Header Ads



"ஒரு தரப்பினரது முறையற்ற செயற்பாடே, இஸ்லாத்தின் புனித தன்மையினை கேள்விக்குறியாக்கியுள்ளது"

பள்ளிவாசல்களில் இருந்து மீட்கப்படும் ஆயுதங்கள் தொடர்பில்  பாரிய சந்தேகங்கள்  காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர்  சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

ஆயுதங்கள் பள்ளிவாசலின்  சுற்றுசூழலை துப்புரவு செய்ய வைத்திருப்பதாக முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர்  குறிப்பிடுவது பொறுப்பற்ற  தன்மையினை  வெளிப்படுத்துவதாகவும் தீவிரவாதத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று -03- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முஸ்லிம் பள்ளிவாசல்களில் பொருத்தமற்ற விதமாக ஆயுதங்களை  வைத்திருந்தமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத மற்றும் அமைதி வழி போதனைகளை போதிக்கும் இடங்களில் ஆயுதங்களை  வைத்திருப்பது மத கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டன. 

இவ்வாறான  செயற்பாடுகளே இன்று தேசிய  பாதுகாப்பினை   பலவீனப்படுத்தியுள்ளது. ஒரு  தரப்பினரது முறையற்ற செயற்பாடுகள்  இன்று இஸ்லாத்தின் புனித தன்மையினை கேள்விக்குறியாக்கியுள்ளமை வருத்தத்திற்குரியது எனவும் அவர் இதன்போது கூறினார்.

(இராஜதுரை ஹஷான்)

1 comment:

  1. நீங்க நல்ல நடிக்கிறீக சாரு

    ReplyDelete

Powered by Blogger.