Header Ads



வெசாக் ஆரம்ப நிகழ்வுகளில், பௌத்தர்களுக்கு ஒத்துழைக்கும் முஸ்லிம்கள்


களுத்துறை - பேருவளையில் வெசாக் கொண்டாட்ட நிகழ்வுகளில் முஸ்லிம் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

நாளையதினம் வெசாக் வாரம் ஆரம்பமாகிறது. இதனை முன்னிட்டு நாடாளவிய ரீதியில் அலங்கார பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாரிய வெசாக் பந்தல்களை அமைக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் பேருவளை நகரில் சிறிய அலங்கார தோரணங்களை அமைக்கும் பணியில் அந்தப் பகுதி முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபட்டனர்.

இலங்கையில் சிங்கள - முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்தும் வகையில் சில தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் பௌத்த நிகழ்வான வெசாக் கொண்டாட்டத்தில் முஸ்லிம் மக்கள் ஈடுபட்டுள்ளமை இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக பாராட்டப்பட்டுள்ளது.



4 comments:

  1. இரண்டு பக்கமும் நல்ல உள்ளங்கள் உண்டு.ஆனால் சில மிருகங்களின் செயற்பாடுகளால் எம்முல் பிரிவினைக்கு காரணம்.இனியாவது இரு சாராரும் தங்கள் பக்கம் உள்ள மிருகங்களை இனம் கண்டு முலையிலே கிள்ளி அழிக்க வேண்டும்

    ReplyDelete
  2. ஆனால் எம்மில் தான் பயந்த உள்ளங்கள் இழக்கின்றனர். எம் ஈரானை அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்.

    ReplyDelete
  3. சமூக நல்லிணக்கத்திற்காக செய்யும் இவ்வாறான செயல்களை ஷிர்க் என்றும் பாவமான செயல் என்றும் கூறி கடும்போக்கு வாதிகள் எம்மை ஏனைய சமூகத்தவர்களிடம் இருந்து பிரித்து வைத்தார்கள். கடும்போக்கு வாதம் களைந்து ஏனைய சமூகத்தவர்களுடன் ஒற்றுமையாக பழகுவோம்.

    ReplyDelete
  4. இது மட்டும்தான் நம்மவருக்கு தெறிந்தது, மார்க்கம்,ஈமானோடு சம்பந்தபட்ட பரஸ்பரதை சிந்தித்து செய்ய வேண்டும், இல்லையெனில் நமது நோன்பு கூட செ ல் லா க் கா சி யா கி விடும்.சிலைவணக்கத்தை ஆதரிப்பதற்கு இது சமன்.

    ReplyDelete

Powered by Blogger.