Header Ads



ஸஹ்ரானின் மனைவியை பார்த்தேனா..? சாரதியை விடுவிக்க முயன்றேனா..??

- பாறுக் ஷிஹான் - 

தற்கொலை குண்டுதாரியின் மனைவியை தாம் பார்க்க செல்லவிலலை என அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணி (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்) நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஐ.எம். மன்சூர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (2) அவரது சம்மாந்துறை அலுவலகத்தில் நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்

அம்பாறை வைத்தியசாலையில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் காயமடைந்த சாய்ந்தமருது மக்களின் நலனை அறிவதற்காக அங்கு சென்றிருந்தேன்.ஆனால் அதே வைத்தியசாலையில் நாட்டில் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடாத்தியதாக கூறப்படும் ஸஹ்ரானின் மனைவி சிகிச்சை பெற்று வருவதை தான் எந்தவகையிலும் அறிந்திருக்கவில்லை என்பதை தெளிவாக கூற விரும்புகின்றேன்.இதனை சில ஊடகங்கள்குண்டுதாரியின் மனைவியை பார்க்க சென்றதாகவும் அதில் முரண்பட்டதாகவும் வேறுவிதமாக திசைதிருப்பமுள்ள செய்திகளை வெளியிடுகின்றன.

அதற்காக நான் சட்டநடவடிக்கையினை மேற்கொள்ள தயாராக உள்ளேன்அத்துடன் சம்மாந்துறையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள எனது  சாரதியின் விடுதலை தொடர்பில் தான் பொலிஸாருக்கு எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை.அவர் தற்போது சந்தேகத்தின் பெயரில் தான் கைதாகி உள்ளார் எனவே  சட்டம் அதன் கடமையைச் செய்யப்பட்டும் அது போன்று  சாரதி நிராபதி என உறுதிப்படுத்தப்பட்டால் அவர் விடுதலை செய்யப்படுவார் என நம்புகின்றேன்.மீட்கப்பட்ட வெடிபொருட்கள்இ ஆயுதங்கள் தொடர்பில் அவர் ஒரு சந்தேக நபராகவே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவர் சம்மாந்துறை பொலிஸாருக்கு தான் ஒரு நிரபராதி என்பதனை நிரூபிக்கு வகையில் அவர் வாக்குமூலத்தை வழங்கியதாக அறிகிறேன்.இந்த நிலையில் அவர் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவரைப் பொலிஸார் விடுவிப்பார்கள் என்றே நான் நம்புகிறேன். இன்றேல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.

அதே போன்று எமது பெண் பிள்ளைகளின் ஆடைகளில் கட்டுப்பாடுகள் சில நிறுவனங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக  அறிகின்றேன்.அதற்காக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்து உரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்வேன்.

மேலும்   சம்மாந்துறை பகுதியில்  இராணுவத்தினரும் பொலிஸாரும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது  மக்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.நானும் வேறு எந்த பகுதிகளுக்கும் செல்லாது மக்களோடு மக்களாக நின்று அவர்களது சிரமங்களில் பங்கேற்று வருகின்றேன்.எனது மக்களை எவ்விதத்திலும் நான் இச்சந்தர்ப்பத்தில் கைவிட்டு எந்த ஒரு வெளி இடங்களுக்கும் செல்ல மாட்டேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.மக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் பாதுகாப்பு தரப்பினரால் ஏற்பட்டால் என்னை அவசரமாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

 தற்போதுள்ள நிலைமையில் பொலிஸார்  பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைப்பு சோதனைகளுக்கு பிரதேச மக்கள் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அதன்மூலமே இவ்வாறான தீவிரவாத்தை முற்றாகத் துடைத்தெறிய முடியும்  என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.