Header Ads



ஈரான் நாட்டு முஸ்­தபா பல்­க­லைக்­க­ழ­கம், இஸ்­லா­த்திற்கு விரோதமானது - ஜம்இய்­யத்துல் உல­மா விளக்கம்

ஈரான் நாட்டு அல்­ முஸ்­தபா பல்­க­லைக்­க­ழ­கத்தின் இஸ்­லா­மியக் கொள்கைக்கும் இலங்­கை வாழ் இஸ்­லா­மி­யர்­களின் கோட்­பா­டு­க­ளுக்­கு­மி­டையில் பாரிய வேறு­பா­டுகள் உள்ளன. இக்­கற்கை நெறியில் உள்­நோக்­கங்கள் இருப்­ப­தா­கவும் அது எதிர்­கா­லத்தில் சமூ­கத்தைப் பாதித்து அடிப்­ப­டை­வாத்­துக்குள் இட்­டுச்­செல்­வ­தற்கு வழி­வ­குக்கும் என்­பதை அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உல­மாவின் பதுளைக் கிளை எழுத்­து­ மூலம் தெரி­வித்­தி­ருப்­ப­தாக ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்­டமான் தெரி­வித்­துள்ளார்.

ஊவா மாகா­ணத்தை மையப்­ப­டுத்தி இயங்­கி­வரும் ஈரான் நாட்டு சர்­வ­தேச பல்­க­லை­க­ழ­கத்தின் கற்கை நெறி தொடர்­பிலும் இக்­கற்கை நெறி­யி­லி­ருந்து முஸ்லிம் மாண­வர்கள் விலகிக் கொண்­ட­மைக்­கான காரணம் குறித்தும் அறிந்­து­கொள்ளும் பொருட்டு ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்­டமான் பதுளை பெரிய பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­டி­ருந்தார். இதன்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், ஈரான் நாட்டு சர்­வ­தேச பல்­க­லைக்­க­ழ­கத்தின் அனு­ச­ர­ணையில் மலை­யக மாண­வர்­க­ளுக்கு அர­ச­றிவியல் பட்­டப்­ப­டிப்பு பாடத்­திட்­டத்தில் அர­பு­மொழி மற்றும் இஸ்­லா­மிய கலா­சாரம்  தொடர்பான பாடங்கள் கற்­பித்துக் கொடுக்­கப்­பட்டு வரு­கின்­றமை எமது சமூ­கத்தின் மத்­தியில் இன்று பல்­வேறு பிரச்­சி­னை­க­ளையும் சந்­தே­கத்­தையும் தோற்­று­வித்­துள்­ளது. 

இத­ன­டிப்­ப­டையில் அர­சியல் விஞ்­ஞான பாடங்­க­ளுடன் ஈரா­னிய நாட்டு இஸ்­லா­மிய அர­சியல் கொள்­கை­க­ளையும் அரபு மொழி­யையும் குரா­னி­யக்­கலை என்ற பாடத்தில் குர் ஆனையும்  கற்­பித்துக் கொடுக்­கின்­றனர். மலை­யக பெருந்­தோட்டப் பகு­தி­களில் உள்ள முஸ்லிம் அல்­லாத மாண­வர்­களை இலக்கு வைத்து குர்ஆன் தொடர்­பிலும் அர­பு­மொழி தொடர்­பிலும் பாடங்கள் கற்­பித்துக் கொடுக்­கப்­பது பிரச்­சி­னைக்­கு­றிய விட­ய­மாகும்.

இந்த பட்­ட­ப­டிப்­புக்­காக ஆரம்­பத்தில் 650 மாண­வர்கள் உள்­வாங்­கப்­பட்­டனர். இதில் பட்டப்படிப்பின் இடையில் 130 முஸ்லிம் மாண­வர்கள் கற்கை நெறியை திடீ­ரென இடை­நி­றுத்தி வில­கிக்­கொண்­டனர். இவ்­வாறு திடீ­ரென முஸ்லிம் சமூ­கத்தை சேர்ந்த மாண­வர்கள் இக்­கற்கை நெறி­யி­லி­ருந்து விலகிக் கொண்­ட­மையும் குறிப்பிடதக்கது.

இக்­கற்கை நெறியில் பல உள்­நோக்­கங்கள் இருப்­ப­தா­கவும் அது எதிர்­கா­லத்தில் எமது சமூ­கத்தைப் பாதிக்கும் வகை­யிலும்  முஸ்லிம் மாண­வர்­களை தவ­றான வழியில் இட்­டு­செல்­லவும் அடிப்­ப­டை­வா­தி­க­ளாக மாற்­றவும் அதிக சாத்­தி­யக்­கூறு காணப்­பட்­ட­மை­யா­லேயே முஸ்லிம் மாண­வர்கள் இக்­கற்கை நெறி­யி­லி­ருந்து விலக்கிக் கொண்­ட­தாகவும்,  பதுளை ஜூம்மாப் பள்­ளி­வாயில் பிர­தம மௌலவி குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்­ச­ரினால் எடுக்­கப்­பட்­டி­ருக்கும் நட­வ­டிக்­கை­யா­னது தமிழ்,முஸ்லிம் மற்றும் சிங்­கள சமூ­கத்­தி­னரை பாரிய ஆபத்­தி­லி­ருந்து மீட்­டெ­டுத்த செய­லா­கவே பார்க்­கின்றோம் என பதுளை ஜூம்மாப் பள்­ளி­வாயில் பிர­தம மௌலவி மேலும் தெரி­வித்தார்.

அத்தோடு,  இலங்கை நாட்டு முஸ்லிம் மக்­களின் கருத்­துக்­க­ளுக்கு எதி­ரா­னதும் ஈரான் நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கு ஆத­ர­வான அடிப்­ப­டை­வாத கருத்­துக்­க­ளையும் இப்­பல்­க­லைக்­க­ழகம் கொண்­டுள்­ளது. இன்று எமது நாட்டில் இடம்­பெ­று­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்கு மூல­கா­ர­ணங்­க­ளாக இருப்­பது அடிப்­ப­டை­வாத கருத்­துக்­களே ஆகும். இதன் கார­ணத்­தி­னா­லேயே பதுளை மாவட்­டத்தின் ஜூம்மாப் பள்­ளி­வா­யில்­களின் நிரு­வா­கத்தின் அறி­வித்­த­லுக்­க­மைய முஸ்லிம் மாண­வர்கள் அனை­வரும் இக்­கற்கை நெறி­யி­லி­ருந்து விலக்கிக் கொண்­ட­தா­கவும் குறிப்­பிட்ட மௌலவி ஈரா­னிய நாட்டு அடிப்­ப­டை­வாத கருத்­து­க­ளையும் கொள்­கை­க­ளையும் ஒரு­போதும் ஏற்க முடி­யாது என்றும் அவர் மேலும் தெரி­வித்தார்.

அத்­துடன் ஈரா­னிய நாட்டு அனு­ச­ர­ணையில் இயங்கும் வௌிவா­ரி­யான பல்­க­லைக்­க­ழ­கத்­தி­னூ­டக மலை­யக மாண­வர்­க­ளுக்கு கற்­பிப்­பதை எம்மால் நிறுத்த முடி­யாது. ஆனால் எமது ஜூம்மாப் பள்­ளி­வா­யில்­களின் நிரு­வா­கத்­தி­னரின் ஊடாக எமது முஸ்லிம் மாண­வர்­களை இக்­கற்கை நெறி­யி­லி­ருந்து இடை­நி­றுத்தி விலக்­கிக்­கொண்டோம் எனத் தெரி­வித்தார்.

No comments

Powered by Blogger.