May 17, 2019

இலங்கை முஸ்லிம்கள் அறிய

எந்தவொரு மதமும் வன்முறையை வளர்ப்பதில்லை, எந்தவொரு மதஸ்தானமும் வன்முறையை ஊட்டுவதில்லை, எந்தவொரு மத்ரசாவும் வன்முறையின் பக்கம் மாணவர்களைத் திசை திருப்புவதில்லை. ஒரு சில மாணவர்கள் சமூகத்தின் நிலைமைகளால் வழி தவறி விடுகின்றனர். இது இயற்கையாகவே நிகழும் மாற்றமாகும். முஸ்லிம் சமூகத்திலே எல்லோருமே வன்முறையை ஆதரிக்க வில்லை. அதே போல் சிங்கள சமூகத்தின் எல்லோருமே அப்பாவி முஸ்லிம்களின் கடைகளையும், பள்ளிவாசல்களையும், சொத்துக்களையும் உடைத்து நொருக்க வில்லை. ஒரு சிலரே பிரள்வு நடத்தையோடு இவற்றைச் செய்கிறார்கள். இவற்றின் பின்னால் இயங்கும் இரகசிய சக்திகள் பற்றி விளங்குவதே எமக்கு முன்னாலுள்ள கடினமான பணி. நம்மை வேறு நிகழ்ச்சி நிரலுக்குள் மூளைச் சலவை செய்து தந்திரமாக மாட்டி விடும் கயவர்கள் நமது சமூகத்தினுள்ளேயே இயங்குகின்றார்கள். இவர்கள் நல்ல சம்பளம் பெறும் உளவாளிகளாகும் (Agents).

குறிப்பாக ஒரு சமூகம் கல்வியிலே ஓங்க வேண்டும். அந்தக் கல்வி பாடசாலை என்று மட்டுமல்லாது, மத, கலாசாரக் கல்வியிலும் தெளிந்த தன்மையோடு வளர்ச்சி பெற வேண்டும். சமூகத்தைத் திட்டமிட்டு வேறு திசைப் படுத்தவும், பிளவினை உண்டு பண்ணவும் என வெளிநாட்டு சக்திகள் செயற்படுகின்றன. அவ்வெளிநாட்டு சக்திகளின் முகவர்களாக நமக்குள்ளே ஆட்கள் நியமனம் பெற்று சம்பளத்துக்கும், கொமிசனுக்கும் என செயற்படுகிறார்கள். இவர்களின் விடயத்திலே நல்ல தெளிவை நாம் பெற வேண்டும். ஆசிய, இந்திய, இலங்கை பிராந்தியத்தின் அமைதியைக் குழப்ப ஒரு கூட்டம் உள்ளது. அவை வேறு நிகழ்ச்சி நிரலைக் கையிலே வைத்துக் கொண்டு மிகவும் இரகசியமாகச் செயலாற்றுகின்றன. இவர்களின் சருவதேச முகவர்கள் தாராளமாக பணத்தை வாரி இறைக்கின்றார்கள். நாம் நம்பவே முடியாத அளவு நல்லவர்கள் கூட, ஏன் மத்திய கிழக்கின் முஸ்லிம் சகோதரர்கள் கூட இந்த உளவாளியாக இருக்கலாம்.

நாம் அவசரமாக நம்பி விடுமளவு மத்திய கிழக்கு அரசுகள் இஸ்லாமிய மரபுடன் இல்லை. கைகளையும், கழுத்துக்களையும் வெட்டி இஸ்லாமிய சட்டத்தை நிறைவேற்றுவதால் அவை இஸ்லாமிய அரசுகள் என்று நாம் தவறாக நினைத்திருக்கிறோம். நாளை அமெரிக்கா நினைத்தால் இந்த அரசுகளைத் தலைகீழாக மாற்ற முடியும். மத்தியகிழக்கு வெளிநாட்டு, அமெரிக்க அரசின் நிகழ்ச்சிகளை மன்னர்களின் கைகளிலே திணித்தே செயற் படுகின்றன. மன்னர்களுக்கு அமெரிக்காவின் திட்டம் விளங்குவதில்லை, மத்திய கிழக்கின் சாதாரண அரபிக்கார முஸ்லிமுக்கு மன்னர் எந்தப் பொறியிலே மாட்டப் பட்டுள்ளார் என்ற உண்மை விளங்குவதில்லை. இறுதியிலே விபரீதங்கள் வெடிக்கின்றன. அமெரிக்க திரையினுள்ளே மூடுண்ட அரசுகளே மத்தியகிழக்கு அரசுகளாகும். இறைவனால் பொருளாதார செழிப்பைப் பெற்ற அவை இன்னும் நல்ல கல்வி அறிவைப் பெற முடியவில்லை.

அண்மையில் இலங்கையிலே நடந்தேறிய ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கூட சில மர்மங்கள் உள்ளன. வெளிநாட்டு சக்திகளின் கைங்கரியம் உள்ளது என்ற உண்மை புலப்பட்டு வருகின்றது. எதுவென்றாலும் இலங்கையிலே முழு தௌஹீத் ஜமாத்தினரும் பாதுகாப்புக் கெடுபிடிகளால் பாதிப்புற்றார்கள், பயங்கரவாதத்துடன் எந்த சம்பந்தமுமே இல்லாத தௌஹீத் பள்ளி வாசல்கள் நாய்களைக் கொண்டும், இராணுவத்தின் சப்பாத்துக் கால்களைக் கொண்டும் சோதிக்கப்பட்டுக் கூட பாதிப்பு ஏற்பட்டது. இங்கே ஆச்சரியம் என்னவெனில் குறைந்தது. பல மத்திய கிழக்கு நாடுகளின் மன்னர்கள் இருந்தும், அவர்களின் தூதுவராலயங்களிருந்தும் யாருமே, எந்த மன்னருமே இலங்கை அரசுக்கு எந்த அழுத்தமோ, அறிவுரையோ கூறி விட வில்லை. அத்தனைக்கும் மத்திய கிழக்கு அரசுகளே இங்கே தௌஹீத் என்ற கொள்கையைக் கொண்டு வந்து அவர்களின் றியாழ்கள் மூலம் அவற்றை வளர்த்தும் விட்டன என்பதே வேடிக்கை.

இலங்கை மக்களுக்குத் துன்பம் வரும் போது மத்தியகிழக்கு கண்டு கொள்ளவே இல்லை. அதற்குள் சில அரசியல்வாதிகள் "இலங்கை முஸ்லிம்கள் வேறு நாடுகளின் கலாசாரங்களைப் பின்பற்ற வேண்டும் எனின் அந்த நாடுகளுக்கே போய் விட வேண்டும்" என்றும் அறிக்கைகளை விட்டார்கள். இந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் படு மோசமான மன்னர்கள் அவர்கள். அவர்கள் வாயைத் திறப்பதென்றால் அமெரிக்க வெள்ளை மாளிகையின் தொலைபேசிகள் மன்னர்களை உசுப்பி விட வேண்டும். சுயமாகச் சிந்திக்கும் சக்தியும், தைரியமும் இருந்தால் அவர் மன்னரே அல்ல என்பது எமது ஏழை மக்களுக்குத் தெரிந்த விடயமாக இருப்பது நியாயபில்லை.

எனவே இவ்வாறான விடயங்களில் இலங்கை முஸ்லிம்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். நமது இளையோரைச் சரியாக வழி நடாத்தும் பொறுப்பு நமக்குண்டு. இஸ்லாமிய கல்வி, செயற்பாடுகளில் கண்காணிப்பு வேண்டும். IS அமைப்பு முஸ்லிம்களின் கலீபா, லாயிலாஹ இல்லள்ளாஹு போன்ற கோசங்களைப் பேசினாலுப் அது யூத அமைப்பு என்ற உண்மை எமது மக்களுக்குத் தெளிவு படுத்தப்பட வேண்டும். IS எமக்குத் தீமையான ஒரு அமைப்பு என்பதை நன்கு படித்தவர்களாலும் நம்ப முடியாது இருக்கிறது. இந்த யூத கைக்கூலி IS பற்றிக் கட்டாயம் எமது மக்கள் மத்தியிலே தெளிவுபடுத்த வேண்டும். பாவம் எமது மக்கள் இது விடயத்தில் இன்னும் தெளிவின்றியே இருக்கிறார்கள். எமது எதிரிகளைத் தாக்க வேண்டும் என்பதற்காக வேறொரு சக்தி வாய்ந்த எதிரியிடம் போய் தஞ்சமடைவதென்பது எவ்வளவு பெரிய மடமை. பாவம் நம்மவர் அறிவு பெற உழைப்பதே இன்றைய தேவை. முஸ்லிம்கள் பொறுமையோடு இருங்கள் என்று சொல்லும் நாம் அவர்களுக்கான பொது விளக்கத்தைக் கொடுப்பதே சிறந்த செயலாகும். இது விடயத்தில் முஸ்லிம் புத்திஜீவிகள் கவனம் கொள்வோமாக

நௌபீர் ஆதம் லெவ்வை

1 கருத்துரைகள்:

very good article. Thanks for the author May Allah Bless you

Post a Comment