Header Ads



நிவாரணப் பணி பொறிமுறை தொடர்பான, ஜம்மியத்துல் உலமாவின் அறிவித்தல்

21.05.2019 அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், லங்கா மினரத், இன் சைட், முஸ்லிம் எய்ட், ஏ.ஆர்.சி., கெயார் லைன், கொழும்பு அனைத்து பள்ளி வாசல்கள் சம்மேளனங்கள் ஆகிய நிறுவனங்களோடு நடந்த நிவாரணப் பணிகள் தொடர்பான கூட்டத்தில் சகலரும்; இணைந்து பரஸ்பர ஒத்துழைப்புடன் இப்பணிகளில் ஈடுபடுவதாக முடிவு செய்யப்பட்டது. அத்துடன் கீழ்வரும் முடிவுகளும் பெறப்பட்டன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட ரீதியான ஆலோசனைகளையும், உதவிகளையும் ARC நிறுவனம் மற்றும் சட்டத்தரணி ஷிறாஸ் நூர்தீன் குழு வழங்கும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளையும், உதவிகளையும் Careline அமைப்பு மற்றும் ஸபா நிறுவனம் வழங்கும்.

ஜம்இய்யாவின் ஒத்தழைப்புடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், கொழும்பு அனைத்து பள்ளி வாசல்கள் சம்மேளனங்கள் உற்பட ஏனைய தொண்டர் அமைப்புக்களும் நிவாரணப் பணிகளை முன்னெடுக்கும்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான நிவாரணப் பணிகளை பின்வரும் நிலையங்கள் ஒருங்கிணைக்கும்.

குருணாகல் மாவட்டம் - கொட்டாம்பிட்டிய நிலையம் - 0777 805 720

கம்பஹா மற்றும் புத்தளம் - ACJU தலைமையகம் - 0777 571 876

பாதிக்கப்பவர்களுக்கான நிவாரணப்பணிகள் நடை பெற்ற வண்ணம் இருக்கின்றன. சில ஊர்களின் தேவைகள் அல்லாஹ்வின் அருளால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஆயினும் பல ஊர்களில் தொடர்ந்தும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் நிவாரணப் பணிகளுக்கு மேலும் ஒத்துழைப்புக்களை வழங்க விரும்புகின்றவர்கள்; அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளும் படி வேண்டிக் கொள்கின்றோம்.


அஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத்   

பிரதித் தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2 comments:

  1. First of all send all ACJU old team Home.
    Specially The leaders has to go home... Very Soon we have to take decision.

    ReplyDelete
  2. @TrueF,

    It is noted that you keep on blame on ACJU. In fact, ACJU are doing good for Muslim community, most of the Muslim community in Sri Lanka knows this, and they are respected by other religious leaders and are well known outside the country as well.
    If you have any personal problem with them, please keep with you.

    ReplyDelete

Powered by Blogger.