Header Ads



வைத்தியர் சாபியை வைத்து, ஒட்டுமொத்த முஸ்லிம் வைத்தியர்களையும் வெளிநாடுகளுக்கு துரத்த முயற்சி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பதவி நீக்குவதற்கு  அவருக்கு  எதிராக  பாராளுமன்றத்தில்  குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என்று  கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற  உறுப்பினர்  முஜிபூர் ரஹ்மான் வழியுருத்தினார்.

அலரிமாளிகையில் இன்று  இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில்  இவ்வாறு கூறிய  அவர் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்கு பின்னர்  நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் ஜனாதிபதி அலட்சியமாகச் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.  அங்கு அவர் மேலும் கூறியதாவது ;  

பாதுகாப்பு பிரிவினரின்  செயற்பாடுகளினால் கடந்த சில நாட்களாக நாட்டின் நிலைமைகளில்  மாற்றம் ஏற்பட்டு வருகின்றது.  நாட்டின் உறுதிப்பாடு அதகரித்துள்ளதாக பாதுகாப்பு பிரதானிகள் அறிவித்துள்ளனர்.

 இருப்பினும்  தொடர் குண்டுத்தாக்குதல் சம்பவங்களைத்  தொடர்ந்து அரசாங்கத்துக்கு எதிராக பல்வேறு குற்றசாட்டுக்களை  எதிரணியினர் முன்வைக்கிறார்கள். 

இதற்கு பதிலளிக்கும்  வகையிலேயே பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு  ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

குண்டுத்தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் தன்மை அரசாங்கத்துக்கு உள்ளதை போன்று தமது பிழைகள்  தொடர்பில்  அறிந்துகொள்ளும்  உரிமையும் பாராளுமன்ற உறுப்பினர்கள்  225 பேருக்கும் உள்ளது.

 ஆயினும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு  எதிரணியினர்  எதிர்ப்பையே வெளியிடுகின்றனர்.அதற்கான காரணம் என்ன என்பதும்  தெளிவாக தெரியவில்லை.  

கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு பின்னர் தேசிய பாதுகாப்பு சபை கூட்டம் இடம்பெற வில்லை. இந்த குண்டுத்தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு சில நாட்களுக்கு  முன்பாக புலனாய்வு தகவல்களை புலனாய்வு பிரிவினரால் பொலிஸ்மா அதிபருக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.

 இவ்வாறு தாக்குதல்களுடன் தொடர்புடைள  ஒவ்வொரு  உண்மையும் வெளியாகி வரும் நிலையில் கூச்சலிட்டு கொண்டிருந்த எதிரணியினர் மௌனமாகியள்ளனர்.முக்கிய குற்றவாளி யார் என்பதை அறிந்துக்கொள்வதிலும் தயக்கம் காட்டி வருகின்றனர்.  

சஹரான் தொடர்பான விசாரணைகளை  முன்னெடுத்து வந்த பிரதி பொலிஸ்மா அதிபர்  நாலக டி சில்வா கடந்த ஜூலை மாதம் குறித்த தகவல்களை நீதிமன்றத்திடம் சமர்ப்பித்திருந்த நிலைமையிலேயே கடந்த செப்டம்பர் மாதம்  ஜனாதிபதி கொலை சதி வழக்கில்  அவர் கைது செய்யப்படுகிறார். நாலக டி சில்வாவின் கைதுடன்  சஹரான் தொடர்பான விசாரணைகள் மூடிமறைக்கப்பட்டன.  

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட்டிருந்த போதிலும்  அரசியல் தலைமையை வழங்க வேண்டியவர்கள் தங்களின் பொறுப்பை முறையாக நிறைவேற்ற வில்லை.  

இதனை மூடிமறைத்து மக்களின் கவனத்தை திசைத்திருப்புவதற்காகவே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது குற்றசாட்டுக்களை முன்வைத்து நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்துள்ளனர். 

பிரதான தலைமைகளின் தவறுகளை மூடி மறைக்க  முஸ்லிம் பிரநிதிகளுக்கும் மக்களுக்கும் எதிராக கை நீட்டுகிறார்கள். 

இந்த தாக்குதல்களை தொடர் ந்து மே மாதம் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் ஜனாதிபதிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸானாயக்க போன்றொருக்கும்  தொடர்பு உள்ளதா  என்ற சந்தேகமம் எமக்கு எழுகின்றது.

 வைத்தியர் சாபியை வைத்து இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த  முஸ்லிம் வைத்தியர்களையும்  வெளிநாடுகளுக்கு துரத்தவே எதிரணி முயற்சிக்கின்றது.யுத்தகாலத்தில்  தமிழ் புத்தி ஜீவிகளுக்கு  இடம்பெற்றதே இன்று முஸ்லிம்  புத்திஜூவிகளுக்கும் நேர்ந்துள்ளது என அவர் அதன் போது தெரிவித்தார்.

3 comments:

  1. துணிந்து உண்மையைப் பேசிவருகின்ற சகோ. முஜிபுர் ரஹ்மானுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.

    சகோதரர் அவர்களே முஸ்லீம்களுக்கான தலைமைத்துவ இடைவெளி இன்னும் நிரப்பப்படவில்லை என்பது கவலைக்குரியதாக உள்ளது.

    ReplyDelete
  2. 53 முஸ்லிம் நாடுகளுக்கும் போங்கள், ஆனால் ....கிருஸ்தவ நாடுகளுக்கு போய் அங்கும் அமைதியை குழப்பாதீர்கள்

    ReplyDelete

Powered by Blogger.