Header Ads



ஹிஸ்புல்லாவுக்கு எதிரான ஹர்த்தால் மண் கவ்வியது - முஸ்லிம் பகுதிகள் சுறுசுறுப்பு, வன்முறைச் சம்பவங்களும் பதிவு

மூதூர் - கிண்ணியாவில் இன்று -10- வெள்ளிக் கிழமை ஹர்த்தால் எதுவுமின்மை வழமை போன்று மக்களின் நடமாட்டம் காணப்படுகிறது.

வெள்ளிக் கிழமை ஜூம்ஆ நேரத்தில் கடைகள் மூடுவது வழக்கம் இருந்தபோதிலும் அரச திணைக்களங்கள் வங்கிகள் மூடப்படவில்லை சேவைகள் இடம் பெற்று வருகிறது.

புனிதமிகு றமழான் காலமாகையால் மிகவும் விமர்சையாக வழமைக்கு மாறாக வெள்ளிக் கிழமையிலும் கடைகள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹர்த்தால் எதுவுமின்மை மக்கள் வழமை போன்று தங்களது செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹஸ்பர் ஏ ஹலீம்

2
இந்நிலையில் சில அசம்பாவித சம்பவங்களும் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளன. 

கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று சர்தாபுர பகுதியில் கல்வீச்சுக்கு இலக்காகியது. மற்றும் 3ஆம் கட்டை பகுதியில் போக்குவரத்தை மறித்து டயர் எரிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் மூதூர் நோக்கி சென்ற பஸ்ஸும் கல்வீச்சுக்கு இலக்காகியது. எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. 

எவ்வாறாயினும் முஸ்லிம் பிரதேசங்கள் வழமை போன்று காணப்பட்டுள்ளது. 

2 comments:

  1. ஏன்டா டேய், ஒங்களுக்கு வேற வேலையே இல்லையாடா. வேணும்ணா சொல்லுங்க. பத்து வெண்காயக் கூடை வாங்கித் தாரேன். காத்தடிச்சு சாகுங்கடா.

    ReplyDelete
  2. அவசரகால சட்டத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்க யார் அனுமதிகொடுத்தது. இதன் பின்னாலிருக்கும் தமிழ் டயஸ்போரா பயங்கரவாதிகளை அரசாங்கம் ஏன் கைதுசெய்ய தவறுகிறது?

    ReplyDelete

Powered by Blogger.