Header Ads



முஸ்லிம்­களைப் பாது­காக்க வேண்டும், முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்­பு ஏற்பட்டால் அது பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு வெற்­றி­ - ஹரிந்த விதா­னகே

தற்­போ­துள்ள நிலையில் நாம் சிந்­திக்க வேண்­டிய பல விட­யங்கள் எங்கள் முன்­னுள்­ளன. நாம் முஸ்லிம் மக்­களைப் பாது­காக்க வேண்டும். இங்­குள்ள முஸ்­லிம்­க­ளுக்கு ஏதும் பாதிப்­புகள் நிகழும் பட்­சத்தில், அது பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு பெரும் வெற்­றி­யாகவே அமையும் என்று தேசிய பாது­காப்புத் துறை தொடர்­பான நிபுணரும் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச ஆய்வு மையப் பணிப்­பா­ள­ரு­மான கலா­நிதி ஹரிந்த விதா­னகே தெரி­வித்­துள்ளார்.

அண்­மையில் நாட்டில் கோர விளை­வு­களை ஏற்­ப­டுத்­திய தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலின் எதி­ரொ­லி­யாக எழுந்­துள்ள தேசிய பாது­காப்பு குறித்த அச்­சு­றுத்தல் தொடர்­பாக லங்­கா­தீப வார இதழ் ஊட­க­வி­ய­லாளர் பிரி­யந்த கொடிப்­பிலி வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்ளார்.

கலா­நிதி ஹரிந்த மேலும் கூறி­ய­தா­வது, 

இலங்கை முஸ்­லிம்­களைப் பகைத்துக் கொண்டு இங்­குள்ள இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை ஒழித்துக் கட்ட முடி­யாது. இஸ்­லா­மிய மக்­க­ளூ­டாகத் தான் இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை இங்­கி­ருந்து விரட்­டி­ய­டிக்­கலாம். அதே போன்­ற­தொரு தவறை நாம் 1983 ஆம் ஆண்டு செய்­துள்ளோம். நாம் அன்று தமிழ் பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கு முன்னர், தமிழ் மக்­களைப் பகைத்துக் கொண்டாம். அதன் பயங்­கர விளைவை நாம் 30 வரு­டங்­க­ளாக அல்­லல்­பட்டு அனு­ப­வித்தோம். இஸ்­லா­மிய மக்­க­ளுடன் பகை­மையை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வோ­மானால் இதனை விடவும் பாரிய விளை­வு­களை எதிர்­கொள்­வது தவிர்க்க முடி­யாது போகும். இன்­றைய நிலையில், இஸ்­லா­மிய தேசத்­துடன் தொடர்­புள்ள வழி­த­வறிச் சென்­றுள்ள வாலி­பர்­களை நாம் இனம்­கண்டு கொள்­வது முக்­கி­ய­மாகும். எமது தேசிய பாது­காப்புக் குறித்து இன்று தீர்­மானம் எடுக்­கின்ற எமது அர­சியல் தலை­வர்கள் இது விட­ய­மாக சிந்­திக்க வேண்டும்.

தனிப்­பட்ட அர­சியல் விருப்பு வெறுப்­புக்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து எமது அர­சியல் தவைர்கள் நடந்து கொள்ளும் முறையால் தேசிய பாது­காப்­புக்­குத்தான் அச்­சு­றுத்­த­லாக அமை­கி­றது.

நாடொன்றில் ஆட்சி அமை­யப்­பெற்­ற­வுடன் அதன் தலை­யாய கட­மை­யாக அமை­வது தேசிய பாது­காப்­பாகும். பாது­காப்­புத்­துறை, இரா­ணுவம் என்­பன அரசின் பொறுப்பில் வரு­கின்­றன. நாட்டின் நிலப்­ப­ரப்பு, சுயா­தீனம் என்­ப­வற்­றுக்குப் புறம்­பாக அன்­றாட தேவை­யாக பாது­காப்பு இயந்­தி­ரமே பிர­தான பாக­மாக விளங்­கு­கி­றது. இதில் உள்­நாட்டு – வெளி­யு­லகப் பாது­காப்பு ஆகிய இரண்­டுமே உள்­ள­டங்­கு­கின்­றன. தேசிய பாது­காப்பின் அடிப்­படை தர்­மங்­க­ளாக இவை கணிக்­கப்­ப­டு­கின்­றன.

வெளி­யு­ல­கி­லி­ருந்து வரும் அச்­சு­றுத்­தல்­க­ளி­லி­ருந்து நாட்டைப் பாது­காப்­பதும் உள்­நாட்டில் தலை­யெ­டுக்கும் அர­சியல் ஊடாட்­டங்கள் உள்­ளிட்ட நாட்­டிற்கு எதி­ராக கிளர்ந்து வரும் சகல அச்­சு­றுத்­தல்கள், சவால்­க­ளி­லி­ருந்தும் நாட்­டுக்குப் பாது­காப்பு வழங்­கு­வ­துமே தேசிய பாது­காப்பு எனப்­ப­டு­கி­றது. மக்கள் நாட்டின் ஒரு பகு­தி­யாகும். எனவே மக்­க­ளுக்குப் பாது­காப்பு வழங்­கு­வதும் அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும். இவை அனைத்தும் சேர்ந்தே தேசிய பாது­காப்பு எனப்­ப­டு­கின்­றது.

தற்­போது உல­கி­லுள்ள நாடுகள் தேசிய பாது­காப்பை முன்­னிலைப் படுத்­திக்­கொண்டு அடக்­கு­முறைச் செயற்­பா­டு­களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருப்­பதைக் காண­மு­டி­கி­றது. இவற்றில் மனித உரி­மைகள், சிவில் உரி­மைகள், மொழிச்­சு­தந்­திரம் போன்­ற­னவும் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இந்­நி­லையில் தேசிய பாது­காப்பு போது­மா­ன­தாக இல்லை என்ற முறைப்­பாடும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.

உலக நாடு­களில் கடந்த பதி­னைந்து இரு­பது வரு­டங்­க­ளாக பாது­காப்புச் சூழல் பெரு­ம­ளவில் விஸ்­த­ரிப்புச் செய்­யப்­பட்­டுள்ள போதிலும் அதிலும் திருப்தி காணாத சிந்­த­னையே நிலவி வரு­வதைக் காண்­கிறோம். இலங்­கையில் பாது­காப்பு நிலைமை திருப்தி, அதி­ருப்தி என்று இரு வகை­க­ளிலும் விமர்­சிக்­கப்­ப­டு­கி­றது.

30 வருட கால யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்து வெற்றி கொண்­ட­மையை திருப்­தி­யாகக் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. அதே­வேளை மறு­பு­றத்தில் தேசிய பாது­காப்புக் குறித்தும் சவால் உள்­ளது. அதே போன்று நல்­லி­ணக்கம் தொடர்­பா­கவும் சவால் உள்­ளது. கடந்த காலங்­களில் இவ்­வி­ட­யங்கள் தொடர்­பா­கவே பேசப்­பட்டு வந்­தன. இந்­நி­லை­யி­லேயே அண்­மையில் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டு தாக்­குதல் சம்­ப­வங்­க­ளுடன் இவ்­வி­டயம் மேலும் உக்­கி­ர­ம­டைந்­துள்­ளது. தேசிய பாது­காப்பே அர­சாங்கம் ஒன்றின் பிர­தான கட­மை­யாகும். இத­னூ­டா­க­வேதான் அர­சாங்­கத்தின் பலம் நோக்­கப்­ப­டு­கி­றது. எமது நாட்டின் பாது­காப்பு ஒரு­வ­கையில் அர­சியல் ரீதி­யாக பிளவு பட்ட கதை­யா­கவே உள்­ளது. இதே போன்றே எமது நாட்டின் பெரும்­பா­லான விட­யங்­களின் அடிப்­படை அர­சியல் மய­மா­கவே உள்­ளன. அத்­துடன் அவற்றில் தனி­நபர் தலை­யீ­டு­களும் புகுத்­தப்­பட்­டுள்­ளன. இத­னா­லேயே பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம்.

2 comments:

  1. 10009%true.our politicians spoiled our defense and secuirty.

    ReplyDelete
  2. That's the historical evidence. First of all sir, we have to bring peace and harmony between communities. If our communities strengthen, outside enemies could cut short their tails.

    ReplyDelete

Powered by Blogger.