May 23, 2019

இது இஸ்லாமிய இதயங்களின் ஏக்கத்துடன் கூடிய வேண்டுகோள், கண்ணீரோடு சமர்ப்பிக்கும் விண்ணப்பம்...!!

-எஸ்.ஹமீத்-

எல்லா முஸ்லிம் கட்சிகளும் உடனடியாக இணைந்து தனித்த, தனித்துவ, தன்மானமிக்க ஒரே முஸ்லிம் அரசியல் கட்சியாகப் புதிய பரிணாமம் எடுங்கள். அவ்வாறே சகல இஸ்லாமிய இயக்கங்களும் ஒரே குடையின் கீழ் ஒன்றுபட்டு சக்திவாய்ந்த, ஒற்றுமை நிறைந்த, உன்னதமிக்க ஒரே இயக்கமாகுங்கள். இதுவே இப்போதைக்கும் எதிர்காலத்துக்கும் இலங்கைவாழ் இஸ்லாமிய உம்மத்துக்கு இன்றியமையாத தேவையாகும். 

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு பத்து வீதம் கூட முழுமையாக இல்லாத நமது சமூகம் பல பத்து அரசியல் கட்சிகளாகவும் அதனைவிட அதிகமான ஜமாஅத்களாகவும் சிதறிச் சின்னாபின்னமாகக் கிடப்பதுதான் நமது இன்றைய சீரழிவுக்குப் பிரதான காரணமென்பது சிந்தனை வளமுள்ளோர்க்குத் தெளிவாகவே புரியும். 

நீட்டுவதும் ஆட்டுவதும் கொண்டும், தக்பீரை நெஞ்சிலா, வயிற்றிலா கட்டுவது என்பதிலும், தராவீஹ் எட்டு ரக்அத்தா, இருபது ரக்அத்தா என்பது போன்ற சிறிய விடயங்களிலும் பிளவுண்டு பல்வேறு கூட்டங்களாகப் பிரிந்து நிற்கின்ற நாம்  இனியாவது ஓரணியாகத் திரண்டு, உரிய ஒரே தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடாவிட்டால், எதிர்காலம் பல சஹ்ரான் போன்ற பயங்கரவாதிகளை நமது சமூகத்திற்குள்ளிருந்து உற்பத்தி செய்யும் என்பது நிதர்சனம். 

ஒற்றுமைப்பட்ட ஒத்த அமைப்புக்குள்ளிருந்து அவரவர் தாம் சரியென்று விளங்கிக்கொண்ட வகையில் தங்கள் வணக்க வழிபாடுகளை மேற்கொள்ளட்டும். அல்லாஹ் உள்ளங்களை நன்கறிந்தவன். விரலை ஆட்டினானா, இல்லையா என்பதை மட்டும் வைத்து ஒரு உண்மையான தொழுகையாளிக்கு சொர்க்கமா, நரகமா என்று, அனைத்தும் அறிந்த அந்த அல்லாஹ் தீர்மானம் செய்யவே மாட்டான் என்ற நம்பிக்கை இல்லாதவன் அல்லாஹ்வின் மகத்தான ஆளுமையைக் கொச்சைப்படுத்துகிறான் என்பதுதான் நமது நிலைப்பாடு. 

இவ்வாறுதான் ஏனைய முரண்பாடுகளிலும் உடன்பாட்டோடு, ஒன்றுபட்டு, ஒரே தனித்த இஸ்லாமிய ஜமாஅத் ஆவோம்! தப்லீக், தவ்ஹீத் என்பது போன்ற பிரிவினைப் பெயர்கள் களைந்து ‘ஜமாஅத்துல் முஸ்லிம் உம்மத்’ என்ற ஒரே பெயர் கொள்வோம்!

இவ்வாறே, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், கிழக்கு காங்கிரஸ், மேற்குக் காங்கிரஸ், நல்லாட்சிக்கான அமைப்பு, பொல்லாட்சிக்கான கொழுப்பு , வடக்குக்கான பொழைப்பு, தெற்குக்கான உழைப்பு என்றெல்லாம் இயங்கும் பன்னூறு அரசியல் கட்சிகளும் அல்லாஹ்வின் பெயரால், சமூகத்தின் நலனை மட்டும் கருத்திற் கொண்டு ஒரே அரசியல் கட்சியாக உருவாகவும் உருமாறவும் வேண்டும். இந்த ஒரே கட்சிக்குள் கபீர் ஹாஷிமும் ஹலீமும் ஹஸனலியும் வை.எல்.எஸ். ஹமீதும் பௌஸியும் மரைக்காரும் றஹ்மானும் பசீர் சேகுதாவூதும் அதாவுல்லாஹ்வும் அவர்களது சகாக்களும் ஹக்கீமும் ரிசாதும் அவர்தம் மொத்த ஆதரவாளர்களும் இன்னுமுள்ள அனைத்து முஸ்லிம் வாக்காளர்களும் உள்வாங்கப்பட வேண்டும். ஒரேகட்சி...ஒரே சின்னம்....ஒரே கொள்கை!

இன்ஷா அல்லாஹ்...இந்த மாற்றங்கள் நடந்தால், எண்ணிப் பாருங்கள்...தற்போது கவிழ்ந்து தொங்கும் நமது தலைகள் நிமிர்ந்து உயரும். நம் அச்சம் அகலும். நமது சமூகத்தின் இருள் மடியும். வெளிச்சம் பரவிப் பரவசம் தரும். நமக்கான உரிமைகள் நமது காலடி தேடித் தானாகவே ஓடிவரும்!

‘ஒற்றுமை என்னும் கயிறைப் பற்றிப் பிடியுங்கள்!’ 

இது என்னைப் போன்ற பல இலட்சம் இஸ்லாமிய இதயங்களின் ஏக்கத்துடன் கூடிய வேண்டுகோள். கண்ணீரோடு சமர்ப்பிக்கும் விண்ணப்பம். 

நீங்கள் எல்லோரும் சேர்ந்து நிறைவேற்றுவீர்களா?

14 கருத்துரைகள்:

மொத்தமாக அழிந்து நாசமாக போனாலும் இந்த சுயநல பிடித்த நாய்களிடமிருந்து எதுவும் கிடைக்காது

இப்போது அனைத்து Muslim கலும் விரும்புவது இதைத்தான்.தயவு செய்து ஒன்ரு படுங்கல்.போதும் இனி நாம் அனுபவித்த சோதனைகள்.நாம் பிரிந்து உள்ளதால் பட்ட சோதனைகள் போதும்.அல்லாஹ்தான் பெரியவன் என நினத்து ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழ்வோம்

Now the time has come to go with the National politics as it is better for the Muslims who are living out side the Eastern Province. Regional politics encourage our leaders to become as political traders and some time as commission agents. Therefore we kindly request our so called leaders not to play with the 2.2 mn muslims in Sri Lanka and let them to mix with the major parties directly without any agent for their betterment. We have seen our commission agents have betrayed us most of the time.

இதைத்தான் கடந்த பல மாதங்களாக நானும் கூறுகிறேன்.அனைவரையும் அனத்தையும் அல்லாஹ் அறிந்தவன் அவன் பார்த்துக் கொள்ளட்டும்.நீங்கள் ஒற்றுமைப் படுங்கல்

வேதாளம் மறுபடியும் முருங்கை மரமேறுகிறது.
வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாண முஸ்லிம்கள் அங்குள்ள பெரும்பான்மை சமூகங்களுடன் இணைந்த அரசியல் பயணத்தை முன்புபோல் மீண்டும் ஆரம்பிப்பதே சிறந்தது.

ஆம் இது தான் மக்களுக்கு அதி முக்கிய , உறுதிமிக்க ஒரு பலமான சமூக அமைப்பாக மாறுவதற்கு உயிர் நாடி இந்த ஒற்றுமை அடி நாதம் . இதை எமது தலைமைகள் நிறைவேற்றுமா

ஆம் இது தான் மக்களுக்கு அதி முக்கிய , உறுதிமிக்க ஒரு பலமான சமூக அமைப்பாக மாறுவதற்கு உயிர் நாடி இந்த ஒற்றுமை அடி நாதம் . இதை எமது தலைமைகள் நிறைவேற்றுமா

மாஷா அல்லாஹ்...உங்கள் கருத்தை மதிக்கின்றேன் வாழ்த்துக்கள் அல்லாஹ் உங்கள் என்னத்தை கபுல் ஆக்கட்டும் ஆமீன்....வாருங்கள் ஒன்று படுவோம் ஒற்றுமை ஆகுவோம்.....

நீங்க சொல்றது எல்லாம் முற்றுமுழுக்க சரி. இவங்க இதுக்கெல்லாம் ஒத்து வரமாட்டாங்க ஐயனே. பதவி, பதவி, பதவி உரிமையை விற்று சலுகைகளை எதிர்பார்க்கும் கூட்டங்கள்தான் இப்போது நம் அரசியலில் இருக்கும் காற்றாடிகள். முதலில் வெளியில் இருக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளை உள்வாங்கி ஒரு கட்டமைப்பினை உருவாக்கி முதலில் இவர்களுக்கும் மக்களுக்கும் அரசியல் தெளிவினை ஏற்படுத்த வேண்டும். பயிற்சி வகுப்புகளை நடாத்துதல் வேண்டும். தியாகங்கள் செய்யக்கூடிய மனோபாவத்தை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம் தலைவர்கள் எனத் தமக்குத் தாமே பட்டம் சூட்டிக் கொண்டு அறிக்கைகள் விடுபவர்களுக்கு முகத்தில் சூடு போட்டு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். பேச்சினைக் குறைக்க வேண்டும். செயலினைக் காட்ட வேண்டும். எல்லோருக்கும் பதவிகள் தேவை என்றால் நாங்கள் அடுத்து குடிபெயரக்கூடிய நாடுகள் எவை என ஒரு பட்டியலைத் தயாரிக்க வேண்டியதுதான். அங்கேயும் எங்களைச் சேர்க்க மாட்டார்கள். ஏனென்றால் எங்களுடைய attitude பற்றி அவர்களுக்கு தெரியும்தானே!

Yes i agree with this article. Everybody have to force to create this situation.if everybody need our indipentant it will be possible.

ஒரு கட்சியாக ஒன்று படுவதில் சாத்தியமில்லை என்றால் கட்சிகளை
கலைத்துவிட்டு தேசிய கட்சிகளோடு
இணைந்து செயல்படுங்கள்.ஆனால்
சமயரீதியாக ஒற்றுமை படுவது அவசியம்.எமது சமய,கலாசார விடயங்கள் பற்றியும் எமது அரபிக்
கலாசாலைகள் கல்வி முறைமைகள்
பற்றியும் பல்வேறு விமர்சனங்களும்
முடிவுகளும் முஸ்லீம் அல்லாதவர்களால் வெளியிடப்பட்டு,
முஸ்லீம்கள் இந்தநாட்டிலே இவ்வாறுதான் வாழவேண்டுமென
வற்புறுத்துவதற்கான ஆயத்தங்கள்
நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இச்சந்தர்பத்தை நாம் எதிர்கொள்வதாக
இருந்தால் மார்க்கரீதியான ஒற்றுமை
அவசியம் என்பதை நாம் இனியும் உணராமல் இருப்போமாக இருந்தால்
எம்மை காப்பாற்ற அந்த இறைவனும்
கருணைகாட்டுவானா? சிந்தியுங்கள்
சகோதரர்களே.

Inshaallah...ondru pattaal undu valvu, illaiyal undu saavu...

It's a great opinion brother. But they will never listen to us. But, couple of months later they will forget everything what was happens to your community and they will fight each other for the presidential election.

I think our Ulamas & Scholars must initiate this with all our Muslim politicians. It is achievable

Post a comment