Header Ads



போதையில் சுற்றி திரியும் சிலராலேயே, முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு முழமையான ஒத்துழைப்பை வழங்குமாறு தான் அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாக இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். 

வட மேல் மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் போதையில் சுற்றி திரியும் சிலராலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பொலிஸார் அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் இந்தப்பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நேரத்தில் அல்லது ஏனைய நேரங்களில் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்டால் சட்டம் முழுமையாக செயற்படுத்தப்படும். 

பொது மக்கள் இவ்வாறானவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காது அமைதியான முறையில் தமது பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான கும்பலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் செயல்பட்டால் இராணுவத்தினர். தமது அதிகாரத்தை முழுமையாக பிரயோகிக்க வேண்டி ஏற்படும் என்றும் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

9 comments:

  1. இவர் போதையில் உளறுகிறார் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. மது வை தடை செய்ய முடியாதா . சிங்கலவர்கலின் பலக்கம் மது அருந்திவிட்டுத்தான் ஒரு வேலையில் இரங்குவார்கல் அதற்காக மதுவை குற்றம் சொல்ல வேண்டாம் Sir எல்லாத்துக்கும் காரணம் மனசு

    ReplyDelete
  3. When some nuts with Muslim name does sth, it is to do with religion. When racists do sth blame, drunkards. Can't understand SL logic.

    ReplyDelete
  4. இனவாத, மதவாத,பதவி பேதை

    ReplyDelete
  5. After you allowed sufficient time 48 hrs to complete the job of perpetrators/thugs, now you are leaving statement. Is the effective way to end the violence and bring the peace into the country. Shameful ...

    SL military always gives sufficient time for Sinhala perpetrators to do brutal violence against minority communities since 1987.

    ReplyDelete
  6. All the atrocities are taking place with the blessing of the Armed forces. If you are honest and impartial, show some leadership and make sure the Armed forced do not turn blind eye when criminals go rampage. Instead order them to do their duty and protect the innocent.
    Don't forget the history. During the 1983 riots against Tamils, Armed forces and Police were mere spectators. Innocent civilians were burnt to death in front of Security forces. That was the time Tamils realized that they cannot depend on government but will have to protect themselves and joined LTTE in large numbers. Previously unknown group LTTE became the most powerful rebel group in the world and eventually turned as a terrorist group.
    If Security forces fail to do their duty it may, god forbid not, drive Muslims towards contemplating of taking up arms to protect themselves, just like Tamils did.

    ReplyDelete
  7. ஐயா உங்களுடய கருத்து மிகவும் வருந்தத்தக்கதும் வேடிகையாகவும் உள்ளது. அது எப்படி ஐயா ஒரு ஏரியாவுல 1000 திற்கும் மேற்பட்ட வெறிநாய்கள்/ காடையர்கள் ஊரடங்கு அமுலில் இருக்கும்போது குடித்துக்கொண்டு வீடுகளையும், கடைகள், பள்ளிகளையும் உடைத்தும் எரித்தும் மகிழ்ச்சி கும்மாளம் போட்டுக்கொண்டும் திரிகின்ரார்கள். ஆனாலும் நீங்கள் கூறும் குடிகாரர்கள், இனவாத அரசியல்வாத கும்பளின் வளிகாட்டலில் மிகவும் தெளிவாக வன்முறைகளை அரங்கேற்றும் தெளிவான குடிகாரர்கள்.

    ReplyDelete
  8. போதையில் வன்முறையில் ஈடுபட்டால் அரஸ்ட் பண்ண சட்டத்தில் இடம் இல்லையா sir

    ReplyDelete
  9. Sir போதையில் வன்முறையில் ஈடுபட்டால் அரஸ்ட் பண்ண சட்டத்தில் இடம் இல்லையா

    ReplyDelete

Powered by Blogger.