May 27, 2019

மசாஹிமாவுக்கு விடுதலை இல்லை - ஆரத்தழுவி ஆறுதல் சொல்லி, கண்ணீர்விட்ட சட்டத்தரணி நுஸ்ரா

- சட்டத்தரணி சறூக் -

ஹசலக பொலிசாரால் தர்ம சக்கரத்தை கொண்ட ஆடையை அணிந்து புத்த மதத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியது ஊடாக இரு சமூகங்களுக்கிடையிலே இன முறுகளை ஏற்படுத்தியமைக்காக அப்பாவி முஸ்லிம் பெண்ணை கடந்த 14 நாட்களாக மகியங்கனை நீதவானால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததமை நீங்கள் அறிந்த விடயமே. 

இன்று   27/05/2019  மேற்கூறப்பட்ட வழக்கு மகியங்கனை நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. 


"குறிப்பிட்ட வடிவம் பௌத்த மதத்தின் புனித சின்னமாகிய தர்மசக்கரம் அல்ல அது கப்பலின் சுக்கான் ( steering wheel ) ஆகும் என பல ஆதாரங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு எம்மால் கொண்டு வரப்பட்டது. 

அத்துடன் பிரித்தானிய பிரஜை Coleman தொடர்பான tattoo வழக்கின் தீர்ப்பினை நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். 

போலீசாரின் வேண்டுக்கோளுக்கிணங்க குறித்த ஆடை ஆனது பௌத்த சமய ஆணையாளர் திணைக்களத்திற்கும் தர நிர்ணய சபைக்கும் அறிக்கைக்காக அனுப்பி வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. 

ICCPR சட்டத்தின் நோக்கம் இனங்களுக்கினையே இன முறுகள் வராமல் தடுப்பதே ஆகும். ஆனால் குறித்த அப்பாவியான நோயாளியை எந்த விதமான குற்றமும் செய்யாமல் 14 நாட்கள் தடுத்து வைத்தீர்கள் என்று பொலிசாரிடம் கேட்டதற்கு 

" 10 முஸ்லிம் குடும்பங்களை கொண்ட அந்த கிராமத்திற்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவே இவ்வாறு மேற்கொண்டோம்" என்று பதிலளித்தனர். 

எது எவ்வாறு இருப்பினும் வழக்கில் எமக்கு சார்பாக இருந்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களை எடுத்துக்காட்டி பிணைக்கோரிக்கை முன் வைத்தோம். 

ஆனால், இவ்வழக்கானது ICCPR சட்டத்தன் கீழ் பொலிசாரினால் தொடுக்கப்பட்டருப்பதால் பிணை வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என எமது பிணை கோரிக்கையை நிராகரித்து வழக்கை எதிர்வரும்        03/06/2019 ம் திகதிக்கு ஒத்தி வைத்தார். 

இறுதியாக சிறை கைதிகள் மத்தியில் கண்ணீருடன்  நின்ற சகோதரி மசாஹிமாவை ஆரத்தழுவி ஆறுதல் வார்த்தைகளை கூறிய பின் தனது கண்ணீரை துடைத்த வண்ணம் எனது மனைவி நுஸ்ரா நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தார். 

இவ்வழக்கில் என்னுடன் எனது மனைவி சட்டத்தரணி நுஸ்ரா சறூக் மன்றில் தோன்றினோம். 

7 கருத்துரைகள்:

பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான். அல்லாஹ் உங்களது சேவையை பொருந்திக்கொள்வானாக.

So means these Buddhist Racist /Terrors still in position to take Law into their hand...
.. No other way we have to look a way for our safety in future... We need protection for Muslims safely... This government will not protect us..

நன்றிகள் பல கோடி உங்கள் இருவருக்கும். இறைவன் உங்கள் வாழ்க்கையில் பறக்கத்தை ஏற்படுத்துவானாக.

Allah the almighty blessing you both for your great efforts, please continue your sacrifice you will be rewarded a lot IA.

மஸாஹிமாவுக்கு விடுதலை+ பெருநாள் இரண்டும் இல்லை ஜனாதிபதி கவனத்துக்கு கொண்டு செல்ல முடியுமா?? அரசியல் வாதிகளே

May Allah Bless the Lawyer and his family for this service toward the society in needy time.

We ask Allah to reward you both in this world and hereafter.

Today I feel sad that I could not master in the field of LAWYERS studies.

Post a comment