வா­திகள் என்று கைது செய்து விடா­தீர்கள் என்று கேட்டுக் கொள்­கின்றேன். அதே வேளை, பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களே கைது செய்­யப்­பட்­டுள்­ளார்கள். குற்றம் செய்­த­வர்­களே தண்­டனை பெற வேண்டும். குற்றம் செய்­யா­த­வர்கள் தண்­ட­னையை அனு­ப­விக்க முடி­யாது. குற்றம் செய்­யா­த­வர்கள் கைது செய்­யப்­பட்டால் சாதா­ரண முஸ்­லிம்­களின் மனம் புண்­படும். அந்த வேத­னையை வாயால் பேச முடி­யாது. நாம் முஸ்­லிம்­களின் மனங்­களை வெல்ல வேண்டும். பயங்­க­ர­வா­திகள் யார் என்று அடை­யாளம் காண வேண்டும்.

இவ்­வாறு நேற்று சாய்ந்­த­ம­ருது லீமெ­ரி­டே­ரியன் மண்­ட­பத்தில் நடை­பெற்ற இளை­ஞர்­க­ளு­ட­னான சந்­திப்பின் பின்னர் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்,

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடை­பெற்ற சம்­ப­வத்தை தொடர்ந்து 26ஆம் திகதி இங்கு நடை­பெற்ற சம்­ப­வத்தின் பின்னர் உங்­களை சந்­திக்க வேண்­டு­மென்­ப­தற்­காக இங்கு வருகை தந்­துள்ளேன். விடு­தலைப் புலி­களின் பயங்­க­ர­வா­தத்­தினால் 30 வரு­டங்கள் கஷ்­டப்­பட்டோம். பல்­லா­யிரம் உயிர்­களை இழந்தோம். பொரு­ளா­தா­ரத்தில் பாரிய பிரச்­சி­னை­களை எதிர்­கொண்டோம். யுத்­த­கா­லத்தில் புலி­க­ளினால்  ஐந்து முறை இலக்கு வைக்­கப்­பட்டு தப்­பி­யுள்ளேன். அந்த இலக்­கு­களில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களில் சிலர் கைது செய்­யப்­பட்­டார்கள். சிலர் தற்­கொலை செய்து கொண்­டார்கள். என்னைக் கொலை செய்­வ­தற்கு முயற்­சி­களை எடுத்­த­வ­ருக்கு ஆயுள் தண்­டனை வழங்­கப்­பட்­டது. அவரை நான் மன்­னித்து விடு­தலை செய்தேன்.

பயங்­க­ர­வாதம் என்­பது நல்­ல­தொரு விட­ய­மல்ல. நாட்டு மக்­க­ளுக்கு சுதந்­தி­ரமும், ஜன­நா­ய­கமும் தேவை. அப்­போ­துதான் நிம்­ம­தி­யாக வாழலாம்.  பயங்­க­ர­வாதம் இவை­களை இல்­லாமல் செய்யும் ஒன்­றாக இருக்­கின்­றது. வாலி­பர்கள் சுதந்­தி­ரத்­தையும், நிம்­ம­தி­யை­யுமே விரும்­பு­கின்­றார்கள். இங்கு சமுகம் தந்­துள்ள அனைத்து இளை­ஞர்­க­ளையும் எனது பிள்­ளை­களைப் போலவே எண்­ணு­கின்றேன். உங்­களைப் போலவே எனக்கும் பிள்­ளைகள் இருக்­கின்­றார்கள். ஆதலால், இளை­ஞர்­க­ளா­கிய நீங்கள் தவ­றான வழி­களில் செல்­வ­தனை நான் விரும்­ப­வில்லை.

சில ஊட­கங்கள் முஸ்­லிம்­களை பயங்­க­ர­வா­திகள் என்று காட்டிக் கொண்­டி­ருப்­ப­தாகத் தெரி­வித்­தீர்கள். அதைப் பற்­றியே பேச வேண்டும். சிங்­க­ள­வர்கள், தமி­ழர்கள் யாரும் முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் பயங்­க­ர­வா­திகள் என்று பார்க்க வேண்­டா­மென்று பல இடங்­களில் சொல்லிக் கொண்டு வரு­கின்றேன். விடு­தலைப் புலிகள் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட போது அவர்­க­ளோடு ஒரு சிறு குழுவே இருந்­தது. ஆனால், தமி­ழர்­களை அனை­வ­ரையும் பயங்­க­ர­வா­தி­க­ளாக கருதிச் செயற்­பட்­ட­த­னால்தான் விடு­தலைப் புலி­க­ளோடு தமி­ழர்கள் பலரும் இணைந்து கொண்­டார்கள். 1983ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜூலை கல­வ­ரத்தின் போது தமி­ழர்­களின்  வீடுகள், வியா­பாரம் போன்­ற­வற்றை இலக்கு வைத்து தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அத­னால்தான் தமி­ழர்­களும் விடு­தலைப் புலி­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கி­னார்கள். ஆயினும் தமி­ழர்கள் அனை­வரும் பயங்­க­ர­வா­தி­க­ளல்லர். புலி­களின் பயங்­க­ர­வா­தத்தை அழிப்­ப­தற்கு இந்­தி­யா­வி­லி­ருந்து ஒரு இலட்சம் படை­யினர் வருகை தந்­தார்கள். ஆனால், முடி­ய­வில்லை. இறு­தியில் எமது நாட்டுப் படை­யி­னரே புலி­களை அழித்­தார்கள்.

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மற்றும் 26ஆம் திக­தி­களில் நடை­பெற்ற சம்­ப­வங்­களில் ஒரு சிறு குழு­வி­னரே சம்­பந்­தப்­பட்­டி­ருந்­தார்கள். அவர்கள் சுமார் 150இற்கும் குறை­வா­ன­வர்கள். இவர்­களைத் தவிர முஸ்­லிம்கள் யாரும் பயங்­க­ர­வா­தி­க­ளல்லர். இதனைப் புரிந்­து­கொள்­ளாத சில ஊட­கங்­களும், அர­சி­யல்­வா­தி­களும் செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தனை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

ஆதலால்,  முஸ்லிம் மக்கள் அனை­வ­ரையும் பயங்­க­ர­வா­தத்­திற்குள் தள்ளி விடா­தீர்கள் என்று இத்­த­கை­ய­வர்­களைப் பார்த்து நான் கேட்டுக் கொள்­கின்றேன். நாட்­டிற்கு தேசிய நல்­லி­ணக்கம் அவ­சி­ய­மாகும். இந்தப் பகு­தியில் பயங்­க­ர­வா­தி­க­ளில்லை என படை வீரர்­களும், புல­னாய்வுப் பிரி­வி­னரும் தெரி­வித்­துள்­ளார்கள்.

எந்தக் குற்­றத்­தோடும் தொடர்­பில்­லா­த­வர்­களை பயங்­க­ர­வா­திகள் என்று கைது செய்து விடா­தீர்கள் என்று கேட்டுக் கொள்­கின்றேன். அதே­வேளை, பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களே கைது செய்­யப்­பட்­டுள்­ளார்கள். குற்றம் செய்­த­வர்­களே தண்­டனை பெற­வேண்டும். குற்றம் செய்­யா­த­வர்கள் தண்­ட­னையை அனு­ப­விக்க முடி­யாது. குற்றம் செய்­யா­த­வர்கள் கைது செய்­யப்­பட்டால் சாதா­ரண முஸ்­லிம்­களின் மனம் புண்­படும். அந்த வேத­னையை வாயால் பேச முடி­யாது. நாம் முஸ்­லிம்­களின் மனங்­களை வெல்ல வேண்டும். பயங்­க­ர­வா­திகள் யார் என்று அடை­யாளங் காண வேண்டும். இதற்கு உங்­களின் ஒத்­து­ழைப்பு வேண்டும். பயங்­க­ர­வா­திகள் பற்­றிய தக­வல்­களை பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு வழங்­குங்கள். அது நீங்கள் நாட்­டிற்கு செய்யும் உயர்ந்த காரி­ய­மாகும்.

1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான் உயர்­தரப் பரீட்சை எழு­து­வ­தற்கு இருந்தேன். அப்­போது சேகு­வேரா கிளர்ச்சி ஏற்­பட்­டது. நான் பாட­சாலைக் காலத்தில் பல சேட்­டை­களை செய்வேன். பாட­சா­லையில் மாண­வர்­களைக் கொண்டு ஒரு சங்கம் அமைத்தேன். அதனை பாட­சா­லையின் அதிபர் விரும்­ப­வில்லை. இதனால், அதி­ப­ருக்கும், எனக்­கு­மி­டையே பிரச்­சினை ஏற்­பட்­டது. பொலன்­ன­றுவை ரோயல் கல்­லூ­ரியின் அதிபர் என்னை பயங்­க­ர­வாதி என்று பொலி­ஸா­ருக்கு தக­வல்­களைக் கொடுத்தார். ஆனால், நான் ஜே.வி.பியின் எந்த வகுப்­புக்­க­ளிலும் பங்­கு­பற்­ற­வில்லை. பொலிஸார் என்னைக் கைது செய்து துன்­பு­றுத்­தி­னார்கள். இருட்­ட­றையில் போட்­டார்கள். என்­னோடு 06 பேர் அந்த அறையில் இருந்­தார்கள். எதற்­காக என்னை இவ்­வாறு இருட்­ட­றையில் அடைத்­துள்­ளீர்கள் என்று கேட்­ட­தற்கு வேறு அறை­க­ளில்லை என்று பொலிஸார் தெரி­வித்­தார்கள். இவ்­வாறு 03 மாதங்கள் இருட்­ட­றையில் அடைத்­தார்கள். மட்­டக்­க­ளப்பு சிறை­யிலும் அடைக்­கப்­பட்டேன். சிறையில் இருக்­கும்­போது படித்துக் கொண்­டி­ருந்தேன். அம்­பாறை உகன மகா­வித்­தி­யா­ல­யத்தில் உயர்­தரப் பரீட்சை எழு­து­வ­தற்­காக கைவி­லங்­குடன் கொண்டு செல்­லப்­பட்டேன். என்­னோடு இன்னும் சிலர் வந்­தி­ருந்­தார்கள். பரீட்சை எழு­து­வ­தற்­காக கைவி­லங்கை கழற்­றி­னார்கள். கையில் போடப்­பட்ட விலங்கால் கையில் புண் ஏற்­பட்­டி­ருந்­தது. எந்தக் குற்­றமும் செய்­யாத எனக்கு ஏன் தண்­டனை என்று கண்ணீர் வடித்தேன். அந்தக் கண்ணீர் விடைத்­தாளில் விழுந்­தது. அத்­தோடு கையில் இருந்த புண்­ணிலிருந்து இரத்தம் வடிந்­தது. அந்த இரத்­தமும் விடைத்­தாளில் பட்­டது.

பரீட்சை முடிந்­த­வுடன் என்னை பொலன்­ன­று­வை­யி­லுள்ள சுடு­காட்­டிற்கு அழைத்துச் சென்­றார்கள். என்னை முழங்­காலில் நிற்க வைத்­தார்கள். அவர்கள் என்னை சுடப் போகின்­றார்கள் என்று நினைத்தேன். பின்னர் என்னை எழும்­பு­மாறு பணித்­தார்கள். அன்று நான் சுடப்­பட்­டி­ருந்தால் ஒரு ஜனா­தி­ப­தியே சுடப்­பட்­டி­ருப்பார். எந்தக் குற்­றமும் செய்­யாமல் ஒன்­றரை வரு­டங்கள் சிறையில் தண்­டனை அனு­ப­வித்­துள்ளேன்.

எனது கதையை ஏன் சொல்­லு­கின்றேன் என்றால், இளை­ஞர்­களை யாரும் தவ­றாக நோக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்­கின்றேன். இப்­போ­துள்ள அதி­பர்கள் இவ்­வாறு செய்­ய­மாட்­டார்கள் என்று நம்­பு­கின்றேன். இளை­ஞர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்த வேண்டும். இளை­ஞர்கள் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக செயற்­பட வேண்டும். பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கு அர­சாங்­கத்­திற்கு ஒத்­து­ழைக்க வேண்டும்.

இங்கு கருத்­துக்­களை முன்­வைக்­கும்­போது நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள பயங்­க­ர­வா­தத்­திற்கும் வெளி­நா­டு­க­ளுக்கும் தொடர்­புகள் இருக்­கின்­றதா என்று கேட்­டீர்கள். பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு வெளி­நாட்டுத் தொடர்­புகள் இருக்­கின்­றன. சர்­வ­தேச பயங்­க­ர­வா­தி­க­ளுடன் தொடர்­புகள் இருக்­கின்­றன.

பெண்­களின் முகத்தை மூடும் விட­யத்தில் அர­சியல் தலை­வர்கள், உல­மாக்கள் ஆகி­யோர்­க­ளுடன் கலந்து பேசியே முடி­வு­களை எடுத்­துள்ளோம். அதனை அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழேயே செய்­துள்ளோம். இது விட­யத்தில் ஏற்­ப­டு­கின்ற பிரச்­சி­னை­களை அர­சியல் தலை­வர்கள், உல­மாக்கள் ஆகி­யோர்­க­ளுடன் கலந்து பேசி முடி­வு­களை எடுப்போம்.

போதைப் பொருள் ஒழிப்பு நட­வ­டிக்­கை­களை பலரும் பாராட்டி பேசி­னார்கள். போதைப்­பொருள் வியா­பா­ரத்­திற்கும், சர்­வ­தேச பயங்­க­ர­வா­தத்­திற்கும் தொடர்­புகள் இருக்­கின்­றன. போதைப் பொருள் ஒழிப்பு நட­வ­டிக்­கை­களை ஒரு­போதும் இடை நிறுத்­த­மாட்டேன். வெளி­நா­டு­களில் போதைப்­பொருள் வியா­பா­ரத்தில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­க­ளுக்கும், பயங்­க­ர­வா­தி­க­ளுக்கும் இடையே தொடர்­புகள் இருக்­கின்­றதா என்ற சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது. அது பற்­றியும் விசா­ர­ணைகள் நடை­பெ­று­கின்­றன. எப்­ப­டி­யாக இருந்­தாலும் போதைப் பொருள் வியா­பா­ரத்­தோடு தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்கு நிச்­ச­ய­மாக மரண தண்­டனை நிறை­வேற்­றப்­படும்.

மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழகம் கல்வி அமைச்­சி­னதும், உயர்­கல்வி அமைச்­சி­னதும் மூல­மாக சகல இனத்­த­வர்­க­ளுக்­கு­மு­ரிய தனியார் பல்­கலைக் கழ­க­மாக செயற்­ப­டு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுப்போம். இங்கு எவ்­வா­றான பாடங்கள் கற்­பிக்­கப்­பட இருக்­கின்­ற­தென்ற தெளிவு இல்­லாத நிலையில் பல­வி­த­மாக பேசு­கின்­றார்கள். எவ்­வா­றான பாடங்கள் கற்­பிக்­கப்­ப­டு­கின்­ற­தென்று தெரிய வரும்போது பிரச்சினைகள் இல்லாமல் போகுமென்று நம்புகின்றேன்.

குர்ஆனை தவறாக புரிந்தவர்கள் சோதனை நடவடிக்கைகளின் போது வேறு விதமாக நடந்திருக்கலாம். அது இப்பிரதேசத்தில் நடைபெறவில்லை. வேறு பிரதேசங்களில் நடைபெற்றுள்ளன. ஆயினும், இனிமேல் அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பில்லை. பாடசாலைகளில் மாண­வர்­களின் புத்­தகப் பைகள் சோத­னை­யி­டப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இதனால் பிள்­ளை­களின் வரவு குறைந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது. இவை மாண­வர்­களின் நல­னுக்­கா­கவே செய்­யப்­ப­டு­கின்­றன. இது பற்றி மாண­வர்­க­ளுக்கும், பெற்­றோர்­க­ளுக்கும் பாட­சா­லைகள் விளக்கம் கொடுக்க வேண்டும். நாமும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போம்.

சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளூராட்சி சபை பற்றியும் பேசப்பட்டது. இதனை செய்வதற்கு நானும் விருப்பம் கொண்டுள்ளேன். இது விடயத்தில் உங்களில் தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதனால்தான் இது தாமதமாகியுள்ளது. அதே வேளை, இதனை உள்ளூராட்சி அமைச்சரே வர்த்தமானி மூலமாக அறிவிக்க வேண்டும். ஆதலால், தலைவர்களுடனும், உள்ளூராட்சி அமைச்சருடனும் இதுபற்றி பேசி நடவடிக்கைகளை எடுப்பேன்.
-Vidivelli

No comments

Powered by Blogger.