Header Ads



புர்கா தடையால், இராஜினாமா செய்த வைத்தியர் (முஸ்லிம் என்று சொல்லு, தலை நிமிர்ந்து நில்லு)

ஹோமாகம தேசிய வைத்தியசாலையில் பணிப்புரியும் வைத்தியரொருவரை, அவர் அணிந்துவந்திருந்த புர்காவை கழற்றும்படி பணித்தமையின் காரணமாக, தனது வைத்தியர் தொழிலை இராஜினாமா செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் குறித்த வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில், குறித்த வைத்திய அதிகாரி புர்கா அணிந்திருந்தமையின் காரணமாக, நோயாளரொருவர் அவரிடம் மருத்துவம் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளார். இந்நிலையில் வைத்தியசாலையிலிருந்து புர்காவை கழற்றிவிட்டு பணிக்கு வரும்படி வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரியால் பணிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வைத்தியசாலையிலிருந்து வெளியேறியிருந்த வைத்தியர், மே மாதம் 2ஆம் திகதி வரையில் வைத்தியசாலைக்கு வருகைத்தராதிருந்த நிலையில், அன்றைய தினம் வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரிக்கு அலைபேசியின் மூலம் தொடர்புக்கொண்டு தனக்கு சுகயீனம் என்று அறிவித்துள்ளார்.

பின்னர் குறித்த வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரியான ஜே. ஹெட்டியாராச்சி இதுபற்றி விளக்கமளிக்கையில், இச்சம்பவம் எமது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதோடு, ​அவர் சில நாள்கள் பணிக்கு வருகைத்தராதிருந்த நிலையில், தான் பணியியை இராஜினாமா செய்துக்கொள்வதாக, இராஜினாமா கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளாரென்றும் எனினும் அக்கடிதத்தை தாம் இன்னமும் பொறுப்பேற்றுகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

21 comments:

  1. புர்கா - இது மார்க்கம் கடமையாக்காத ஒன்று. நாமாக செய்வது எல்லாம் மார்க்கக் கடமையாகிவிடாது.

    தவிர புர்கா என்பது உலக நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று என்பதனாலேயே அது பெண்களின் பாதுகாப்பிற்கு சிறந்த ஒன்றாக இருந்தபோதும் அதனை இறைவன் நபி ஸல் அவர்களின் மனைவிமார்கள் தவிர்ந்த எனைய பெண்களுக்கு கடமையாக்கவில்லை.

    எனவே சகோதரி தமது முடிவுபற்றி மீழ சிந்திக்க வேன்டும்.

    ReplyDelete
  2. This is not a way to deal with this issue. This dress code issue must not become a national problem for us. Islam has flexible theories to deal with it.. Islam tells us how to deal with situation like this.. Look at the beauty of Islam: what does Islam say about dress code.. You and some people make face cover as a fard. but, is it practical all the world? see many Ulama say face covering is not obligation at all, why are you making trouble..for your face cover how Muslim girls will be insulted, shouted at, sometimes attacks? do you want this? it would be wrong from you if you let some trouble take place due to your face cover..

    ReplyDelete
  3. சில விடயங்களில் நாம் விட்டு கொடுத்து நடக்க வேண்டும்.தேசிய பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.அபாயா அனிவதையோ,தலையை மூடுவதையோ யாரும் தடுக்க முடியாது.ஆனால் தேசிய பாதுகாப்பு கருதி எமது சகோதரிகள் சில விடயங்களில் சிந்தித்து செயற்படுங்கல்

    ReplyDelete
  4. புர்க்காவைத்தான் முழு நாடும் சேர்ந்து தடை செய்தாகி விட்டதே. அப்புறம் எதற்கு அதை அணிவேன் என்று அடம் பிடிக்கவேண்டும். அவசராக்கால சட்டத்தில் பிடித்து உள்ளே போட்டால் நம்மாளே உங்களை திட்டுவானே.

    ReplyDelete
  5. well done.ippadiththan muslim pengal irukka wendum

    ReplyDelete
  6. அல்லாஹு அக்பர்

    ReplyDelete
  7. The heading given here doesn't suit because it may encourage other ladies to do so. It will affect our community

    ReplyDelete
  8. Ungada eimaanla allah uruthiya tharuwaan dr...really very happy to u..bt ullathula eimaan iruntha mohamellam ethuku..atpa moham..eimaan ullam..athu mooduna allah ungala porunthikkolawaan..allah etho eppadiyyo waala waippan nam makkalay

    ReplyDelete
  9. good decision. Rizk is from Almighty Allah.

    ReplyDelete
  10. துணிச்சலான முடிவுக்கு சகோதரிக்குப் பாராட்டுத் தெரிவிக்கலாம் ஆனால் இவ்வாறான சிக்கல்கள் வராமல் முன்கூட்டியே தவிர்ந்து கொள்வது சிறந்தது என நினைக்கிறேன்.

    ReplyDelete
  11. தயவு செய்து பாரதியாரை இழிவு படுத்தும் விதமாக தலைப்பு இட வேண்டாம்.

    ReplyDelete
  12. இஸ்லாம் தியாகத்தினால் வளர்ந்த மார்க்கம் வளைந்து கொடுக்கும் மார்க்கம் இல்லை சகோதரியே அல்லாஹ் உன்னை நிச்சயமாக பொருந்திக்கொள்வான்.

    ReplyDelete
  13. இஸ்லாம் தியாகத்தினால் வளர்ந்த மார்க்கம் வளைந்து கொடுக்கும் மார்க்கம் இல்லை சகோதரியே அல்லாஹ் உன்னை நிச்சயமாக பொருந்திக்கொள்வான்.

    ReplyDelete
  14. புர்கா அணிந்து வெளியே முகம் காட்டுவதே தவறு. புர்கா அணிந்து கொண்டே வீட்டில் முடங்கி இருங்கள். இந்த நாட்டிலே வாழவேண்டும் என்றால் நாட்டு சட்ட திட்டங்களை மதியுங்கள். புர்கா அணிவது சட்ட விரோதம்.

    ReplyDelete
  15. எவ்வளவுதான் புத்தகப் படிப்பை படித்து வைத்தியர் ஆனாலும், பொது அறிவும், சுய சிந்தனையும் இல்லை என்றால் எந்தப் பயனும் இல்லை.

    அதற்கு நல்ல உதாரணம் இது.
    இத்தகையவர்கள் வீட்டில் இருப்பதுதான் நோயாளிகளுக்கு செய்யும் பெரிய சேவையாக அமையும்.

    ReplyDelete
  16. நோயாளிகளுக்கு வைத்தியம் செய்ய பலர் இருக்கின்றனர்,
    உங்களைப் போன்று கோமாளிகளாகி உலக நலன்களுக்காக மார்க்கத்தை விற்றுவிடாமல் தன மார்க்கத்தை பாதுகாத்த இப்பெண்ணுக்கு ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்த சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள். அல்லாஹ் ஈருலகிலும் இவரது வாழ்க்கையில் பரக்கத்தையும் ரஹ்மத்தையும் வெற்றியையும் அளிப்பானாக. எமது சகோதரிகளுக்கான சிறந்த முன்மாதிரியான வழிகாட்டல் இது.

    ReplyDelete
  18. Don't write stupid.....That's her freedom.She may knows to protect when she goes out.
    Only face cover is not allowed.why should these people not allow to wear
    scarf & black Abaya also.

    ReplyDelete
  19. Don't write stupid.....That's her freedom.She may knows to protect when she goes out.
    Only face cover is not allowed.why should these people not allow to wear
    scarf & black Abaya also.

    ReplyDelete

Powered by Blogger.