Header Ads



புனித அல்குர் ஆனிலுள்ள திருமறை வசனங்களை மேற்கோள்காட்டி, இராணுவம் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரம்

“நீர் உண்மையாகவே இஸ்லாம் மதத்தைக் காப்பவரா?, நீங்களும் தூய இறைவனின் அடியாரா?” 

ஆகிய இருவேறு தலைப்புக்களில் அமைந்த இரு வகையான துண்டுப் பிரசுரங்களை முஸ்லிம்களை விழிப்பூட்டுவதற்காக படையினர் கிழக்கில் விநியோகித்து வருகின்றனர்.

புனித அல்குர் ஆனிலுள்ள திருமறை வசனங்களை மேற்கோள் காட்டி இந்தத் துண்டுப் பிரசுரங்களில் விழிப்புணர்வூட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

“நீர் உண்மையாகவே இஸ்லாம் மதத்தைக் காப்பவரா?” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ள அந்த முதலாவது பிரசுரத்தில்: 

“இனம், மதம், மொழி எதுவாக இருந்தாலும், வாழ்வதற்கு அனைத்து மனிதர்களுக்கும் உரிமை உண்டு, அதனை அழிப்பது பாவமாகும்.

“நிச்சமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும் நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்குக் கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான், அன்றியும் மானக் கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான். நீங்கள் நினைவுகூர்ந்து  சிந்திப்பதற்காக அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கின்றான். அல்குர்ஆன் 16:90”

இலங்கை உங்களதும், எங்களதும் தாய் நாடாகும், அதைப் பாதுகாப்பது எம் அனைவரினதும் கடமை.

மேலும், “நீங்களும் தூய இறைவனின் அடியாரா” ? என்ற மற்றொரு பிரசுரத்தில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களை அதில் இருந்து  மீட்டெடுப்பது உங்களது கடமையாகும்.

“நிச்சயமாக எவன் ஒருவன் பூமியில் ஏற்படும் குழப்பத்தைத் தடுப்பதற்காக அன்றி மற்றொருவரைக் கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான், மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவர் போலாவார் அல்குர் ஆன் 5:32”

“நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள், தவிர, ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்  நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான பகைவன் ஆவான் அல்குர்ஆன் 2:208” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2 comments:

  1. Al-hamdulillah... Allah is great... who created this universe and made us to live on this earth.

    We Muslims should guide our youth with pure knowledge of Islam that teachers us to spread peace in the world.

    Also remember We have obligation toward two...
    1. Obligation to our GOD purely (that is worship him purely) and
    2. Obligation toward his creations(human, animals and trees...) serving them with love and guidance.

    May Allah Make a peaceful situation to live with.
    Let us not deviate from both.

    ReplyDelete
  2. AL-hamdulillah.... Allah is great...?

    ReplyDelete

Powered by Blogger.