May 05, 2019

முஸ்லிம்கள் எங்களை, மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன் - இராணுவத் தளபதி

நாட்டின் இன்றைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் நடவிக்கைகள் குறித்தும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் மகேஷ் சேனநாயக்க வழங்கிய நேர்காணல்.

கே : மக்களுக்கு பாதிப்பில்லாத விதத்தில் மனித வாழ்க்கைக்கு குந்தகமேற்படாத விதத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு அமையுமென்பதை தெளிவுபடுத்துவீர்களா?  

ப : முஸ்லிம் சமூகம் எங்களுடைய நாட்டின் ஒரு சகோதர சமூகமாகும். நாம் முக்கியமாக இரண்டு விடயங்களை மனதில் பதித்துக்கொள்ள வேண்டும். அந்தச் சமூகம் போர்க்காலத்தில் படையினருக்கு மிகவும் நெருக்கமாகச் செயற்பட்ட ஒரு குழுவாகும். இரண்டாவது அவர்கள் பயங்கரவாதிகளிடம் நன்றாக வாங்கிக்கட்டியவர்கள். அவர்களுடைய எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் சம்பிரதாயங்களுக்கு நாம் மதிப்பளிக்கவேண்டும். அவர்களுடைய மத வழிபாடுகளுக்கு நாம் இடமளிக்க வேண்டும். என்றாலும் சில சந்தர்ப்பங்களில் நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற போது, நாம் விரும்பாத நிலையிலும் சில செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. உதாரணமாக கூறுவதானால் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்குள் பாதணிகளை அணிந்து செல்ல முடியாது. எனினும் தேடுதல் நடவடிக்கையின் போது சில சந்தர்ப்பங்களில் எம்மால் அவர்களது சம்பிரதாயங்களை அனுசரிக்கமுடியாது. மற்றொரு விடயம் பொருட்களைக் கண்டறிவதற்காக மோப்ப நாய்களைக்கூட பள்ளிவாசல்களுக்குள் கொண்டுசெல்ல வேண்டிய நிலையேற்படுகிறது. முஸ்லிம் மக்கள் இதனை இப்பொழுது புரிந்துகொள்கின்றனர். அவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் எம்மை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன்.  

கே : கிழக்கு மாகாணப் பகுதிகளில் அடிப்படைவாத செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. எதிர்காலத்தில் அதுகுறித்து எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும்?  

ப : அடிப்படைவாத சம்பவங்கள் இடம்பெற்றதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். என்றாலும் பாதுகாப்புப் படையென்ற அடிப்படையில் எமக்கேற்பட்ட பிரச்சினை, அந்த அடிப்படைவாதத்தோடு செயற்பட்ட உறுப்பினர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாததன் காரணமாக அவர்களை கைதுசெய்ய முடியவில்லை. என்றாலும் இப்பொழுது அந்த நிலை மாறியுள்ளது. முக்கியமாக அவசரகால விதிகளின் கீழ் எம்மால் அவர்களை கைதுசெய்ய முடியும்.  

கே : ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் வெடிபொருட்கள் கொண்ட மோட்டார் சைக்கிளொன்று காத்தான்குடியில் பரீட்சித்துப் பார்ப்பதற்காக வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து இராணுவத்திற்கு அறிக்கையிடப்பட்டதா?  

ப : இந்தக் கேள்வி இதற்கும் அப்பால் செல்லவேண்டியதாகும். வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொலைசெய்யப்பட்டனர். அதேபோன்று வனாத்திவில்லுவில் ஆயுதக் களஞ்சியமொன்று பிடிபட்டது, மாவனெல்லையில் புத்தர் சிலை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புபட்டதாக அமைச்சர் கபிர் ஹாசிமுடைய செயலாளரொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இவற்றோடு இணைந்ததாகவே இந்த மோட்டார் சைக்கிள் பரீட்சித்தமையையும் இணைத்துப் பார்க்கவேண்டியுள்ளது. இவை அனைத்தையும் உரிய முறையில் இராணுவத்துக்கு அறிவிக்கப்பட்டதா என்ற விடயத்தையும் நாங்கள் கவனம் செலுத்தவேண்டும்.  

கே : காத்தான்குடி குண்டு வெடிப்பு குறித்து படைத்தரப்பு அறிந்திருக்கவில்லையா?  

ப : வெடிப்புச் சம்பவத்துக்குப் பின்னரே நாங்கள் அறிய நேர்ந்தது. ஆனால், அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பது இராணுவமல்ல. அந்த அதிகாரம் எமக்கு இருக்கவில்லை.  

கே : அப்படியானால் அதுதொடர்பில் இராணுவ உயர் மட்டத்துக்கு தெளிவுபடுத்தினீர்களா?  

ப : புலனாய்வு பிரிவுக்கு தெளிவுபடுத்தினோம். அதேபோன்று பாதுகாப்பு சபைக்கும் தெரிவித்தோம். இதுதொடர்பில் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினோம். எமக்கு கிடைத்த தகவல்களை மட்டுமே எங்களால் கொடுக்க முடிந்தது.  

கே : கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் சிவில் சட்டம் உரிய முறையில் பேணப்படுவதில்லை. உதாரணமாக சொல்வதானால் இலக்கத் தகடுகளற்ற மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள் காணப்படுகின்றன.   இது தொடர்பில் இராணுவத்தினர் ஏதாவது நடவடிக்கை எடுத்தனரா?  

ப : தற்போதுள்ள அவசரகால சட்டத்தின் பிரகாரம் எம்மால் அவர்களைக் கைதுசெய்ய முடியும். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்று அன்று வடக்கிலும் காணப்பட்டது. ஆனால், நாம் திட்டமிட்டு அவற்றை முறியடித்தோம். ஆனால், துரதிர்ஷ்டம் என்னவென்றால் இந்தப் பகுதிகளில் பொலிஸ் நிலையங்களில் சேவைபுரிவது இப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே. அவர்கள் வீடுகளுக்கோ ஊர்களுக்கோ செல்வதாகவிருந்தால் சில நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டி வருகிறது. இதற்காகத்தான் அவர்களை நியமிக்கும் உயரதிகாரிகள் நிலைமையைப் புரிந்துகொண்டு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று  நாங்கள் அறிவுறுத்தியிருக்கிறோம்.  

கே : 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் குறித்து இராணுவம் அறிவுறுத்தப்பட்டிருந்ததா?  

ப : அந்தத் தாக்குதல் குறித்து நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால், இந்த அமைப்பு குறித்து அறிந்துவைத்திருந்தோம். அதுகுறித்து நாங்கள் அறிவுறுத்தப்பட்டுமிருந்தோம். தற்பொழுது கைதுசெய்திருக்கும் குழுவினர் ஒரே தடவையில் சரணடைந்தவர்களாகவோ கைதுசெய்யப்பட்டவர்களாகவோ இல்லை. அந்த அமைப்பு குறித்து இப்பொழுது விரிவாக கண்டறிய முடிந்துள்ளது.  

கே : முஸ்லிம் அரசியல்வாதிகள் இது குறித்து அறிந்திருக்கவில்லையென்று நீங்கள் எண்ணுகிறீர்களா?  

ப : அவர்கள் தாக்குதலோடு தொடர்புபட்டவர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், நாய்களோடு சேர்ந்து நித்திரைகொண்டால் எழும்பும் போதே உண்ணியும் ஒட்டிக்கொள்ளும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.  

கே : சர்வதேச ரீதியில் பாதுகாப்பு உதவி உபகாரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றனவா?  

ப : இலங்கையின் இராணுவத்தினரின் பலம் மிக உயர்வானது. நாங்கள் உலகத்துக்கு போர்புரிவது எப்படியென்று கற்றுக்கொடுத்தவர்கள். எமக்கு எந்தவொரு படையின் உதவியும் தேவையில்லை. மரபணு சோதனையை நடத்த பல மாதங்கள் தேவைப்படும். அதனை வெளிநாடுகளிலிருந்து ஒரே நாளில் பெற்றுக்கொள்ள முடியும். அப்படியான உதவிகளை நாங்கள் பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தொழில்நுட்ப உதவிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும். அடிப்படைவாத குழுக்கள் மத வழிபாட்டு தலங்களில் பாதுபாப்பை தேடிக்கொள்கின்றார்கள் என்று தெரியவந்துள்ளது. விகாரைகளையும் பள்ளிவாசல்களையும் சோதித்தாலும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பள்ளிவாசல்களை சோதனையிடுவதற்கு படைத்தரப்புக்கோ பொலிஸுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை.  

கே : எதிர்காலத்தில் அது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றீர்கள்?  

ப : மதத் தலைவர்கள் இது குறித்து தெளிவுபெற்று எமக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். தற்பாதுகாப்புக்காக எவரும் வாள் கத்தி போன்ற ஆயுதங்களையும் பெற்றோல் குண்டுகளையும் வைத்திருக்க முடியாது. வழிபாட்டுத் தலங்கள் என்று வேறுபாடு கிடையாது. இராணுவம் உரிய நடவடிக்கை எடுக்கும்.  

கே : இந்த அடிப்படை வாத செயற்பாடுகளை முடிவுக்குக்கொண்டுவர எவ்வளவு காலமெடுக்கும்?  

ப : காலநேரம் குறித்து எம்மால் கூற முடியாது. மிகச் சிறியதொரு கூட்டமே இதில் தொடர்புபட்டிருக்கின்றது. அதைத் தடுத்துநிறுத்த முடியும். இந்த தற்கொலை செய்துகொள்ளும் உயிர்களை பலியெடுக்கும் இவர்களை வழிதவறிகளாகவே நாங்கள் கருதுகிறோம். அவர்களுடைய அறிவுக்கு கிட்டியவகையில் தங்களது மதத்தை பின்பற்றாதவர்களை இல்லாதொழிக்கும் ஒரு மனோநிலைதான் இதனை நாங்கள் இல்லாமலாக்க வேண்டும். அதற்கு மதத் தலைவர்கள் எங்களுக்கு பூரணமாக ஒத்துழைப்பார்கள் என்று நம்புகின்றோம். விகாரமடைந்த மனங்கள்  சீராக்கப்படவேண்டியது இங்கு முக்கியம். அதன்மூலம் இதற்கொரு தீர்வு காணமுடியும்.  

கே : கைதுகளின் போது அரசியல்வாதிகளின் தலையீடுகள் ஏற்படவில்லையா?  

ப : அழுத்தங்கள் வந்தன. மன்னாரில் முக்கிய அமைச்சரொருவர் என்னுடன் தொடர்புகொண்டு கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு கேட்டார். நான் சொன்னேன், ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர் என்னுடன் கதைக்குமாறு. அதாவது அடிப்படைவாதிகளை ஒன்றரை வருடங்கள் வரை எம்மால் தடுத்துவைத்திருக்க முடியும் என்பதாகும்.  

கே : புலனாய்வு பிரிவை செயலிழந்ததனால் இவ்வாறான நிலையேற்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகிறதே...?  

ப : செயலிழந்து போனதாக சுமத்தும் குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். புலனாய்வு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்ட அவர்கள் பின்னடைவைக் கண்டனர். மனநிலையில் பதிக்கப்பட்டிருக்கலாம். 'நான் புலனாய்வு பிரிவில் இருந்துகொண்டே இவ்வாறு கழுத்தைக் கொடுக்கலாமா?' என்று எண்ணமுடியும். நாம் ஒரு நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டு செயற்படுகின்றோம். ஆனால், புலனாய்வு பிரிவால் அப்படி முடியாது.  

கே : அந்தப் புலனாய்வு பிரிவுகளுக்கிடையில் தகவல்கள் பரிமாறிக்கொள்வதில் குறைபாடுகள் காணப்படுகின்றதல்லவா?  

ப : நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல் சிலர் தகவல்கள் திரட்டுவதில் பின்வாங்கியிருப்பது உண்மைதான். ஆனால், நாம் கட்டாயமாக தகவல்கள் பரிமாறிக்கொண்டுதான் ஆகவேண்டும். தேசிய பாதுகாப்புக்காக நிறுவனங்கள் இருக்கின்றன. அந்த நிறுவனங்களில்கூட சில அதிகாரிகள் பொறுப்புக்களை தவறவிட்டிருக்கின்றார்கள்.

7 கருத்துரைகள்:

முஸ்லிம்கள் இராணுவத்திற்கு அணைத்து ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். தமிழ் பயங்கரவாதிகளை 99% தமிழ் சமூகம் பாதுகாப்பதை போல் நாம் பயங்கரவாதிகளை பாதுகாப்பதில்லை என்பதை சிங்களவர்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும். கொடூரமான புலி தமிழ் பயங்கரவாதத்தை ஒழிக்க இராணுவத்திற்கு ஒத்துழைப்பை வழங்கியதுபோல் இந்த பயங்கரவாதிகளை ஒழிக்கவும் உதவிகளை புரிவோம்

கேள்வி கேட்டவன் யாரு?? பச்சை துவெச கேள்வி கேக்குறான்?

@NGK, கிழக்கில் உள்ள 99% முஸ்லிம்கள் ISIS ஆட்கள் தானே

நிச்சயமாக பயங்கரவாதிகளுக்கு நாம் ஒரு போதும் பாதுகாப்பலிக்க போவதில்லை

இலங்கை சோனகர்களுக்கு என்று அழகான தமிழ் வழி வந்த கலாச்சாரம் ஒன்று இருக்கிறது. அதை அழித்து இலங்கை முஸ்லிம்கள் அரபுகள் என்று சொல்லி அரபு கலாச்சாரத்தை திணிப்பவர்கள் எல்லாம் அரபு பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள். இராணுவம் முன்னாள் புலி புலனாய்வு பிரிவை களம் இறக்குகிறது. “முஸ்லிம்கள் உங்களை அழிக்க எங்களுக்கு உதவினார்கள். இப்போது நீங்கள் உதவ வேண்டும்”. என்று இராணுவம் கேட்டு இருக்கிறது. வருகிறது புலிப்படை முஸ்லிம்களை மீண்டும் சோனகர்களாக்க - இராணுவத்தின் பின் பலத்துடன்.

Post a Comment