Header Ads



முஸ்லிம் பகுதிகளில் மட்டும் அபிவிருத்தி, சுடுகாடுகளாக தமிழர் பகுதிகள் - துரைரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 74 வீதம் தமிழர்கள் வாழ்கின்ற நிலையில் சகோதர முஸ்லிம் இனத்தவர்களுக்கு எவ்வாறு மூன்று பிரதிநிதிகளை நியமிக்க முடியும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

அண்மையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குமான மாவட்ட அபிவிருத்தி தொடர்பான அபிவிருத்திக் குழுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதன்போது இணைத்தலைவர்களாக மூன்று முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு இணைத்தலைவர்களாக அமைச்சர் அமீர் அலி, அமைச்சர் மௌலானா, முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அகமட் என மூன்று முஸ்லிம்களை நியமித்ததாக அறியக் கூடியதாக இருந்தது.

இம்மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அண்ணளவாக 74 வீதம் தமிழர்களும், 23வீதம் முஸ்லிம்கள், 01வீதம் சிங்களவர்கள் இருக்கும் நிலையில், 23வீதம் உள்ள முஸ்லிம்களுக்கு எவ்வாறு மூன்று பிரதிநிதிகளை நியமிக்க முடியும்.

தமிழ் இப்பிரதேசங்கள் வறுமையில் வாடுவதாலும், தமிழ்ப் பிரதேசங்களாக இருப்பதாலும், 74 வீதம் தமிழர்கள் உள்ளதாலும் தமிழ்ப்பகுதிக்கு அபிவிருத்தி வேலையில் முன்னிலை வழங்கப்பட வேண்டும். இவை மட்டுமின்றி முப்பது வருடகாலமாக இப்பகுதிகளுக்கு பல விடயங்களில் புறக்கணிப்பு நிகழ்த்தப்பட்டன.

இந்நிலையில் இம்மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு மூன்று முஸ்லிம்களை நியமிக்கப்பட்டதென்பது நீதியான விடயங்களல்ல. எனவே இந்நியமனத்தை நிறுத்தி தமிழர்களை இணைத் தலைவர்களாக நியமிக்க வேண்டும்.

இதேவேளை சில முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகள் அபிவிருத்தியில் ஓரளவு நிறைவு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இம்மாவட்டத்தைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் கடந்த 25 வருட காலத்தில் அபிவிருத்தி குழு இணைத் தலைவர்களாக இருந்து கொண்டு தங்களது அதிகாரத்திற்கு ஏற்றவாறு அரசில் உள்ள அனைத்து அரசியல் பலம், ஏனைய வளங்களைப் பயன்படுத்தி ஒரு இனம் சார்பாக முஸ்லிம் பிரதேசங்களுக்கு மட்டும் அபிவிருத்தி வேலைகளைச் செய்து பல தமிழ்ப் பகுதிகள் சுடுகாடாக மாறுவதற்கு வித்திட்டவர்கள் முஸ்லிம் அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்கள் என்பதை தமிழர்கள் மறப்பதற்கில்லை.

ஜனாதிபதி, பிரதமர் தங்களுடைய கட்சியின் கீழ் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக இருவரும் மாறிமாறி முஸ்லிம்களை அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களாக நியமித்து தமிழர்களை புறம் தள்ளி கட்சி ரீதியான செயற்திட்டங்களை அமுல்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

கடந்த காலத்தில் தமிழர்களுக்குத் தேவை உரிமையா, சலுகையா என்னும் விடயத்தில் உரிமையுடன் நின்ற தமிழர்கள் இன்று உரிமையுடன் சேர்த்து அபிவிருத்தி வேலைகளையும் இம் மாவட்டத்தில் இடம்பெற வேண்டும்.

எனவே எதிர்வருகின்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முஸ்லிம் இணைத் தலைவர்களைக் குறைத்து தமிழ் புதிய இணைத்தலைவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவை மட்டுமின்றி இனிவரும் காலங்களில் இம்மாவட்டத்தில் 74வீதம் தமிழர்கள் உள்ளதென்பதையும் மிகக் கூடுதலாக யுத்தத்தில் பாதிக்கப்பட்டது கூடுதலாக தமிழ்ப்பிரதேசம் என்பதையும் வறுமையில் கூடுதலான கிராமங்கள் உள்ளதென்பதையும் புரிந்து கொண்டு நியமனங்கள், உயர் பதவிகள், சிரேஸ்ட பதவிகள் போன்ற விடயங்களில் திறமையும்,விகிதாசாரமும் பார்க்கப்பட வேண்டும்.

இவ்விடயங்களை அமுல்ப்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகள், அமைப்புக்கள்,அரசியல் கட்சிகள் அனைவரும் ஜனாதிபதி , பிரதமர் எழுத்து மூலமாக கோரிக்கைகளை முன் வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. அபிவிருத்தி குழு தலைவர்களாக நியமிக்கப்படுபவர்ளை இனரீதியாக பார்க்கவேண்டாம்.ஏனெனில் ஜனாதிபதிக்கும் அவரது கருத்துக்களுக்கும் ஆதரவு வழங்குபவர்ளையே ஜனாதிபதி நியமிக்கின்றார் எனவே நீங்களும் அவ்வாறுசெய்தால் உங்ளையும் நியமிப்பார்.ஆகவே இங்கு இனவாதம்வேண்டாம்.

    ReplyDelete
  2. உமக்கு முடிந்தால் Muslim பகுதிகளில் உள்ள அபிவிருத்திகலான பாதைகள்,கட்டிடங்கல் அனைத்தையும் தூக்கி கொண்டு போய் உமது தமிழ் பிரேதேசத்தில்

    ReplyDelete
  3. ஜனாதிபதி அலுவலகத்திலும் அரசு தரப்பில் சிலர் கிழக்கில் தமிழ் முஸ்லிம் இன மோதலை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுகிறார்கள். மக்கள் பலியாகிவிடக்கூடாது. திரு துரைரத்தினம் அவர்கள் கிழக்கு தமிழர்களின் நியாயமான கவலையை முன்வைத்துள்ளார். 1999ம் ஆண்டு நான் கிழக்கு போராளிகளால் தடுத்து வைக்கப்பட்டேன். நீ தமிழருக்கு கிடைக்கும் அற்ப்ப சொற்ப உதவிகளையும் தட்டிப் பறிக்கப்பார்க்கிறாய் என்பதே என்மீதான குற்றச்சாட்டாக இருந்தது. தமிழருக்கிக் கிடைக்கும் நோராட் போன்ற வெளிநாட்டு உதவிகளில் முஸ்லிம்களுக்கு பங்கு கிடைப்பதில்லை என்கிறாய். ஆனால் முஸ்லிம் எம்பிக்கள் அனைத்துக் கிழக்கு மாகாணத்துக்காணத்துக்குமான அபிவிருத்தி நிதியை முழுமையாக முஸ்லிம் பகுதிக்கு மட்டுமே செலவு செய்கிறார்கள். தமிழ் பகுதிதிகளுக்கு கிடைக்கிற சிறு உதவியையும் தட்டிப்பறிக்கப் பார்க்கிறாய் என்று குற்றம் சுமத்தினார்கள். என்னிடம் நியாயமான பதில் இருக்கவில்லை. நெடுநேரத்தின் பின்னர் நான் தோழர் அஸ்ரப்போடு இதுபற்றி பேசுவதாக தெரிவித்ததால் எச்சரித்து விடுவிக்கப்பட்டேன். திரு. துரைரட்னம் சொல்வதன் தர்மத்தை முஸ்லிம்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இனமுறுகலை நோக்கமாகக்கொண்ட அரசு தரப்பு புயற்ச்சிகளை முஸ்லிம் அரசியல்வாதிகள் குறிப்பாக சமந்தரால் முதல் அமைச்சராக்கபட்ட ஹபீஸ் நசீர் அகமட் அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். .

    ReplyDelete
  4. இலங்கை சிங்கள ஆழும் சக்திகள் ஒருபுறத்தில் தமிழரையும் சிங்களவரையும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஒன்றிணைக்கும் வேலைகளை செய்கிறார்கள். மறுபுறத்தில் தமிழரையும் முஸ்லிம்களையும் பிழவு படுத்தும் வேலையையும் செய்கிறார்கள். ஜனாதிபதியின் சுற்று நிருபப்படி தனது நியமனம் செல்லுபடியாகாது எனத் தெரிந்தும் ஹாபீஸ் நசீர் இணைத்தலைவர் நியமனத்தை ஏற்றுக் கொண்டது ஆச்சரியம் தருகிறது. சமந்தர் ஆதரவால் முதல் அமைச்சர் பதவி பெற்ற ஹாபீஸ் நசீர் தமிழரையும் முஸ்லிம்களையும் பிழவுபடுத்தும் திட்டத்துக்கு துணைபோகாமல் இராஜிநாமா செய்யவேண்டுமென என எதிர்பார்க்கிறேன். மேலும் ஆழுனர் நியமனத்தின்போது காஅத்தான் குடியில் கைது நடவடிக்கைகளுக்கு அரசு ஆயுத்தமாகிறதோ என ஈஸ்டர் 2019க்கு முன்னமே சந்தேகம் தெரிவித்திருந்தேன். இப்ப ஏறாவூரை குறிவைக்கிறார்களோ என அச்சமாக உள்ளது.

    ReplyDelete
  5. ஒன்றுக்கும் வக்கில்லாத உம்மை போன்ற கிழடுகளை பாராளுமன்றம் அனுப்பினால் மொக்கு தமிழனுக்கு வேறு என்ன கிடைக்கும்?

    ReplyDelete

Powered by Blogger.