May 11, 2019

பள்ளிவாசல்களில் இருந்து வாள்கள் கண்டுபிடிக்கப்படுகின்றமை, தாக்குதல் ஒன்றுக்கான முன்னேற்பாடாகும் - சிங்கள ராவய

இந்துக்களும், தமிழர்களும் எம்முடன் மிகநெருங்கிய பிணைப்பைக் கொண்டவர்கள். அவர்களது மதம் மற்றும் கலாசாரத்திற்கும், எமது கலாசாரத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. அதனூடாக நாம் ஒன்றிணைந்து வாழக்கூடிய பின்னணியொன்று உருவாகியிருக்கின்றது. எனினும் அந்தப் பிணைப்பை தமிழ் அரசியல்வாதிகளே திட்டமிட்டுத் துண்டிக்க முயற்சிக்கின்றார்கள். அதற்கு ஒருபோதும் இடமளிக்காமல் ஒருமித்து செயற்பட வேண்டும் என்று சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார். 

இஸ்லாமிய தீவிரவாத செயற்பாடுகளினால் சிங்கள, தமிழ் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு எதிராக தைரியமாகக் குரல் கொடுக்கக்கூடியவர் ஞானசார தேரர் ஒருவர்தான் என்ற காரணத்தினால் அவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் வலுப்பெற்றுள்ளது என்று குறிப்பிட்ட சுதந்த தேரர், ஞானசார தேரரை வெசக் பண்டிகைக்கு முன்னர் பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம் என்றும் கூறினார்.

இந்நிலையில் அண்மையில் நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களை அடுத்து மீண்டும் ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. அத்தோடு 'இன்னமும் குண்டுத்தாக்குதல் அச்சுறுத்தல் இருக்கின்றது. மேலும் 50 பௌத்த விகாரைகள் தாக்குதலுக்கு இலக்காகலாம்" என்று கடந்த மாதம் 29 ஆம் திகதி ஞானசாரர் வெளியிட்ட கருத்தையடுத்து இந்த வேண்டுகோள் வலுப்பெற்றிருக்கிறது.

எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு ஞானசாரரின் விடுதலையை வலியுறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகக் கூறிய சுதந்த தேரர், இதுகுறித்து மேலும் கூறுகையில், 

தற்போதைய சூழ்நிலையில் விகாரைகள் மாத்திமன்றி இந்து ஆலயங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அதேவேளை இஸ்லாமிய பள்ளிவாசல்களில் இருந்து வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் அண்மையில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன.

பெருந்தொகையிலான வாள்களை வைத்திருப்பதிலிருந்து இது தாக்குதல் ஒன்றுக்கான முன்னேற்பாடு என்பது தெளிவாகப் புலனாகின்றது. எனினும் சில முஸ்லிம் மத மற்றும் அரசியல் தலைவர்கள் அவ்வாறு ஆயுதங்களை வைத்திருந்தமை தவறு என்பதை ஏற்றுக்கொள்ளாமல், அதற்கு நியாயம் கற்பிக்க முற்படுகின்றார்கள். இத்தகைய செயற்பாடுகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகும்.

6 கருத்துரைகள்:

ஞானசாரரின் விடுதலைக்காகத்தான் இந்த குண்டு நாடகமா?
வாள்களை வைப்பதும் பின்னால் பொலிஸுக்கு தகவல் வலங்குவதும் உங்கள் பிள்ளை அமித் வீர சிங்கதானே!
மைத்திரியின் இருதி ஆட்சிக்காலமென்றால், ஞானசாரவிற்கு பொதுமன்னிப்பு வழங்கட்டும்.இது நீதிமன்ற அவமதிப்புக்குள் மீண்டும் வந்திடும்.

முன்பெல்லாம் இந்துக்களாகிய தமிழர்கள் குடுமி வைத்திருந்தார்கள். மேலாடையின்றியே அங்கும் இங்கும் சென்றார்கள். அவர்களது கல்வி கூட குருகுலத்திலேயே (திண்ணைப்பள்ளி) நடைபெற்றது. காதில் கடுக்கண் அணிந்திருந்தார்கள். செருப்பே அணிய மாட்டார்கள். தங்கள் மதத்தில் மிக தீவிர பக்தியுடையவர்களாக இருந்தார்கள். தமிழைத் தவிர வேறு மொழி தெரியாதவர்களாகவே இருந்தார்கள். அவர்களுல் பண்டிதர்களும் புலவர்களும் புரவலர்களும் நிறைந்தே இருந்தார்கள். தமது தொழில்வாண்மையின் மூலமாக பெரு வணிகம் செய்து தம்மையும் தம் நாட்டையும் செழிப்புற வைத்திருந்தார்கள். தமது ஊரைத் தவிர வேறு ஊர் சென்றே அறியமாட்டார்கள். அந்தக்காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை அவர்களும் அவர்களது பெண்டிரும் வீர தீரர்களாகவே இருந்தார்கள். இதெல்லாம் கிபி 2ம் 3ம் நூற்றாண்டிய கதை. இதையெல்லாம் மேலெலுந்தவாரியாகப் படித்துவிட்டு அவர்களை முருங்கை மரத்தில் ஏற்றலாம் என்றால் அது முடியாத கதையாகிவிடும் என்பதனை கௌரவ ஐயா அவர்களுக்கு மிகப் பணிவாக கூறிவைக்க விரும்புகின்றேன். இந்த குணாதியசம் உங்ககிட்ட ஒரு முப்பது வருசத்திற்கு முன்னே வந்திருக்குமுன்னா உங்களால் தமிழர்களுக்கு ஏற்பட்ட எவ்வளவோ அழிவைத் தடுத்திருக்கலாம் அல்லவா?

இந்த பிக்கு சொல்லுவது தான் உண்மை.

மனிதர்களை வெட்ட பயன்படும் இப்படியான வாள்கள் ஏன் பள்ளிவாசலகளில் சேகரித்து வைக்கபடுவதற்கு யாராவது காரணங்கள் சொல்லுங்களேன்

Ajan

Swords that were seized are in police custody along with
those who had them ! Be patient till they are produced
before courts and for their answer ! We Muslims also want
to know why swords in Mosques ? How many Mosques had
swords out of hundreds of Mosques and where and where
they were found ? Tamils had insurgency and Sinhalese
had Sinhalese insurgency and neither all Sinhalese nor
all Tamils were called terrorists ! So nobody will
succeed trying to humiliate entire Muslim community .

To Ajan:))அந்த வாள்கள் வைத்து இருக்கின்றன உங்களை போல கொட்டமணியை வெட்டாத மனிதர்களின் கொட்டையை அடியோடு வெட்டுவதட்கு அப்ப உங்களுடைய திமிறுகள் அடங்கும்.

சிங்கள இனவாதிகளே குறித்துவைத்துக்கொள்ளுங்கள் ஒரு நாள் தமிழ் பயங்கரவாதம் உங்கள் கழுத்தில் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் கத்தியை வைக்கும் அன்று முஸ்லிம்கள் தேவைப்படுவார்கள்.

Post a comment