May 22, 2019

செல்பி எடுத்த மாணவர்களை தண்டித்த அரசாங்கம், பள்ளிவாசல்களை நாசம் செய்த கும்பல்ளையும் தண்டிக்க வேண்டும்

- RBC Raheem -

புராதன பெளத்த விகாரை மேலிருந்து செல்பி எடுத்த மாணவர்களை தண்டித்த அரசாங்கம் முஸ்லீம் பள்ளிவாசல்களை நாசகாரியம் செய்யும் கும்பல்களை தண்டிக்க வேண்டும் 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புராதன விகாரை ஒன்றில் அதாவது பராமரிப்பற்று கிடந்த விகாரை ஒன்றின் மீது மாணவர்கள் பாதணிகளோடு நின்று செல்பி புகைப்படம் எடுத்த ஒரே காரணத்திற்காக அவர்களை சிறையில் அடைத்தார்கள் இதற்கு சஜித் பிரேமதாச அவர்கள் முழு மூச்சாக நின்று செயட்பட்டார்கள் ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்து இன்றுவரை முஸ்லீம் மக்களின் பள்ளிவாசல்கள் வெறித்தனமாக உடைக்கப்படுகின்றது சொத்துக்கள் தீக்கரை ஆக்கப்படுகின்றது இவற்றை எந்த ஒரு பெரும்பான்மை அரசியல் வாதிகளும் தடுத்து நிறுத்துவதற்கு முயட்சிகளை மேற்கொள்ளவில்லை

இவ்வாறு பெரும்பான்மை அரசியல் வாதிகள் மெளனமாக இருப்பதற்கு என்ன காரணம் ? நீங்கள் வணங்கி வழிபடும் தேவாலயங்கள் விகாரைகள் போன்று முஸ்லிம்களது பள்ளிவாசல்களும் புனிதமான ஒன்று என்பதை ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை இத்தனை கொடுமைகள் செய்தும் இதுநாள்வரையில் ஒரு விகாரைகளை கூட தாக்குவதற்கு முயட்சிக்க வில்லை அவ்வாறான கீழ்த்தரமான செயலை செய்வதற்கு உண்மையான முஸ்லீம் சமூகமும் விரும்பப் போவதும் இல்லை

சிங்களவர்களானாலும் தமிழர்களானாலும் முஸ்லீம்களானாலும் கிறிஸ்தவர்களானாலும் அனைவரும் மனிதர்கள் என்பதை மறந்து விடக்கூடாது அனைவருக்கும் பசி உறக்கம் வலி வேதனை இது போன்ற அனைத்து உணர்வுகளும் உண்டு

இந்த நாட்டில் ஊடகங்கள் முஸ்லீம்கள் ஏதேனும் ஒரு குற்றத்தினை செய்து விட்டால் முஸ்லீம்கள் என்று பிரம்மாண்டமாக செய்திகளை பரப்பி வரும் சந்தர்ப்பத்தில் பள்ளிவாயல்களை நொறுக்கி இன வெறியினை காட்டுபவர்களை இனம்தெரியாத நபர்கள் என்று சுருக்கமாக சொல்லி முடித்து விடுகின்றார்கள் இந்த நாட்டின் #சட்டப்புத்தகம் #சிங்களவர்களுக்கு #வேறாகவும் #முஸ்லீம்களுக்கு #வேறாகவும் #தமிழர்களுக்கு #வேறாகவும் #என்றா #எழுதப்பட்டிருக்கின்றது சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்

நீங்கள் இன்று இந்த சமூகத்தில் எதை விதைக்கிண்றீர்களோ அதையே பின்பு அறுவடை செய்ய வேண்டும் எனவே கெளரவ சஜித் பிரேமதாச அவர்களே அன்று முஸ்லீம் மாணவர்களை கைது செய்வதில் நீங்கள் காட்டிய ஆர்வத்தில் அரைப்பங்காவது பள்ளிகளை உடைத்து நாசமாக்கும் இனவெறியர்கள் மீது செலுத்துங்கள் முஸ்லீம் சமூகம் உங்கள் மீது பாரிய நம்பிக்கை வைத்திருக்கின்றது அதை பொய்யாக்கி விடாதீர்கள் அதேபோன்று அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டுமே தவிர இவ்வாறான இனக்கலவரங்களை தூண்டுவதில் ஆர்வமாக இருக்கக் கூடாது

23 இலட்சத்துக்கும் அதிகமாக இலங்கை நாட்டில் வாழும் முஸ்லீம்களுக்கு குரல்கொடுக்கவும் இனவாத சக்திகளில் இருந்து பாதுகாக்கவும் அமைச்சர் #ரிஷாட் #பதியுதீன் மிகவும் பாடுபட்டு வருகின்றார் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதிலும் இன்று ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி அமைப்பிற்கும் முழு பங்காற்றியவர் இந்த அமைச்சர் #ரிஷாட் #பதியுதீன் எண்பக்தை நீங்கள் மறந்து விட வேண்டாம் எனவே உங்கள் ஆட்சி இன்று நடைபெறுவதற்கு முஸ்லீம் மக்கள் எத்தனை பங்களியுப்பு செய்திருக்கின்றார்கள் என்பதை நீங்கள் நினைவு கூற வேண்டும் 
முஸ்லீம்கள் உங்களிடம் பணம் கேற்கவில்லை இந்த நாட்டில் எந்த பிரச்சனைகளும் இன்றி நிம்மதியான ஒரு வாழ்க்கையினைத்தான் கேட்டு நிட்கின்றோம் எனவே

மீண்டும் ஒரு நிம்மதியான இலங்கையினை எமக்கு பெற்றுத்தாருங்கள் இந்த இலங்கை நாடு இயற்கையில் மாத்திரம் எழில்கொண்ட நாடு அல்ல மனிதம் நிறைந்த அழகிய நாடு என்பதையும் நிரூபிக்க வேண்டும்

3 கருத்துரைகள்:

புலிகள் இருக்கும் போது வாலை சுருட்டிக் கொண்டு அடுப்பங்கரையில் தூங்கிய இனவாதிகல் இப்போது நிராயுதபானிகலான எம்மிடம் மட்டும் வாலாட்டுகிரார்கல்.இதில் இருந்து புரிகிறது இவர்கள் எப்படிப்பட்ட கோழைகல் என

Superb justice is important
Thanks you very much for writing this articel

சாத்தான்கள் இந்நாட்டில் எதிர்கொள்ளும் முதல் பிரச்சினை, மொழிப்பிரச்சினை, அடுத்து மதப்பிரச்சினை.

Post a comment