Header Ads



மக்களே அச்சமின்றி நடமாடுங்கள், பயங்கரவாதிகளை அடியுடன் அழிக்கும்வரை படையினர் முழுமூச்சுடன் செயற்படுவர்

இந்நிலையில், இலங்கை பாதுகாப்பு பிரிவின் மீது முழுமையான நம்பிக்கையை வைத்து, தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று -11- சனிக்கிழமை ஊடகங்களுக்கு சிறப்பு உரை நிகழ்த்திபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, நாட்டு மக்களிடையே அச்ச நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படையினர் மற்றும் போலீஸார் 24 மணிநேரமும் செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர், பாதுகாப்பு பிரிவின் மீது முழுமையான நம்பிக்கையை வைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் ஏற்பட்டிருந்த பாதுகாப்பற்ற நிலைமை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதை தான் பொறுப்புடன் கூறிக் கொள்வதாகவும் பாதுகாப்பு செயலாளர் கூறியுள்ளார்.

அத்துடன், நாட்டின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், பெருந்தொகையான வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இலங்கையில் நிலைக்கொண்டிருந்த 30 வருட கால யுத்தத்தை நிறைவு செய்த முப்படை மற்றும் போலீஸார் மீது முழுமையான நம்பிக்கையை வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பயங்கரவாதிகளை அடியுடன் அழிக்கும் வரை பாதுகாப்பு பிரிவினர் முழு மூச்சுடன் செயற்படுவார்கள் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Sir; Its for your information. We, ordinary Sri Lankan citizens, want to live very happily, peacefully. Hope there is no any view against. Knowingly or unknowingly, now we are separated by so many elements. Communal doubts became more than the trust in every community even in genius. People like you in the highest dignity and the politicians coupled with the religious dignitaries; why not you all get together and bring peace to this country. For the country’s sake, why not we sacrifice our honor and dignities. We heard one time, we all studied in one school, may be in the different mediums; but our thoughts at last fall in unity and co-operation. There is not that much distance passed, even now we can do it, only thing, we must bring concrete steps for the unity of the citizen. This is a big task. But hope success is in behind. Every dog has money but not peace and harmony.

    ReplyDelete

Powered by Blogger.