Header Ads



காத்தான்குடியில் தீவிரவாத குழுக்கள், ஹிஸ்புல்லாவுக்கு நிச்சயமாக சம்பந்தம் உள்ளது - இனவாதம் பேசும் சுமந்திரன்

தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தவர்கள் மிகவும் முக்கியமாக காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள். காத்தான்குடியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களில் ஹிஸ்புல்லா அதி முக்கியமானவர். முன்னைய நாட்களில் முஸ்லிம் தீவிரவாத கருத்துக்களை வெளிப்படையாகவே ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தார் என என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எனவே தீவிரவாத குழுக்கள் காத்தான்குடியில் உருவாவதற்கும் அவருக்கும் நிச்சயமாக சம்பந்தம் உள்ளது. அந்த பின்னணி ஆராயப்படவேண்டும். விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னதாக காத்தான்குடியை மையமாக கொண்டு வன்முறையை உபயோகிப்பதற்கென்று பலர் ஏற்கனவே தயார் படுத்தப்பட்ட நிலையில் இருந்திருக்கின்றார்கள் என்பது தெரியவந்திருக்கின்றது.

இது நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் செயற்பாடு, இந்த காலத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை பலர் பணம் கொடுத்து வளர்த்திருக்கின்றார்கள். விசேடமாக அவர்களுக்கு நிதி கொடுக்கப்பட்டிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் நாடாளுமன்றத்தில் அண்மையில் பேசும்போது சில விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தேன், இந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பிற்கும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரிற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளா

4 comments:

  1. புலிகலின் காலத்தில் ஊமைகளாக இருந்த நீங்கள் எல்லாம் இப்போ வாய் திறந்து பேசுவது ஏனோ?

    ReplyDelete
  2. இவனுக்கு வேல இல்லயே.முதலில் இவனையும்,இவன் கட்சியினரையும் விசாரிக்க வேண்டும்,புலிகள் தலதா மாளிகை க்கும் இன்னும் பல இடங்களில் நடத்திய தற்கொலை குண்டு வெடிப்புக்கலுக்காகவும்,30 வருடங்களாக இந்த நாட்டில் இடம் பெற்ற அழிவுக்காகவும்.

    ReplyDelete
  3. LTTE பயங்கரவாதிகளின் பினாமிதான் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு. பயங்கர வாதிகளின் கூடாரம். இதைப்பற்றிப்பேசுவதற்கு உங்களுக்கு யோக்கியதை இல்லை.

    ReplyDelete
  4. நடுநிலையாக எமக்கு சார்பானவற்றைப் பேசும்போது நல்லவர் எம்மை விமர்சனம் செய்தால் புலி என்ன ஞாயம்டா? நல்லது கெட்டதை பகுத்தறிய முடியாமல் தான் மாட்டுப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். முஸ்லிம்களும் தலைவராகக்கொள்ள கூடிய நற்பண்புகளைக் கொண்டவர் தான் கெளரவ. சுமந்திரன் அவர்கள். மிகவும் ஆறுதலாக அவசரப்படாமல் அறிக்கை விட்டதிலிருந்தே அவரின் நற்பண்பு வெளிப்படுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.