May 19, 2019

முஸ்லிம் சகோதரர்களை பாதுகாக்க வேண்டியது, எம் அனைவரினதும் பொறுப்பாக இருக்க வேண்டும் - வடிவேல் சுரேஸ்


இன்று நாட்டில் இனங்களுக்கு இடையில் பல கசப்பான சம்பவங்கள் நடைபெற்றதையிட்டு நான் கவலை அடைகின்றேன். அன்மையில் ஈர்த்த ஞாயிறு தினத்தில் ஏற்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் காயபட்டவர்களுக்கு இரத்தம் வழங்கியதில் இரத்த வங்கியில் சில பிரிவுகளில் இரத்த குறைபாடுகள் இருப்பதாக அறிந்தேன். இந்நிலையில் என்னால் முடிந்த இந்த இரத்ததான நிகழ்வை ஏற்படுத்தி உள்ளேன். இந்த இரத்ததானத்தில் மூவின மக்களும் நான்கு சமயத்தவர்களும் கலந்துக் கொண்டு உள்ளனர். தற்போது வழங்கபட்டுள்ள இந்த இரத்ததில் இல்லை இனவாதம் இதை உணர்ந்து செயற்பட வேண்டும் என்று பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். 

இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்கும் நோக்கில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு பதுளை ஹாலிஎல சுகாதார காரியாலயத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

சர்வமத தலைவர்களின் விசேட பிராத்தனையுடன் நடைபெற்ற இந் நிகழ்வில் பெருந்தோட்டங்களை சார்ந்த மக்களும் இன மத சமய பேதமின்றி மூவின கிராம மற்றம் நகர மக்களும் கலந்தக் கொண்டு இரத்தானம் வழங்கினர். 

தொடர்ந்து இந்த விடயம் தொட்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல. அவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு தற்போது நாட்டில் ஏற்பட்டு உள்ள அசாதாரண சூழ் நிலையில் முஸ்லிம் சகோதரர்களை பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் பொறுப்பாக இருக்க வேண்டும். 

இந்த நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம் மக்களும் எமது சகோதர்களே ஒரு சிலர் செய்யும் முறையற்ற செயல்பாடுகளை அனைத்து முஸ்லிம் மக்களும் செய்ததாக கருத முடியாது. இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒன்றும் தெரியாத எந்தவித பயற்கரவாத செயற்பாடுகளிலும் ஈடுபடாத அப்பாவி முஸ்லிம் மக்கள் பாதிப்படைய கூடாது. அவர்களுக்கு பிரச்சனை வரும் போது அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. 

இந் நிலையில் குறிப்பிட்ட சில இடங்களில் வன்முறைகள் வெடித்து வருகின்றது. இதனால் அப்பாவி முஸ்லிம் பொது மக்கள் பாதித்து வருகின்றனர். அவர்களின் உடமைகள் பாதிப்படைந்துள்ளது. சிறுவர்களும் பாதித்து வருகின்றனர். இந் நிலை தொடர கூடாது. நாட்டில் ஏற்கனவே ஈஸ்டர் தொடர் குண்டு வெடிப்புகளினால் உயிர் இழந்த பாதிப்புகளில் இருந்து இன்னமும் நாம் மீளவில்லை. 

இந்த நாட்டில் ஏற்கனவே 30 வருட கடூர யுத்தம் காரணமாக எமது நாடு அபிவிருத்திகளில் பல பின்னடைவை நோக்கி உள்ளது. அதில் இருந்து தற்போது தான் சற்று மேல் நோக்கி எழும்பி வரும் இவ்வேலையில் இவ்வாறான பிரச்சனைகள் நாட்டை மீண்டும் பின்னோக்கி செல்ல வழி வகுக்கும். இந்த நாட்டை பாதுகாத்து எமது எதிர்கால சந்ததினருக்கு முறையாக கையளிக்க வேண்டிய பொருப்பு எம் அனைவருக்கும் உள்ளது இதை உணர்ந்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

(திருஞானம்)

1 கருத்துரைகள்:

உண்மையில் உங்களுடைய இந்த நல்ல எண்ணத்தை நான் பாராட்டுகின்றேன் ஜயா இந்த நாட்டில் ஒட்டு மொத்த மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் நாங்கள் சில கல்லக் கயவர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு செய்த இந்த கொடூர செயலை முஸ்லிம்களாகிய நாங்கள் கடுமையாக கண்டிக்கின்ரோம் வெறுக்கின்ரோம் இதை புரிந்து கொல்லாமல் சில கயவர்கள் அப்பாவி மக்களாகிய எங்கள் சொத்துக்கள் உடைமைகளை அழித்துவிட்டார்கள் பரவாயில்லை அவர்களுக்கு இறைவன் நிச்சயமாக நாங்கள் திருப்தி படும் அளவுக்கு அவர்களுக்கு தண்டனை வழங்குவான் அதில் எந்த மாற்றமும் இல்லை ஜயா எங்களுக்கு உங்களை மாதிரி நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இருக்கும் வரைக்கும் எங்களுக்கு என்ன ஜயா குறை உங்கள் கருத்துக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ஜயா வாழ்த்துக்கள்.....

Post a comment