Header Ads



இரகசிய சட் ரூம்களை, பயன்படுத்திய சஹ்ரான் - அப்துல் ராசிக் முறையிட்டும் பயனில்லையாம்...!

உயிர்த்தஞாயிறு தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரி என கருதப்படும் ஜஹ்ரான் ஹாசிம் தற்கொலை குண்டுதாக்குதல்களை மேற்கொண்ட  ஆறு இளைஞர்களை சேர்ப்பதற்காக இரகசியமான சட்ரூம்களை பயன்படுத்தினார் என விசாரணையில் ஈடுபட்டுள்ளவர்களும் முஸ்லீம் சமூகத்தவர்களும் தெரிவித்துள்ளனர்.

ஜஹ்ரான் ஹாசிம் செல்வந்த சகோதரர்களான இகாம் இப்ராஹிம், இன்சாவ் இப்ராஹிமை தன்னுடன் இணைந்து செயற்பட்டு தனது தாக்குதலிற்கு நிதி உதவி வழங்குமாறு கோரினார் என  பொலிஸாரும் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்களும் தெரிவித்துள்ளனர்.

இரு சகோரர்களும் தங்கள் வர்த்தகத்தின் மூலம் கிடைத்த பணத்தை குண்டுவெடிப்பிற்காக பயன்படுத்தியிருக்கலாம் என விசாரணைகளுடன் தொடர்புபட்டுள்ள  பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

முகநூல் யூடியுப் போன்றவற்றை பயன்படுத்தியே போதனைகள் இடம்பெற்றுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இப்ராஹிம் சகோதரர்கள் மார்க்கப்பற்றுள்ள முஸ்லீம்கள், ஆனால் அவர்கள்இரகசியதன்மை மிக்கவர்களாக காணப்பட்டனர் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

முகநூலை பயன்படுத்தியே ஜஹ்ரான் இவர்களை தீவிரவாதமயப்படுத்தியுள்ளார் என கருதுகின்றோம் என மிதவாத சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக அவர் முஸ்லீம்கள் அல்லாதவர்களை கொலை செய்யுங்கள் என வெளிப்படையாக கருத்து தெரிவித்து வந்துள்ளதை அவதானித்துள்ளோம் எனவும் அப்துல்ராசிக் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளின் பார்வையிலிருந்து தப்புவதற்காக சமூக ஊடகங்களில் இரகசியமாக உரையாடுவதற்கான வழிமுறைகளை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர் விசாரணைகளுடன் தொடாபுபட்டுள்ளவர்களும் சமூக தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

ஜஹ்ரான் இலங்கை முஸ்லீம்களின் மனங்களில் நஞ்சை விதைப்பதால் அவரின் முகநூலை அகற்றுமாறு நாங்கள் புலனாய்வு அமைப்புகளை கேட்டிருந்தோம் எனவும் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் அந்த முகநூலை பயன்படுத்தட்டும் அதன் மூலம் அவரை கண்காணிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர் எனவும் ராசிக் குறிப்பிட்டுள்ளார்.

ஜஹ்ரான் சமூக ஊடகங்களை பயன்படுத்தி மக்களின் மனதில் தனது கருத்துக்களை திணித்தார் என தெரிவித்துள்ள சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பேச்சாளர் தவ்சீவ் அகமட் அவர் ஐஎஸ் பாணியிலான பிரச்சாரத்தை மேற்கொண்டார் , தற்கொலை குண்டுதாரிகள் அதனால் ஈர்க்கப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

8 comments:

  1. தௌஹீத் ஜமாஅத்
    எதுவும் ஐக்கியத்தை
    உருவாக்குகின்ற மித
    வாதப்போக்குக்கு அப்
    பாற்பட்டது.சிலோன்
    தௌஹீத் ஜமாஅத்
    உட்பட...
    நாட்டுக்குள் நுழைந்த
    உடனேயே பின்வரும்
    பின்வரும் விடயங்க
    ளில் இவர்கள் எல்
    லோரும் கடும்போக்
    கும் பிரிவினையை
    உண்டாக்குபவர்களா
    கவுமே காணப்பட்ட
    னர்.
    1.குனூத் ஓதுவதில்
    குழப்பம்.
    2.கூட்டுத்துஆ ஒதுவதில்
    குழப்பம்.
    3.கந்தூரி விருந்தோம்
    பலுக்கு தடை.
    4.புஹாரி முஸ்லிம் கிரந்த
    ங்கள்ஓதுதலுக்கு
    தடை.
    4.அவ்லியாக்களுக்கும்
    மத்ஹப் இமாம்களுக்
    கும் மதிப்பளிக்காமை.
    5.மௌலீத் மஜ்லிஸுக
    ளை தடைசெய்தல்.
    6.பிறை தீர்மானங்கள்
    உட்பட அகில இலங்கை
    ஜம்மியத்துல் உலமா
    சபை சபை எடுக்கும்
    முடிவுகளை ஏற்றுக்கொ
    ள்ளாமை.
    7.தராஹ்வீஹ் தொழுகை
    21 ரக்கஅத் இல்லை.

    8.இலங்கை முஸ்லிம்களி
    ன் நிம்மதியைக்கெடுத்
    த இஸ்லாம் என்ற பெய
    ரிலான நவீன சித்தாத்
    தாந்தங்கள்.

    ReplyDelete
  2. allawe paawem awer .awerukku ondum theriya .sinna pulla .iwerudaye thawheed jamathayum thaday seyya wendum.

    ReplyDelete
  3. This so called Abdul Razik and co are agents of some external or internal groups. His wahabism has created more division and tension. first of all, send him and his cohort jails

    ReplyDelete
  4. புலஸ்தினி (சாரா) வை இஸ்லாம் மதத்திற்கு மாற்றியமை, அவரை இன்னொரு தற்கொலை தாக்குதல் தாரிக்கு திருமணம் செய்து வைத்தமை அனைத்தையும் செய்தது அப்துல் ராசிக் தான் என்று அவரது தாயாரே சொல்லி இருக்கின்றார்.

    ReplyDelete
  5. திரு.ராசிக் அவர்களே ஒரு தமிழ் ஊடகம் வெளியிட்டுள்ள உங்களை பற்றிய தகவல்களை பத்தி பேசுங்கள்.பிறகு பேசலாம் சஹ்ரானை பத்தி

    ReplyDelete
  6. Still this bugger outside why not arrest

    ReplyDelete
  7. All the Thawheed must be banned.they are working for money and divide the society.Sion Church,Thawheed Masjid and BBs are created for one purpose and one source of fund.it is to create problem among communities. So all this should be banned.According to Dr. Wickramabahu that both are paid by one account.Their duty is to create problem. Abdul Razik first created the problem insulting Lord Buddha is first evidence.

    ReplyDelete

Powered by Blogger.