Header Ads



ஆறுதலாக யோசிப்போம் (உம்மத்தின் கவனத்திற்கு)


- கலாநிதி N கபூர்தீன், 
கொழும்பு பல்கலைக்கழகம் -

இலங்கை முஸ்லிம்கள் எப்போதும் நாசகார மற்றும்  பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரானவர்கள்.  அவற்றை வன்மையாக வெறுக்கின்றனர் என்பதனை இலங்கை பாதுகாப்பு படையினருக்கு வழங்கி வரும் செய்திகளில் இருந்து மீண்டும் நிரூபித்து வருகின்றனர் என்பதனை  புரிந்துகொள்ள முடியும்.  தொன்றுதொட்டு இந்நாட்டுக்கு விசுவாசத்துடன் செயற்பட்டு வந்தவர்கள் தான் முஸ்லிம்கள் என்பதற்கு பல்வேறு கோணங்களில் வரலாற்று சான்றுகள் காணப்படுகின்றன  நம்முன்னோர், இலங்கை சோனகர் பற்றிய கடந்த கால நினைவுகள்,   எமது முதுசம் போன்ற அடிப்படையான தமிழ் நூல்களை வாசிக்கின்ற போது சாதாரண மகனுக்கும் புரிந்துகொள்ள முடியும்.

எனினும் இலங்கை முஸ்லிம்கள் தங்களது வாழ்வில் கண்டிராத இப்படியான கசப்பான துயர சம்பவங்களை முஸ்லிம்கள் பயத்தாலும் அச்சத்தாலும் நாயைப் பிடி ஆள விடு எந்த வகையில் தமது கௌரவத்தை விட்டுக் கொடுக்கும் அளவுக்கு கீழே இறங்கிச் செல்வது எதிர்கால சமூகத்தின் இளசுகளுக்கு மார்க்கம் பற்றிய தெளிவில்லாத லேபிள்களுடன்  வாழ வழிவகுக்கும் நிலையை உருவாக்குவது உசிதமல்ல . அந்த வகையில்,

1.  கல்வி பொது தராதர உயர் தரம் மற்றும் உயர்கல்வி நிலைகளில் சமயம் மற்றும் நாகரிகம் தொடர்பான கற்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் தங்களிடம் இருக்கும் இஸ்லாம் தொடர்பான புத்தகங்கள், சஞ்சிகைகள், கட்டுரைகள் என்பவற்றை தீயிட்டு வீடுகளை சுத்தப்படுத்துகின்றனர் என்ற செய்திகள் அவ்வப்போது ஊடகங்களின் ஊடாக வாசிக்க கிடைக்கிறது.  இது ஒரு ஆரோக்கியமான நிலை அல்ல. உங்களுக்கு உங்கள் அறிவு உங்கள் வாசிப்பின் தைரியம் இல்லாத நிலையை காட்டுகிறது. எனவே உங்கள் வீடுகளை சோதனையிட வரும்போது உங்கள் பாடப்பரப்பு, உங்கள் பரீட்சை பற்றிய தகவல்கள், உங்கள் கல்வி நிறுவனம் ஆகியவற்றை நீங்கள் வருகின்றவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். உங்களுடைய பாட பரப்புக்கு இவ்வகையான ஆவணங்களின் அவசியத்தை நீங்கள் எடுத்துக் காட்டுங்கள்.  இதற்காக அச்சப்பட வேண்டிய தேவை இருக்காது.

2.   ஆடை விவகாரத்தில் நீண்ட காலமாக எமக்குரிய கலந்துரையாடல் ஆரோக்கியம் குன்றிய நிலையில் எமது விவகாரத்தில் அடுத்தவர்கள் தலையிட்டு தடையாக கொண்டுவர வேண்டிய நிலை நல்லதல்ல . எனவே இந்த விடயத்தில் மிக அவதானத்துடன் இனிவரும் காலங்களிலும் கவனமாக நடந்துகொள்வது எமது தார்மீகப் பொறுப்பாக கருதுவோம்.

3. இலங்கை அரபு மதரஸாக்கள் ஷரீஆ கற்பித்தலோடு இலங்கை கல்விக் கொள்கையையும் உள்வாங்கி அரசு அங்கீகாரம் பெறும் வகையில் ஷரீஆ கற்கைகளின் கலை திட்டங்களை மாற்றி அமைப்பதற்கு இப்பொழுது முதல் அனைத்து மதரசாக்களின் நிர்வாகமும் சிந்தித்து மிகக் குறுகிய காலத்திற்குள் சிறந்த கல்வியை  ஷரீஆ மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற பொறுப்பை வாக்குவாதங்களை விட்டுவிட்டு நாட்டுக்கு நல்ல பிரஜையாக எமது இளைய ஆலிம்களை உருவாக்குவது எமது நிறுவனங்களின் பிரதான இலக்காக கொள்வோம். 

4. இலங்கை கல்வித் திட்டம் பாடசாலைக் கல்வியின் பின்னர் உயர்கல்வி என்றும் தொழில்சார் கல்வி என்றும் இரு வகையான வரையறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  அந்தவகையில் உயர்கல்வி  Sri Lanka Quality Frame (SLQF) என்றும் தொழில் கல்வி (NVQ)என்றும் இலங்கை அரசு அடையாளப்படுத்தியுள்ளது.  அந்த வகையில் எமது ஷரீஆ  கல்வியை ஏதாவது ஒரு குறித்த FRAME  ஒன்றினூடாக உருவாக்கி அரசின் அங்கீகாரத்தை பெற வேண்டும். அல்லது அரசினால் அறிமுகப்படுத்தியுள்ள மேற்கூறிய இரண்டு வகையான கல்வி வரைவுகளில் ஏதாவது ஒன்றின் கீழ் எமது மதரஸாக்களில் கல்வித்திட்டம் வந்து சேர வேண்டிய தேவை இருக்கின்றது என்பதை உணர்வோம்.

அந்த வகையில் இந்த கருத்துக்களை உங்களோடு ஒரு ஆலோசனையாகவே முன்வைக்கின்றேன்.  இது பற்றிய நீண்ட கலந்துரையாடல்கள் தேவைப்படுகின்ற போது அமர்வோம் சிந்திப்போம் புதிய கல்வி கொள்கை ஷரீஆ துரைக்கு முன் வைப்போம். சிறந்ததொரு நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்பவோம்.

2 comments:

  1. உங்கள் விருபங்கள் நிறைவேற ஒரே ஒரு நிபந்தனையுடன் வாழ்த்துகிறேன். காபிர் என்ற வன்முறை கருதுகோளை மட்டும் இனி கற்பிக்காதீர்கள். நல்வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  2. ஐய்யா ஜெயபாலன், காபிர் என்ற சொல் இந்த பயங்கரவாதிகளில்னால் தான் ஒரு கெட்ட அல்லது அபாயகரமான சொல்லாக மாற்று மதத்தவர் முன் கொண்டு செல்லப் பட்டிருக்கிறது. காபிர் என்றால் நிராகரிப்பாளன். அல்லாஹ்வை நிராகரித்ததானால் தான் நீங்கள் இந்து மற்றவர் கிறிஸ்த்தவர் மற்றவர் பெளத்தர். ஏற்றுக் கொண்டிருந்தால் நீங்கள் முஸ்லிம். காபிர் என்றால் தீண்டத்தகாதவர் அல்லது கொல்லப் பட வேண்டியவர் என்பது பொருள் அல்ல.

    ReplyDelete

Powered by Blogger.