May 30, 2019

உடைக்கப்பட்ட பள்ளிவாசலை, நூலகமாக பயன்படுத்த திட்டம்...?

- Ashroff Shihabdeen -

கெக்கிராவ - மடாட்டுகம தேசிய தௌஹீத் ஜமாஅத் பள்ளிவாசலை அவ்வூரார் உடைத்தது பற்றி மிக மோசமான வார்த்தைகள், சொற்கள் அடங்கிய பதிவுகளும் பின்னூட்டங்களும் முகநூலில் போய்க் கொண்டிருக்கின்றன. (சிலருடைய பதிவுகளும் பின்னூட்டங்களும் ஸ்கிறீன் ஷொட் வைத்திருக்கிறேன். தேவையாயின் தரலாம்.)

இந்தப் பதிவுகள் எவையும் அநேகமாகவும் அவ்வூரார் சார்ந்தவர்களால் இடப்பட்டவை அல்ல என்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அவ்வூரைச் சேர்ந்த ஒருவருடன் தொலைபேசியில் உரையாடினேன். ஏற்கனவே இருக்கும் பள்ளிவாசல் தமக்கு மிகவும் போதுமானது என்ற அடிப்படையிலும் உடைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பள்ளிவாசலில் குறிப்பிட்ட சிலரே பயன்படுத்தி வந்ததாகவும் அதுவும் இப்போது இல்லாமல் போய்விட்டதாகவும் இன்றைய நிலையில் அடிக்கடி பாதுகாப்புப் பிரிவினர் ஊருக்குள் வந்து இதைப் பற்றி விசாரித்துக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட மன உளைச்சலுமே இந்த முடிவுக்கு வந்து சேர நேர்ந்ததாகக் குறிப்பிட்டார்.

அக்கட்டடம் முழுமையாக உடைக்கப்படாமல் முகப்புப் பகுதி மட்டுமே உடைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஏன் அதை நூலகமாகப் பயன்படுத்தலாமே என்ற எனது கேள்விக்கு அநேகமாக அந்த முடிவுக்கு வருவார்கள் என்று பதில் சொன்னார்.

நான் இங்கே சொல்ல வருவது என்னவெனில் -

ஓர் ஊரின் தேவை என்ன என்பதை அவ்வூர் மக்கள் தீர்மானிக்கும் உரிமையுடையவர்களேயன்றி நாட்டின் வெவ்வேறு இடங்களில் இருந்து முகநூலில் போராடும் கார்ட்போர்ட் வீரர்கள் அல்லர். அந்த ஊர் மக்களது மனோ நிலை, வாழ் நிலையறியாமல் தீர்ப்புகளை எழுத விளைவது ஒரு வகையான மனோவியாதியாகவே இருக்க வேண்டும்.

அவ்வூர் பள்ளிவாசலை அவ்வூரார்தான் நிர்வகிக்க வேண்டும். அது சிரமம் என்ற நிலையில் இப்படி ஒரு முடிவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள். இங்கே போராடும் சமூகப் போராளிகள் தைரியமிருந்தால் அப்பள்ளிவாசலை நாங்கள் நிர்வகிக்கிறோம் என்று அவ்வூருக்கும் பாதுகாப்புப் பிரிவுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டு உடனடியாக அதைப் பொறுப்பேற்க முயற்சிக்கலாம்!

14 கருத்துரைகள்:

ஓநாய் ஆட்டைக் கடித்து விட்டு இதோ ஆடு என்னைக் கடித்து விட்டது என்ற கதைதான் இக்கட்டுரை.

எது எப்படி இருந்தாலும் நாட்டிலுள்ள த‌ற்போதைய நிலையில் இது நடந்திருப்பது பிழையாகும். காட்டிக் கொடுப்புமாகும்

ஒரு ஊடகவியாளராக இருந்து இதை சொல்ல வெட்கம் இல்லையா உங்களுக்கு பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்குரியது நிர்வாகம் செய்து இல்லை பிரச்சினை உடைக்க இந்த நாய்களுக்கு எப்படி மனம் வந்தது உனக்கு முடியாது என்றால் அதை வேறு தேவைக்கு பயன்படுத்தலாம் அல்லாஹ்வின் ஆலயத்தை இப்படி தான் கேவலப்படுத்துவதா நாளை மறுமைக்கு முன்னர் இவர்கள் அனைவரும் அல்லாஹ்விடம் தவ்பா செய்ய வேண்டும் அப்படி இல்லை என்றால் இன்ஷா அல்லாஹ் அவர்கள் அதற்குரிய பலனை அவர்களின் வாழ்வில் காண்பார்கள் அல்லாஹ்வின் சாபம் இவர்கள் மீது இறங்க வேண்டும். தவ்பா செய்யவில்லை என்றால்

உடைத்ததற்கு சார்பாக எழுதி குரோதங்களைக் கக்கிய பின்னூட்டங்களை ஸ்கிறீன் ஷொட் எடுக்க தவறி விட்டீர்கள் போலும்??!

அதை உடைக்காமல் நூலகமாக பயன்படுத்தி இருக்கலாம்,

இஸ்லாமிய கண்ோட்டத்தில்தேவைக்கதிமாக இருந்தால் அது வீண் விரயம்தான் அது பள்ளிவாசல்களாக இருந்தாலும் சரி
பல்கலைகழகமாகவும் இருந்தாலும் சரி

veenselavu
palliye idichitu niyayam solrange
moota poociki payanthu veeta erichitange
pudikati close panre or ungeda kolhaikane idama use panra
jahiliya kala madamaide tanam velipaduthu
genes ellam express aahuthu
samoha poralihela ellathukum koopituku irukame urupadiya elum enda seinka
illati ponge
padachavenuku terium eppudi pathukaenun endu
whatever genes work
Bp high in this society
pls take losarten 10 mg 😂😂😂😂

WASHIHA SHALAI,PIRIVINAI WAZIHALUKKUM,PAYANGARAWAZIHALUKKUM,MIHAVUM,ILESHANA IDAMAHA AMAYUM.
MOOLAI SHALWAIKU THEVEIYANA,ATHANAI PUTHAHANGAL,INNUM THEVEIPATTAZU, ELLAM WAITHIRUKKA MUDIUM.
WASHIHA SHALAI ENRA PEYARIL,
T J THATKOLAI JAMAT WELAIHAL,ILESHAHA AMAYALAM

WASHIHA SHALAI,PIRIVINAI WAZIHALUKKUM,PAYANGARAWAZIHALUKKUM,MIHAVUM,ILESHANA IDAMAHA AMAYUM.
MOOLAI SHALWAIKU THEVEIYANA,ATHANAI PUTHAHANGAL,INNUM THEVEIPATTAZU, ELLAM WAITHIRUKKA MUDIUM.
WASHIHA SHALAI ENRA PEYARIL,
T J THATKOLAI JAMAT WELAIHAL,ILESHAHA AMAYALAM

The author is trying to justify the action of this mob. It's a place of worship and it is the mental state of hatred against another group that led to the demolishing of this Masjid. By doing so, do they expect respect from the Buddhist community? For the racists, all Muslims are the same, they don't differentiate you by your sects. Unless the Muslims stop the infighting and unite, sadly the destruction is within!!

Evvaru irunthaalum palliyai udaithu irukkaamal athu ethatkku thevaippadumoa athatkku payanpaduthi irukka mudiyum thaanae...

Masjid Dirar should be demolished according to the rule of islam

செய்ரதையும் செஞ்சுபோட்டு நீங்க வாரீங்களோ அதுக்கு வக்காலத்து வாங்க.

அவங்க அவங்கதான் தீர்மானிக்கிறதுன்னு இருந்தா ஏன்டா நாங்க எல்லேரும் எவனோ செஞ்சதுக்காக இப்ப அடிவாங்குரோம் ??? முட்டாள் பயலே.

இதை எழுதியவர் பைத்தியக்காரனாக இருக்குமோ? அடே உடைக்கப்ட்டது உண்ட வீடு அல்ல. இறை இல்லம்.

Post a comment