Header Ads



அரபு நாடுகளில் இருந்து முஸ்லிம்களுக்கு கிடைக்கும், நிதி குறித்து கவனம் செலுத்தாதது ஏன்..?

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்திலும் அதற்கு பின்னரான காலப்பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அபிவிருத்திக்காக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கின்ற நிதியை விசாரணைக்கு உட்படுத்திய ஸ்ரீலங்கா அரசாங்கம், தற்போது அரபு நாடுகளில் இருந்து முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கும் நிதி குறித்து கவனம் செலுத்துவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அமைப்பதற்காக என தெரிவித்து கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலரது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பெறுந்தொகையான நிதி குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இன்றைய தினம் -23-  சிறிலங்கா நாடாளுமன்றில் ஆற்றிய உரையின் போது வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் உடனடியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பகுதிகள் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டிருக்குமாக இருந்தால் பல குற்றவாளிகள் இனங்காணப்பட்டிருப்பார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஆட்சியாளர்கள், தமது அரசியல் இருப்புக்காக குற்றவாளிகளை பாதுகாக்கும் எண்ணத்துடன் செயற்பட்டு வருவதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாடுகளை கவனத்திற்கொள்ளாமல் செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

4 comments:

  1. முஸ்லிம்களினது என்ற சொல்லை பயன்படுத்தாமல் உங்களுக்கெல்லாம் பேச தெறியாதா? உங்கள் இனத்தைப்பற்றி பேச இனியொன்றுமில்லையா மூதேவிகளா?

    ReplyDelete
  2. அரபு நாடுகளில் ஒட்டகம் மேய்த்துக்கொண்டிருக்கும் தமிழனுங்களே ஊருக்கு போய் எரும மாடு வாங்கி மேயுங்கள். அரபு நாட்டு பணம் உங்களுக்கு எதற்கு?

    ReplyDelete
  3. கல்விக்காக வந்திருக்கலாம்.ஆயுதக் கப்பல் வாங்கவோ,நாட்டை சின்னாபின்னபடுத்தவோ எந்த பணமும் வரவில்லை.தேசிய தவ்ஹீத் ஜமாத் ஒரு பயங்கரவாத அமப்பு.அந்த அமப்பை பற்றியும்,அது சம்பந்தமாக அரசாங்கம் தீவிர விசாரனை செய்வது உங்களுக்கு தெரியாது போலும்.தினமும் பத்திரிகையை பார்த்தால் விளங்கிக் கொள்ளலாம்.

    ReplyDelete

Powered by Blogger.