Header Ads



அஸாத் சாலி எல்லைமீறினால் அவரை, பதவிநீக்கும் முடிவை ஜனாதிபதி எடுப்பார் - தயாசிறி

மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி, எல்லைமீறி செயற்பட்டால் அவரை பதவிநீக்கம் செய்யும் முடிவை ஜனாதிபதி எடுக்கக்கூடும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை விடுத்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று -28- நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

“செயற்பாட்டு அரசியலை முன்னெடுப்பது அல்ல ஆளுநர்களின் கடமை. எனவே, அரசியலை இலக்காகக்கொண்டு சர்ச்சைக்குரிய அறிவிப்புகளை விடுக்காமல், அரசியல் களத்திலிருந்து ஒதுங்கி நின்று தமது மாகாண மக்களுக்கு சேவையாற்றுமாறு அஸாத் சாலியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

ஆளுநரை நியமிப்பதற்குரிய அதிகாரம் இருப்பதுபோல், அவரை பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரமும் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.

எனவே, எவராவது எல்லைமீறி செயற்பட்டால் அவர்கள் தொடர்பில் தீர்க்கமானதொரு முடிவை எடுக்கவேண்டிய நிலை ஜனாதிபதிக்கு ஏற்படும் என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம்.

அதேவேளை, குருநாகலை வைத்தியசாலையிலுள்ள மகப்பேற்று வைத்தியர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். இதற்கு அனைவரும் பூரணஒத்துழைப்பை வழங்கவேண்டும். குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதை விசாரணைதீர்மானிக்கப்பட்டும்.

அதைவிடுத்து ஊடகவியலாளர் மாநாடுகளை தினந்தோறும் நடத்தி, வைத்தியருக்கு சார்பாககருத்து வெளியிட்டால் மக்கள் குழப்பமடையக்கூடும்.’’ என்றும் தயாசிறி ஜயசேகரஎம்.பி. குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.