Header Ads



இலங்கை வன்முறை தொடர்பில், சுவிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை

இலங்கையில் சமாதானத்தையும் உறுதிப்பாட்டையும் நிலைநாட்டுமாறு சுவிஸ் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுவிஸ் வெளியுறவு அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள், சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் பெற்றுள்ளனர் என்றும் அண்மைக்காலமாக இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்தும் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இத்த் தாக்குதல்களுக்கான காரணங்களை, இன்றும் இலங்கையின் அரசாங்கங்கள் நிவர்த்தி செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கையில், எனவே, இலங்கையின் சமாதானத்துக்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்க, சுவிஸ் அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. Dear Swiss government and whole Swiss people please you must accept Sri Lankan Muslims Refugees quota. We have fully affect from whole Extremists.

    ReplyDelete

Powered by Blogger.