Header Ads



நீர்கொழும்பில் முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களுக்கு பேரிடி, பகிஸ்கரிக்கும் சிங்களவர்கள்


தற்கொலை குண்டுதாக்குதல்களை அடுத்து நீர்கொழும்பு வர்த்தக நிலையங்களை பகிஸ்கரிக்கும் பெரும்பான்மை மக்கள் 

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நீர்கொழும்பு கட்டுவபிட்டிய தேவாலயம் உட்பட மூன்று தேவாலயங்களிலும் கொழும்பில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும் முஸ்லிம் அடிப்படைவாத தற்கொலை குண்டுதாரிகள் நடத்திய குண்டுதாக்குதல்களைத் தொடர்ந்து நீர்கொழும்பு நகரில் உள்ள உணவகங்கள் , ஆடையகங்கள், மற்றும் வர்த்தகj நிலையங்ககளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதன்காரணமாக வர்த்தகர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் பலவற்றில் பெரும்பான்மையினரும் தொழில் புரிந்து வருகின்றனர். 

நீர்கொழும்பு - சிலாபம் பிரதான வீதியில் பெரியமுல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள பல உணவகங்கள் மிகவும் பிரசித்தமானவை. இங்குள்ள பல உணவகங்கள் 24 மணித்தியாலங்களும் திறந்திருப்பவை. இவைகளில் அதிகமானவை முஸ்லிம்களுக்கு சொந்தமானவை. தற்போது இந்த உணவகங்களில் முன்னரைப் போன்று வியாபரம் நடைபெறுவதில்லை. பல உணவகங்கள் வாடிக்கையாளர்களின்றி வெறிச்சோடி இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. 

அதேபோன்று ஆடையகங்களின் வியாபாரமும் மந்த கதியில் இடம்பெறுவதையும், முஸ்லிம்களுக்கு சொந்தமான ஆடையகங்களுக்கு ஏனையோர் வருவது குறைவாகவுள்ளதாகும் அறியமுடிகிறது. அத்துடன் முஸ்லிம்கள் நடத்தும் வர்த்தக நிலையங்களுக்கு பெரும்பான்மை சமூகத்தினர் வருவதில்லை எனவும், முஸ்லிம் கடைகள் என்பதை அறிந்தவுடன் பலர் பொருட்களை கொள்வனவு செய்யாமல் திரும்பிச் செல்வதாகவும் அறியமுடிகிறது. 

முச்சக்கர வண்டி சாரதிகள் உட்பட நகரில் சிறுவர்த்தகத்தில் ஈடுபடும் வியாபாரிகள் வரை இந்த நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Virakesari

2 comments:

  1.  ....they plan, and Allah plans. And Allah is the best of planners (Al Quran 8:30)

    ReplyDelete

Powered by Blogger.