Header Ads



சிங்களப் பிரதேசங்களுக்கு தொழிலுக்கு வரவேண்டாமென, முஸ்லிம்களுக்கு பகிரங்க எச்சரிக்கை

குருநாகல், கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளான பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் இழப்பீடுகளை பெற்றுக்கொடுப்பதற்காக, சேத விபரங்கள் தொடர்பில் உரிய மதிப்பீடு செய்வதற்கு விசேட குழுவொன்றை அனுப்பிவைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கொட்டாரமுல்லையில் தெரிவித்தார்.

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களினால் வடமேல் மாகாணத்தில் பாதிப்புக்குள்ளான இடங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் இன்னும் அச்சத்துடன் இருப்பதனாலும் பாதுகாப்பு நிலைமையை அவதானிப்பதற்காகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று புதன்கிழமை (15) இரண்டாவது நாளாகவும் பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்கு சென்றார்.

குருநாகல் மாவட்டத்தில் சேதமடைந்த முஸ்லிம் கிராமங்களை நேற்று சென்று பார்வையிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், இன்று புத்தளம் மாவட்டத்தில் நாத்தாண்டிய தொகுதியில் இனவாத வன்செயல்களினால் பெரும் பாதிப்புக்குள்ளான கொட்டராமுல்ல, தும்மோதர மற்றும் புஜ்ஜம்பொல பிரதேசங்களை சென்று பார்வையிட்டார்.

இவற்றில் தும்மோதர கிராமம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு முஸ்லிம் குடும்பஸ்தரான பெளசுல் அமீர் என்பவர் காடையர் கும்பலினால் கொலைசெய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டுடன் இணைந்தாக தச்சுத் வேலைத்தளமும் அமைந்துள்ளது. அங்கு சென்ற அமைச்சர் தாக்குதலுக்குள்ளான அவரது வீட்டையும் எரியூட்டப்பட்ட வாகனத்தையும் பார்வையிட்டார்.

அத்துடன் தாக்குதலுக்குள்ளான தும்மோதர மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல், உமர் தக்கியா மற்றும் புஜ்ஜம்பொல மொஹிதீன் பள்ளிவாசல் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டதுடன், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் மெளலவிமார்களுடனும் தாக்குதலின் பாரதூரம் குறித்து கலந்துரையாடினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச அமைப்பாளர் றிழ்வான் ஹாஜியார் தலைமையில் கொட்டராமுல்ல கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது, தங்களுக்கு நேர்ந்துள்ள இழப்புகள் மற்றும் அசம்பாவிதங்கள் பற்றி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் எடுத்துக் கூறினர்.

தாக்குதலின் பின்னணி, காடையர்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள், உரிய பாதுகாப்பு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படாமை என்பன பற்றி இதன்போது அவர்கள் முறையிட்டனர்.

அயலிலுள்ள சிங்கள பிரதேசங்களிலுள்ள சந்தைகளில் வியாபாரத்துக்காகச் செல்லும் முஸ்லிம்களை அங்கு தொழிலுக்காக வரவேண்டாமென வெளிப்படையாகவே அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர். 

குறித்த பிரதேசங்களில் தாக்குதலுக்குள்ளான வீடுகள், கடைகள் போன்றவற்றின் சேதங்களை அமைச்சர் பார்வையிடும்போது, வீடுகளிலிருந்த தங்க நகை மற்றும் பெருந்தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் முறையிட்டனர்.

வெளியூர்களைச் சேர்ந்த காடையர் கும்பலுடன் அயலவர்கள் சிலரும் சேர்ந்தே, தங்கள் மீது தாக்குதல்கள் நடாத்தியதாக பாதிக்கப்பட்ட மக்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். தாங்கள் இன்னும் அச்சத்தின் மத்தியில் இருப்பதினால், இன்னுமொரு அசம்பாவிதம் நடைபெறாதவாறு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

மக்களின் முறைப்பாடுகளை செவிமடுத்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அவற்றுக்கு தீர்வுகளைக் காண்பதற்காக, உரிய அரசியல் மேலதிகாரிகளிடம் கதைப்பதாகவும் இழப்பீடுகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் மதிப்பீடுகளை செய்வதற்காக குழுவொன்றை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தார்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

5 comments:

  1. Mathippeedulakku thayawu seythu g.s.oodaaha seyyamal iruppathu saalach siranthsthu....
    Ethaawathu ministry oodaaha seythaal payanaalihakku porutthamaaha irukkum..
    Pls

    ReplyDelete
  2. இவருக்கும் நடிகர் திலகம் என்ற பட்டத்தை வழங்கலாம்.

    ReplyDelete
  3. பாராளுமன்ற முஸ்
    லிம் உறுப்பினர்கள்
    குறித்த காலப்பகுதி
    க்கேனும் முஸ்லிம்
    கூட்டமைப்பொன்றை
    நிறுவதவறும்பட்சத்
    தில் இன்னும் சமூக
    அவலம் தொடரும்.

    ReplyDelete
  4. ஒரு சமூகம் பாதிக்கப்படும்போதுதான் தனது தலைவர்களுடன் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டு பயனிக்க ஆரம்பிக்கிறது. ஆனால் முஸ்லிம்கள் இதற்கு விதிவிலக்கு. தலைவர்கள் ஒன்றும் மலக்குகள் அல்ல. அவர்களைத்திருத்துமாறும், மன வலிமையையும், நல்லமுடிவுகளை எடுப்பதற்கு உதவுமாறும் அல்லாஹ்விடம் இந்நாட்களில் பிரார்த்தனை செய்வோம்,

    ReplyDelete
  5. Pudunkama irunga mr.razmin....

    ReplyDelete

Powered by Blogger.