May 20, 2019

தர்ம சக்கரத்தை அவமதிக்காத, முஸ்லிம் பெண்ணுக்கு நடந்த கொடுமை - கணவரின் வாக்குமூலம் இதோ

- ஏ எம் எம் முஸம்மில் -

தர்ம சக்கரத்தை அவமதித்தார் எனும் குற்றச் சாட்டில் , மஹியங்கனை பொலிசாரினால் கைது செய்யப் பட்டு எதிர் வரும் 27 ந் திகதிவரை பதுளை சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப் பட்டுள்ள 47 வயதான  எம் ஆர் மசாஹிமா அவர்கள் ஆஸ்துமா மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்களால் பாதிக்கப் பட்டவர். இவர் கணவரான அப்துல் முனாப் அவர்கள் கட்டிட நிர்மாணத்துறையில் தினக் கூலியாக கொழும்பில் வேலை செய்பவர்.  

சம்பவம் தொடர்பாக நேரடியாக அவரிடம் பேட்டி கண்ட போது ,,,,,,,,,,,,,,

கேள்வி :-  உங்கள் பெயர் என்ன ? உங்கள் தொழில் பற்றிய விடயங்களை சொல்லுங்கள் .

பதில் :-      எனது பெயர் அப்துல் முனாப் , நான் மேசன் பாசிடம் கை யுதவியாளாக கொழும்பில் வேலை செய்கின்றேன்.

கேள்வி :-  உங்கள் குடும்பம் எங்கு வாழ்கிறார்கள்.

பதில் :-      அவர்கள் ஹசலக, கொலொங் கொட எனும் கிராமத்தில் வாழ்கின்றார்கள்.

கேள்வி ;-   நடந்த சம்பவம் பற்றி சொல்லுங்கள்.

பதில் ;-     அப்போது நான் கொழும்பில் வேலைசெய்து கொண்டிருந்தேன், திடீரென தொலைபேசியில் செய்தி வந்தது எனது மனைவியை மஹியங்கனை போலீசின் மூலமாக கைது செய்து அடைத்து வைத்துள்ளார்கள் என்று, என்ன குற்றம் என்ன காரணம் என்று எனக்கு ஒன்றும் தெரியாது  . முதல் நாள் தான் நான் செலவுக்கு காசு அனுப்பினேன் , எனது மனைவி ஓர் அப்பாவி சேர், அவ நோயாளியும் கூட  .......... ( அழுகின்றார்.)

பாதிக்கப்பட்ட மசாஹிமாவின்  கணவரான அப்துல் முனாப் அவர்களின் ஹசலக , கொலொங் கொட வீடு . தொ இல :  071 757 5007

கேள்வி :- அடுத்து நீங்கள் என்ன செய்தீர்கள் ?

பதில் ;-     “நான் உடனடியாக பஸ் ஏறி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன், வந்த பிறகுதான் முழு  விடயங்களையும் அறிந்து கொண்டேன்,

சம்பவ தினத்திற்கு முதல் நாள் எனது மனைவியின் சுகயீனத்திற்கு வைத்தியம் செய்வதற்காக ஹசலக  பொது வைத்திய நிலையத்திற்கு சென்றுள்ளார். போகும் போது வழமையாக அவர் அணியும் ஹபாய அணிந்து சென்றுள்ளார், (முகம் மூடாத ) அப்போது பாதையில் சென்றவர்கள் சிலர் அபாயா அணிந்து சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொந்தரவு செய்துள்ளார்கள். அடுத்த நாள் தான் நான் செலவுக்கு அனுப்பிய காசை மாற்றி எடுப்பதற்காக ஹசலக வங்கிக்கு சென்றுள்ளார். வங்கிக்கு சென்று வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் ட்ராபிக் பைக்கில் “ஒரு “ போலீசார் வீடு தேடி வந்துள்ளார். வந்த போலிஸ் உத்தியோகத்தர் எனது மனைவியை முன்னால் வரச் சொல்லி போடோ எடுத்துள்ளார் . பிறகு போட்டோக்களை மகியங்கன போலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு “வாட்சப்பில் “ அனுப்பி வைத்துள்ளார். பிறகு அந்த போலிஸ் உத்தியோகத்தர் சென்றுள்ளார். அவர் சென்று சுமார் இருபது நிமிடங்களுக்கு

பிறகு மஹியங்கனை போலிஸ் ஜீப் வந்து எனது மனைவியை ஏற்றிச் சென்றுள்ளார்கள். கடந்த 16 ந் திகதி கைது செய்து ஒரு நாள் மஹியங்கனை போலிஸ் தடுப்பில் வைத்துள்ளார்கள். அடுத்த நாள் மஹியங்கனை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் சமர்பிக்கப் பட்டு நீதி மன்ற தீர்ப்பின் பிரகாரம் எதிர் வரும் 27 ந் திகதி வரை பதுளை சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ளார் சேர்.

எனது மனைவி ஒரு அப்பாவி சேர் . நாட்டில் நடக்கும் இந்த விடயங்கள் பற்றி எல்லாம் அவளுக்கு அவ்வலவு விளக்கம் இல்ல. நான்கள் ஏழைகள் , எந்த குற்றமும் செய்யாத நாங்கள் இந்த ரமலான் மாதத்தில் வீணாக குற்றம் சுமத்தப்பட்டு தண்டிக்கப் படுகின்றோம் . அவள் அணிந்து சென்ற உடையில் பொரிக்கப் பட்டிருந்தது தர்ம சக்கரமே இல்ல சார் , அது கப்பலை செலுத்தும் ஸ்டீரிங் என்று சொன்னாங்க சேர் . என் மனைவிக்கு இவை இரண்டும் பற்றியே தெரியாது சேர். ஆனால் தர்ம சக்கரத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப் பட்டுள்ளோம் . 

இந்த நிலைமையிலிருந்து எங்களை விடுவிக்க உங்களால் முடியுமான உதவிகளை செய்து தாருங்கள். “ சேர் என்று கூறினார்.

(இந்த வரிகளை எழுதும் போது என்கண்களில் வடியும் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. )

மேற்படி விடயங்கள் பா ம உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானிடம் முன்வைக்கப்பட்டுள்ளது . உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார்.முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்கள் , பொது நல விரும்பிகள் பல காட்டிகொடுப்புக்கள் . பொய் புகார்களுக்கு உட்படுத்தப் பட்டு மன உளைச்சலின் உச்சகட்டத்திற்கு உள்ளாக்கப் பட்டு  யாரும் எவருக்கும் உதவ முன்வராத நிலையில் இது போன்ற அப்பாவிகளை மீட்டெடுக்க , இவை பற்றி தேடிபார்க்க  எமது பிரதேசம் சார்ந்த சமூக்கத் தலைமைகள் முன்வராத நிலைமை இவ்வாறான நிலைமைகளை மேலும் நெருக்கடிகளுக்குள்ளாக்கியுள்ளது.

அரச வைத்திய சாலையில் தொழில் செய்யும் வைத்திய அதிகாரிகள் , போலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் போன்ற படித்த பட்டம் பெற்றவர்களே “ கெரி தம்பியா , மரக்கலயா “ என்று தமது முக நூல் பக்கங்களில் பதிவுகளை போடும் போது வியப்போடு பார்த்த அதிர்ச்சி நீங்குவதற்ககு முன் ஒரு நீதவான் இவ்வாறானதொரு தீர்ப்பை வழங்கியுள்ளார்.  

அன்பார்ந்த தொண்டர்களே, சட்ட வல்லுனர்களே , சமூக சேவகர்களே இந்த அநீதமிளைக்கப் பட்டவர்களுக்காக நீதியை பெற்றுத் தர முன்வாருங்கள்.  இந்த கைதுக்கு எதிராக ஒரு வழக்கு முன்னெடுக்கப் படுமானால் உலக அளவில் பிரசித்து பெற்றதொரு வழக்காக பிரபலமானதும் இலங்கை நீதித் துரையின் இலட்சணத்தை சர்வதேச அளவில் எடுத்துக் காட்டவும் வாய்ப்பாக இருக்கும்.  

இந்த விடயத்தை நோக்கும் போது இது ஒரு வரலாற்றுத் துரோகமாகவே நினைக்கத் தோன்றுகின்றது, அநீதமிளைக்கப் பட்டவனுக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் எந்த இடைவெளியும் இல்லை என்றே இஸ்லாம் கூறுகின்றது. நிச்சயமாக இந்த ஏழை நோன்பாளிகளின் கண்ணீருக்கு ஒரு விலை உண்டு , என்பது மட்டும் உறுதியானது, இன்ஷா அல்லாஹ் . பொறுத்திருந்து பார்ப்போம்.

6 கருத்துரைகள்:

தர்மச்சக்கரத்துக்கும் திசை மாற்று கருவிக்கும் வித்தியாசம் தெரியாவிட்டால் சட்டம் ஒரு இருட்டரை .

உலகத்தில் உள்ள எல்லா ஜந்துக்களும் மற்றும் குறியீடுகளும் கடவுளாக வணங்கும் போது மக்கள் காலப்போக்கில் பிறந்த உடல் நிலையில் தான் வெளியே செல்ல நேரிடும்!

இது தர்மசக்கரம் இல்லை என்பதை கோர்ட்டில் நிரூபிக்க முடியாதா. இதற்காக முஸ்லிம் வழக்கறிஞர்கள் முன்வருவார்களா..

முதலில் அந்த மொக்கன் நீதிபதி என்ன படிச்சவனா இப்படியொரு விடயதிற்கு தடுப்பு க் கா வலி ல் வைத்து விசாரிக்க அனுமதியளிக்க?

If police request to remain them in Jail judge cannot do anything under Terrorist Act

Post a comment