Header Ads



இஸ்லாமியர் பகுதிகளில் தேடுதல் பாரிய சுற்றிவளைப்பாக நடைபெறவில்லை, இதனால் இஸ்லாமியப் பயங்கரவாதிகளிடமிருக்கின்ற ஆயுதங்கள் மறைக்கப்படும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது

தமிழ் மக்களைக் கைது செய்வதிலும், குற்றவாளியாக்குவதிலும், அவர்களைச் சிறையில் அடைப்பதிலும், அவர்களுக்குப் பயங்கரவாதி பட்டத்தைச் சூட்டுவதிலும் மிகத் தீவிரமாகச் செயற்பட்ட இந்தப் புலனாய்வுப் பிரிவினர் ஏன் இஸ்லாமியப் பயங்கரவாதம் வளர்ந்து வருவதை அறியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் பாதுகாப்புத் தரப்பு கடந்த காலத்தில் விட்ட தவறின் காரணமாகத் தான் பாரிய துன்பியல் ஒன்று இடம்பெற்றது எனவும் அப்பாவி இஸ்லாமியச் சகோரர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பைக் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்,

தற்போது அவசரகால சட்டத்தினால் நாட்டில் பல்வேறு கைதுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கடந்த 21ஆம் திகதி இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் இன்று வரை மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இத்தாக்குதல் தொடர்பில் முன்னமே தெரிந்திருப்பினும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக அது தொடர்பான மேலதிக ஆராய்வுகள் நடைபெறவில்லை.

தங்கள் அரசியலை வளர்க்க வேண்டும் என்பதற்காக நடத்திய நாடகம் அப்பாவித் தமிழ் மக்களை இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காக்கியுள்ளது.

இந்தக் குண்டுத் தாக்குதலின் பின்னர் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது நாங்கள் பாரிய அச்சுறுத்தலுக்குள் உள்ளாகியிருக்கின்றோம். விசாரணைகளில் இது தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினால் சஹ்ரானின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

இக் குழுவினர் புலனாய்வுப் பிரிவிலும் இருந்துள்ளார்கள் என்ற கருத்தும் பேசப்படுகின்றது. கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் கோத்தபாய பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது புலனாய்வுப் பிரிவில் பல ஆயுதக் குழுக்கள் இருந்தன.

கருணா அம்மான் தலைமையிலான குழு, பிள்ளையான் தலைமையிலான குழு, தற்போது இந்த தொஹீத் ஜமாத் அமைப்பும் இருப்பது தெரிய வந்துள்ளது.

அண்மையில் வவுணதீவுப் பொலிஸார் படுகொலையின் போது முன்னாள் போராளிகளை மாத்திரம் சந்தேகித்து அவர்களைக் கைது செய்து தடுத்து வைத்திருக்கின்றார்கள். எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கூட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஆனால் தற்போது குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள் தான் அதற்கான சூத்திரதாரிகள் என்பது தற்போதைய விசாரணையில் தெரியவந்திருக்கின்றது.

இப்படியாக இருந்தால் இலங்கையின் புலனாய்வுப் பிரிவு எவ்வாறு இயங்கியிருக்கின்றது என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

தமிழ் மக்களைக் கைது செய்வதிலும், குற்றவாளியாக்குவதிலும், அவர்களைச் சிறையில் அடைப்பதிலும், அவர்களுக்குப் பயங்கரவாதி பட்டத்தைச் சூட்டுவதிலும் மிகத் தீவிரமாகச் செயற்பட்ட இந்தப் புலனாய்வுப் பிரிவினர் ஏன் இஸ்லாமியப் பயங்கரவாதம் வளந்து வருவதை அறியவில்லை.

சஹ்ரான் குழுவினர் ஆயுதம் தொடர்பான விடயங்களைக் கையாளுகின்றார்கள் என்ற தகவல் 2017ஆம் ஆண்டிலேயே பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இஸ்லாமிய சகோதரர்களினாலேயே இவ்விடயம் சொல்லப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பில் பொலிஸார் தீவிரமான நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இவ்வாறான துன்பியல் நடந்திருக்காது. பொலிஸார் அதில் கரிசனை காட்டவில்லை.

குண்டுத் தாக்குதல் நடைபெறப் போகின்றது என்று புலனாய்வுப் பிரிவினருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கின்றது. தற்போது கைது செய்யப்பட்டிருப்பதும் புலனாய்வு பிரிவில் இயங்கிய தௌஹீத் அமைப்பு.

இதில் பாரிய சந்தேகம் உள்ளது. நாட்டில் தலைவருக்குத் தெரியாது, பிரதமருக்குத் தெரியாது, ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அவருடன் இருந்தவர்களுக்குத் தெரிகின்றது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றா, அரசியல் தரப்பில் சிலர் பின்னணியில் இருந்தார்களா போன்ற சந்தேகங்கள் எழுகின்றன.

சிங்கள, தமிழ் என கத்தோலிக்கர்கள் இருக்கின்றார்கள். ஆனால் தமிழ் கத்தோலிக்கர்களின் பிரார்த்தனையில் தான் இச் சம்பவம் நடைபெற்றிருக்கின்றது. எனவே ஒட்டுமொத்த இலக்கு தமிழ் மக்களை மையப்படுத்தி இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

தற்போது அவசரகாலச் சட்ட விதி மனித உரிமையைப் பறிக்கக் கூடிய வகையில் பாதுகாப்புத் தரப்பினருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்பெல்லாம் தேடுதல் நடவடிக்கை நடைபெறும் போது தமிழர் சார்பில் பிரச்சனை ஏற்பட்டால் அப்பகுதியை முற்றாகச் சுற்றி வளைத்து விடுவார்கள். அனைவரையும் ஓரிடத்திற்கு அழைத்து கடுமையான தேடுதல் இடம்பெறும். ஆனால் தற்போது மட்டக்களப்பில் இஸ்லாமியப் பகுதிகளில் தேடுதல் நடைபெறுகின்றது. அது பாரிய சுற்றிவளைப்பாக நடைபெறவில்லை. இதனால் இஸ்லாமியப் பயங்கரவாதிகளிடமிருக்கின்ற ஆயுதங்கள், வெடிபொருட்கள் எல்லாம் மறைக்கப்படுகின்ற சந்தர்ப்பம் அதிகமாகக் காணப்படுகின்றது.

இதில் பல அரசியல்வாதிகள் பின்னணியாக இருக்கின்றார்கள் என சந்தேகம் இருக்கின்றது. இந்த தௌஹீத் அமைப்புடன் உள்ள தொடர்பு பற்றி தற்போதைய கிழக்கு ஆளுநரை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

ஆனால் அரசாங்கம் அதில் கூடிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. ஏனெனில் அவர்களுக்கு அரசியல் தான் முக்கியம், இஸ்லாமிய மக்களின் வாக்குகள் தான் முக்கியம். பயங்கரவாதிகளை அடக்க வேண்டும் என்பது சொல்லில் தான் இருக்கின்றது.

தற்போது தமிழர்களால் ஏதும் இவ்வாறன நிலைமை நடைபெற்றிருந்தால் தமிழ் அரசியல்வாதிகளைக் கைது செய்திருப்பார்கள். ஆனால் தற்போது காத்தான்குடியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தீவிரமான செயற்பாட்டை நாம் காணவில்லை. ஒரு குறிப்பிட்ட குறிப்பிட்ட இடங்களில் மாத்திரம் சுற்றிவளைப்புகள் நடைபெறுகின்றது என செய்திகள் வருகின்றது.

அண்மையில் ஓமடியாமடு பிரதேசத்தில் மாகவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணி குத்தகைக்குப் பெற்று குண்டு வெடிப்புடன் தொடர்புப்பட்டவர்கள் பாவித்து வந்திருக்கின்றார்கள்.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தமிழர்களுக்கு காணி வழங்கும் போது இரண்டு ஏக்கர் வயல்நிலம், அரை ஏக்கர் மேட்டு நிலம் வழங்கப்படுகின்றது ஆனால் இஸ்லாமியர்களுக்கு பல ஏக்கர் கணக்கிலே குத்தகை என்ற பெயரில் கொடுக்கின்றார்கள்.

அண்மையில் மிக மோசமான சம்பவம் மட்டக்களப்பில் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்னர் ஏறாவூர்ப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பல அரச அதிகாரிகளின் உத்தியோக முத்திரைகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றது.

தங்களது மக்களுக்கு காணி இல்லை என்று கோசம்போடும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தற்போது எடுக்கப்பட்டிருக்கும் கள்ள முத்திரைகள் பற்றிப் பதில் சொல்லியாக வேண்டும். அந்தப் பகுதி அரசியல்வாதிகளும் விசாரிக்கப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இஸ்லாமிய சகோதரர்கள் உத்தியோகத்தர்களாக இருந்த போது பல காணி உறுதிகள் காணாமல் போயிருக்கின்றன.

தற்போது அவர்கள் தமிழர் காணிகளுக்கு குத்தகை, பழைய உறுதி என்றெல்லாம் கொண்டு வருகின்றார்கள். எனவே தற்போது நடைபெற்றிருக்கும் சம்பவத்தை உற்று நோக்கும் போது காணி தொடர்பில் பல கள்ள வேலைகள் நடைபெற்றிருக்கின்றது என்பது வெளிப்படையாகியுள்ளது.

எனவே இஸ்லாமிய மக்களால் அண்மைக் காலத்தில் தமிழ் பகுதிகளில் தங்களது உறுதிகள் எனக் காட்டப்பட்ட ஒப்பங்கள், உறுதிகள் உடனடியாகப் பரிசீலிக்கப்பட வேண்டும்.

50 ஏக்கர்களுக்கு மேல் காணி இருந்தால் அதனை காணி சீர்திருத்த ஆணைக்குழு மேலதிகமானவற்றை கையகப்படுத்தலாம். ஆனால் தற்போதைய கிழக்கு ஆளுநருக்குப் பல இடங்களில் காணி இருக்கின்றது.

பாதுகாப்புத் தரப்பு கடந்த காலத்தில் விட்ட தவறின் காரணமாகத் தான் பாரிய துன்பியல் ஒன்று இடம்பெற்றது. இனியும் இவ்வாறான தவறுகள் இடம்பெறக்கூடாது என்பதில் நாங்கள் மிகக் கவனமாக இருக்கின்றோம்.

அரச தரப்பு இன்னும் சுயநலமாக இருக்க முடியாது. தங்களில் சுயநலத்தில் இருந்து விலக வேண்டும். ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கு அமைச்சு இன்னொருவரிடம் கையளிக்கப்பட வேண்டும். இந்த இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பு முற்றாக அடக்கப்பட வேண்டும்.

அதற்கான தேடுதல்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால் அப்பாவி இஸ்லாமியச் சகோதரர்கள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது.

அப்பாவி இஸ்லாமியச் சகோரர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பைக் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. islaamiyer veettule thedudel naday pera illay enraal .iththana natkalahe ungal amma veettuleya thedudel naday petradu????

    ReplyDelete
  2. உங்களுக்கு பொறாமை, முஸ்லிம்களின் வளர்ச்சி யைகண்டு.
    தாக்குதலுக்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தமில்லை, அது முலுக்க முலுக்க ISIS இன் வேலை என்பதை புறிந்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. iri onnawandhu check panren

    ReplyDelete
  4. iththanay naatkela ungal amma veettila theduraanga

    ReplyDelete
  5. ஈன கிழட்டு நாயே நீங்கள் இன்னும் பிச்சையெடுக்க காரணம் உங்களுடைய இந்த பொறாமை குணம் தான். வீட்டிற்குள் சைனைட் வில்லைகளோடு புலி பயங்கரவாதிகளை பதுக்கிக்கொண்டு தீவிரவாதம் செய்த நீங்களும் தீவிரவாதிகளை காட்டிக்கொடுத்த நாங்களும் ஒன்றா? நாயை போல் குறைத்து சாகப்போகிறாய்

    ReplyDelete
  6. SUMMA PODA DAI THUWASAM PASAMA......

    ReplyDelete
  7. தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது ISIS பயங்கரவாதிகளால் உரிமை கொரப்பட்டதன் பின்னரும் ஜம்மியத்துல் உலமா இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை,, தாக்குதலைச் செய்தவர்கள் முஸ்லிம் பெயர்தாங்கிகளே ஒழிய அவர்கள் முஸ்லிம்கள் அல்லர் எனவும் மீடியா வாயிலாக தெரிவித்த பின்னரும்... இஸ்லாமியத் தீவிரவாதம்னு அண்ணன் சொல்றது எங்கணம் நியாயம்....?? தமிழ் பேசும் மக்களாகத்தான் பெருவாரியான முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.. ஆக, எமக்கும் தமிழ் பேசும் மக்களென்றால் அதில் நாங்களும் இருக்கிறோம். இல்லை அது ஹிந்துக்கள் மாத்திரம் தானென்றால்,, புலிகளால் முப்பது வருடங்களுக்கும் மேலாக கொல்லப்பட்ட அப்பாவி மக்களைக் கொன்றதற்கும் தமிழ் பேசும் இனமாகிய நீங்கள் தான் பொறுப்பேற்பீர்களா...? கொத்து கொத்தாக அப்பாவி மக்களைக் கொன்று குவித்த புலிகள் "விடுதலை இயக்கம்"... ஆனால், ISIS முஸ்லிம் பெயர்தாங்கிகளாக இருப்பதால் சம்பந்தமில்லாத இஸ்லாமியர்களும் இஸ்லாமும் பயங்கரவாதியாகுமா...? நல்லாத்தான் Connect பண்றீங்க சாப்...

    ReplyDelete

Powered by Blogger.