Header Ads



ஜனாதிபதியிடம் முக்கிய ஆவணங்களை, ஒப்படைத்த ஞானசாரர்

ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பான முக்கிய ஆவணங்களை ஞானசார தேரர், ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளார் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்று சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கல்கொடஅத்தே ஞானசார தேரரை சந்தித்து பேசினார்.

இரகசியமான முறையில் நடைபெற்ற இந்த சந்திப்பு நீண்ட நேரமாக, சிறைச்சாலை வைத்தியசாலையின் ஜெய்லர் அறையில் நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று இயக்குனர் டிலாந்த விதான, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதிக்கும் ஞானசார தேரரும் இடையில் 45 நிமிடங்கள் தனிப்பட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. இங்கு பேசப்பட்ட விடயங்கள் முழுமையாக எனக்கு தெரியாது.

எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து அதிகம் பேசப்பட்டது.

கடந்த காலங்களில் பொதுபல சேனா அமைப்பினால் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பில் பெற்றுக் கொண்ட தகவல்கள் குறித்து ஜனாதிபதிக்கு, ஞானசார தேரர் தெரியப்படுத்தியுள்ளார்.

பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது ஞானசார தேரரின் விடுதலை குறித்தும் பேசப்பட்டுள்ளது. மீண்டும் வந்து சந்திப்பதாக ஞானசார தேரரிடம் , ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக நிறைவேற்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. எங்கள் முஸ்லிம்கள் மீதே எப்பவும் விரலை நீட்டும் அந்நிய மக்களும் அரசும் ஏன் இன்று வரை சமகாலத்தில் நாட்டின் மிகப்பெரும் பொருளாதாரத்தை அழித்த இனத்துவேசக்காரர்களை கைது செய்யவில்லை.


    நான் நினைக்கவில்லை இனிமேல் முஸ்லீம் பெயர் தாங்கிகள் நாட்டில் பிரச்சினைகள் ஏட்படுத்துவார்கள் என்று ஆனால் முஸ்லிம்களை தாக்கிக்கொண்டு இருக்கும் இனத்துவேசக்காரர்களின் நடவடிக்கைகள் மட்டும் குறையாது அது தான் உண்மை.

    ReplyDelete
  2. தேரர் சிரைச்சாலையில் அலுவலகம் நடத்துகிறாரா? ஜனாதிபதி என்ற வகையில் ஒரு குற்றவாளி யை போய் சந்தித்தது இரையான்மைக்கும் நீதி துறைக்கும் அவமானம்.

    ReplyDelete

Powered by Blogger.