Header Ads



ஞானசார தேரரின், விடுதலை நல்லதற்கே


இஸ்லாம் வளர்வதற்கு அபூபக்கர்(ரலி) அவர்களுக்கும், உமர்(ரலி) அவர்களுக்கும் எந்த அளவிற்கு பங்கு இருந்ததோ, அதே அளவு அபூஜஹலுக்கும், அபூலஹபுக்கும் பங்கு இருந்தது.

ஏனெனில் இவர்கள் அடித்து துன்புறுத்தியதால் தான், ஸஹாபாக்களால் அளவில்லா தியாகங்களை இந்த தீனுக்காக செய்ய முடிந்தது.!

காரணம் இஸ்லாத்தின் இயற்கை குணமே..

அது வாயால் ஊதி அணைத்து விடும் மெழுகுவர்த்தி அல்ல. ஊத ஊத பற்றி எரியும் ஜோதி.!

இனியும் முஸ்லிம்கள் மீது அநீதிகள் தொடரும். அதன்மூலம் முஸ்லிம்களது ஈமானிய உறுதி தான் மேம்படும்..!

(قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلْ الْمُؤْمِنُونَ
"ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன்தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும். முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (அல்குர்ஆன் 9:51)

Mohamed Absar

4 comments:

  1. அவ்வாறே "சூரா மஸத்" என்ன சொல்லி இருக்கின்றன என்பதையும் கவனியுங்கள் சிலரின் கல்பு இருக்கமாக்கப்பட்டு இருக்கின்றன அவர்கள் இஸ்லாத்தை ஏற்கமாட்டார்கள் அவர்கள் செல்லும் இடம் நிரந்தர நரகமாகும்.

    ReplyDelete
  2. யதார்த்தம்

    இலங்கையில் ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகமும் தன்னைத்தானே ஒருகணம் திருமபிப் பார்த்து தம் தவறுகளையும் பிழைகழையும் திருத்திக்கொள்ள வேன்டிய தருணம் இது.

    பின்வரும் விடயங்கள் பற்றிய அவசிய நடவடிக்கையும் தேவை

    1. நமக்கான அர்ப்பணிப்புள்ள ஒரு கூட்டுத் தலைமைத்துவம் மிக அவசியமும் அவசரமாகவும் தேவை

    2. நமக்குள்ளே உள்ள அனைத்துவகை கழுத்தறுப்புகளும் உடன் நிறுத்தப்படல் வேன்டும்

    3. சமூகமட்டத்தில் பரந்துபட்ட கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு விடயங்கள் அலசி ஆரயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு சமூக அறிவூட்டல்கள் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேன்டும்.

    4. செயற்படுத்தலுக்கான தலைமைக்காரியாலயம் அமைக்கப்பட்டு நாடளாவிய கிழைகள் நிறுவப்பட்டு சமூகத் தொடர்பாடல்கள் வலுவூட்டப்படல்வேன்டும்.

    5. இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்தும் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேன்டும்.

    6. உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் அரசுடனும் ஏனைய சக்திகளுடனும் நடாத்தப்படல் வேன்டும்.

    பேன்ற இவைகள் பற்றி மிக அவசரமாகச் சிந்திக்கப்படல் வேன்டும்.

    ReplyDelete
  3. உன்மையான இறை வேதம்.

    ReplyDelete
  4. Masha allah.very happy to see this quran aaya.

    ReplyDelete

Powered by Blogger.