Header Ads



மஹ்ரம் இல்­லாது சிறைச்­சா­லைக்கு, செல்லவேண்­டிய நிலை ஏற்­ப­டலாம் - சட்­டத்­த­ரணி நதீஹா அப்பாஸ்

முகத்தை மூடி ஆடை­ய­ணி­வது சட்­ட­ரீ­தி­யாகத் தடை செய்­யப்­பட்­டி­ருக்கும் நிலையில் கற்­பிட்­டியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் முகத்தை மறைத்து ஆடை­ய­ணிந்து சென்­ற­போது அவர் கற்­பிட்டி பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார். 17 வயது நிரம்­பிய அந்தப் பெண் கர்ப்­பி­ணி­யாவார்.

தேசிய அடை­யாள அட்டை பெற்றுக் கொள்­வ­தற்கு விண்­ணப்பம் அனுப்­பு­வ­தற்­காக அவர் புகைப்­பட நிலை­யத்­துக்கு புகைப்­படம் எடுத்­துக்­கொள்ள சென்­ற­போது வீதியில் கட­மை­யி­லி­ருந்த பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை கைது செய்­யப்­பட்ட குறிப்­பிட்ட பெண் கற்­பிட்டி பொலி­ஸா­ரினால் புத்­தளம் நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போது புத்­தளம் மேல­திக நீதிவான் அவரை எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை (இன்று) வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார்.

சந்­தேக நபர் தொடர்பில் விசா­ரணை நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அவ­சர கால சட்­டத்தின் கீழ் அடிப்­ப­டை­வாத அமைப்­புடன் தொடர்­புள்­ள­வரா என்­பது தொடர்பில் விசா­ரணை நடை­பெ­று­வ­தா­கவும், முன்னாள் குற்றச் செயல்கள் ஏதும் இவ­ருக்­கெ­தி­ராக இருப்­பதா என்­பது தொடர்பில் அறிக்கை பெற்­றுக்­கொள்­ள­வி­ருப்­ப­தா­கவும் பொலிஸார் நீதி­மன்றில் தெரி­வித்­தனர்.

அர­சாங்­கத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அதி­வி­சேட வர்த்­த­மானி அறி­வித்­தல்கள் 2120/5, 2121/1 மற்றும் 2123/4 என்­ப­வற்றின் பிர­காரம் இது தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் எனவும் பொலிஸார் சம்­பந்­தப்­பட்ட பெண்ணை நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­திய போது தெரி­வித்­தனர்.

இச்­சம்­பவம் தொடர்பில் முஸ்லிம் பெண்கள் விவ­கா­ரங்­களில் சட்ட ஆலோ­ச­னை­களை வழங்­கி­வரும் சட்­டத்­த­ரணி நதீஹா அப்பாஸ் கருத்து தெரி­விக்­கையில்,

முகத்தை மறைத்து ஆடை அணி­வது எமது நாட்டில் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. தடையை மீறிச்­செ­யற்­ப­டு­வது தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும். முஸ்­லிம்­க­ளுக்கு சவால்கள் நிறைந்த இக்­கால கட்­டத்தில் முஸ்லிம் பெண்கள் தேவை­யற்ற சிர­மங்­க­ளுக்குத் தம்மை ஆளாக்கிக் கொள்­ளக்­கூ­டாது.

முகத்தை மூடு­வ­தாயின் முஸ்லிம் பெண்­க­ளா­கிய நீங்கள் நிச்­சயம் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­டு­வீர்கள். இதனால் பல அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­கு­வீர்கள். முகத்­திரை சட்ட ரீதி­யாக தடை செய்­யப்­பட்­டி­ருக்கும் இந்தச் சந்­தர்ப்­பத்தில் முகத்தை மூடி ஆடை அணிந்தால் நீங்கள் மஹ்ரம் இல்­லாது சிறைச்­சா­லைக்கு செல்ல வேண்­டிய நிலை ஏற்­ப­டலாம்.

பெண் என்ற வகையில் முஸ்லிம் பெண்­களின் சிர­மங்­களை நான் அறி­கிறேன். 10–15 வரு­டங்­க­ளாக முகத்தை மூடி ஆடை அணிந்து விட்டு திடீரென அமுலுக்கு வந்த வர்த்தமானி அறிவித்தலையடுத்து எப்படி முகத்தை திறந்து கொண்டு செல்வது. இது மிகவும் சிரமமான விடயம் தான். என்றாலும் முகத்திரை அணிந்து கைது செய்யப்பட்டால் கண்ணீருடனே சிறையில் இருக்க வேண்டும்’ என்றார்.

8 comments:

  1. சரியாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  2. கர்ப்பிணிப் பெண் அதுவும் சிறையில்,17 வயது.17 வயதில் அந்த பிள்ளை கர்ப்பிணி 16 வயதில் திருமணம்.எப்படி கல்வியறிவு இருக்கும் கல்வியறிவு இல்லாமல் எவ்வாறு அறிய முடியும் நாட்டு நடப்புகளை எவ்வாறு தெரிந்து கொள்வது.என்வே முகம் மூட வேண்டாம் என அரசாங்கம் அறிவித்தது கூட தெரியாது.இதற்கெல்லாம் மிக முக்கிய காரணம் எமது சமூகம் பெண் பிள்ளைகளின் கல்வியின் காட்டும் பொடு போக்குத்தனம்.இனியாவது பிள்ளைகளின் கல்விக்கு Muslim பெற்றோர்கள் அதி முக்கியத்துவம் வழங்குங்கள்.

    ReplyDelete
  3. அப்போ ஏன் சிறு வயது சிறுமிகளை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். பக்குவம் வந்த பிறகு திருமணம் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  4. 17 வயது பெண் திருமணம் செய்வதில் எந்த தப்பும் இல்லை அல்லாஹ் வரையரை கொடுக்காத போது பெண்னிர் திருமண வயதை தீர்மானிக்க எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை எனவே இது தவறு என்று சொல்வது தான் தப்பு

    ReplyDelete
  5. கூமுட்டை உன் மகள் 4 வயது பெண் குழந்தையை 40 வயதுக்கு திருமணம் முடித்து கொடு மொக்கு

    ReplyDelete
  6. @Rizard மாசாஹினா ராத்தாக்கு 42 வயசு அப்ப கல்வி அறிவு என்ன ஆச்சி? முதல் உங்கட அறிவை விசாலமாக்குங்கள். இலங்கையில் எழுத்தறிவு வீகிதம் 95% விட அதிகம் இருந்தும் இனவாதம் இங்கதான் அதிகமாக இருக்கு நீங்க சொல்ற மணண கல்விக்கும் உலக கல்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் பருவ வயதில் திருமணம் முடிப்பதால் விவச்சாரம்,கற்பழிப்பு குறையும் மற்றும் சாதனைமட்டம் அதிகமாக இருக்கும் என்று. வெறுமனே பாடசாலை கல்வியை படித்தால் இன்றைய படிப்பறிவு நாடான இலங்கை நிலைதான் வரும்.இது ஒருபச்ச இனவாதம் நடக்குது நாம குருடர்களாய் இருக்கிறோம்.முதல் உங்க அறிவை இதுக்கு பயன்படுத்துங்கள்.

    ReplyDelete
  7. Islam did not give minimum age for marriage that doesn't mean we cannot make government law for that. We can change the law as per the situation. Quran or Sunnah doesn't provide complete law for the later Caliphs who made their own law based on what is good for the society. for example Abu Bakr(RA) decided to complile the Quran as a book while there Prophet or Quran did not say anything about it. and so many civil laws were made by the muslim rulers when a new problem arises. We obviously know that child marriage in this era is harm to our society.

    ReplyDelete
  8. Islam did not give minimum age for marriage that doesn't mean we cannot make government law for that. We can change the law as per the situation. Quran or Sunnah doesn't provide complete law for the later Caliphs who made their own law based on what is good for the society. for example Abu Bakr(RA) decided to complile the Quran as a book while there Prophet or Quran did not say anything about it. and so many civil laws were made by the muslim rulers when a new problem arises. We obviously know that child marriage in this era is harm to our society.

    ReplyDelete

Powered by Blogger.