Header Ads



பூண்­டு­லோயா தமிழ் பாடசாலையில், முஸ்லிம் மாண­விகள் பர்தா அணிந்துவர எதிர்ப்பு

அண்­மையில் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து பூண்­டு­லோயா தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாண­விகள் பாட­சா­லைக்கு பர்தா அணிந்து வரக்­கூ­டாது என பெற்­றோரும் பழைய மாண­வர்­களும் எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ளனர்.

இந்­நி­லைமை தொடர்பில் ஆராய்ந்து தீர்­மானம் எடுப்­ப­தற்­கான கூட்­ட­மொன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாட­சா­லையில் இடம்­பெற்­றது.

இக்­கூட்­டத்தில் பழைய மாணவர் சங்க பிர­தி­நி­திகள், பாட­சாலை அபி­வி­ருத்திச் சங்க பிர­தி­நி­திகள், பெற்றோர் தரப்பில் பிர­தி­நி­திகள், பூண்­டு­லோயா பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி, நுவ­ரெ­லியா பிராந்­திய உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர், வலயக் கல்வி அதி­கா­ரிகள், பாட­சாலை அதிபர் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

முஸ்லிம் தரப்பில் கல்­வி­ப­யிலும் மாண­வி­களின் பெற்­றோ­ரல்­லாத 7 பேரும் பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் 3 பேரும் அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர். நடை­பெற்ற கூட்­டத்தில் இறுதித் தீர்­மானம் எட்­டப்­ப­டாத நிலையில் வலயக் கல்விப் பணிப்­பா­ள­ருடன் பாட­சாலை அபி­வி­ருத்திச் சங்­கத்தின் ஆறு பேர் கலந்­து­ரை­யாடி இது தொடர்பில் தீர்­மானம் மேற்­கொள்­வ­தாகத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் பூண்­டு­லோயா தமிழ் மகா வித்­தி­யா­லய அதிபர் ஸ்ரீவேணுகோபால சர்­மாவை விடி­வெள்ளி தொடர்­பு­கொண்டு வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு விளக்­க­ம­ளித்தார். பாட­சாலை ஒரு கலவன் பாட­சாலை. 1400 மாணவ மாண­விகள் இங்கு பயில்­கி­றார்கள். இவர்­களில் 126 பேர் முஸ்லிம் மாணவ, மாண­விகள். 126 பேரில் 69 பேர் மாண­விகள். இவர்களில் 35 பேர் பர்தா அணிந்து வரு­கி­றார்கள். இங்கு தமிழ் மாண­வர்­களே பெரும்­பான்­மை­யா­ன­வர்கள்.

இப்­பா­ட­சாலை முஸ்லிம் மாண­விகள் பர்தா அணிந்து வரு­வதை பெற்றோர் விரும்­ப­வில்லை எதிர்க்­கி­றார்கள்.

இது­வரை காலம் பர்­தா­வுக்கு எதிர்ப்பு இருக்­க­வில்லை. ஏப்ரல் மாதம் இடம்­பெற்ற குண்­டுத்­தாக்­கு­த­லை­ய­டுத்தே இந்­நி­லைமை உரு­வா­கி­யுள்­ளது. தமிழ் மாண­விகள் போன்று முஸ்லிம் மாணவிகள் உடையணிய வேண்டும் என பெற்றோர் வலியுறுத்துகிறார்கள்.

வலயக் கல்வித் திணைக்­கள அதி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி இறுதித் தீர்­மானம் மேற்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என்றார்.
-vidivelli

7 comments:

  1. அனைத்து மாணவ மாணவிகளும் உங்களுடைய ஈமான் உருதியென்றால் இந்த புனிதமான மார்க்கத்தை அசிங்கபடுத்தி அல்லாஹ்வின் சாபத்தை ஏற்படுத்திராதீர்கள் தயவு இந்த கேவலம் கெட்ட கலாச்சாரம் தேவையில்ல உடனடியாக அந்த பள்ளியை விட்டு விலகுங்கள் அனைத்து ஆசிரியர்களும் மாணவிகளும் பள்ளியை விட்டு விலகி வேர பாடசாலைக்கு சென்று கல்வி கற்பதற்கும் கல்வி கற்றுக்கொடுப்பதுக்கும் தயாராகுங்கள் உங்களின் முயற்சி நிச்சயம் வெற்றி கிடைக்கும் காசி பணம் சம்பாதிக்கனும் என்பதற்காக மார்க்கத்தை விற்றுவிடாதீர்கள் அல்லாஹ் கடுமையானவன் ....

    ReplyDelete
  2. We SHOULD NOT get angry on those parents and former students who force Muslim to dress like them out of panic. We should calmly explain them our stand and take necessary legal action if need. patience only bring to Our Country.

    ReplyDelete
  3. இதே போல் Muslim பாடசாலைகளின் பெற்றோர் தமிழ் மாணவிகள் எமது பாடசாலைக்கு வரும் போது பர்தா அனியச் சொன்னால் எப்படியிருக்கும்.ஏன் மலையகத்தினை சேர்ந்தவர்கள் அனைவரையும் எமது முதலாளிமார் விரட்டி விட்டால் மலையக வாழ் மக்களின் நிலை எவ்வாறு இருக்கும்.எனவே கடந்த 30 வருட புலிகளின் பயங்கரவாத,தீவிரவாத யுத்த நேரத்தில் Muslim கள் மலயகம் மற்றும் வட,கிழக்கு தமிழர்களை ஒதுக்கவில்லை.ஆனால் இப்போது மலயக,வடக்கு,கிழக்கு தமிழர்களின் இனவாதத்தை பார்க்கும் போது வியப்பாகவும்,சிரிப்பகவும்,நகைச்சுவையாகவும் உள்ளது.

    ReplyDelete
  4. உங்களின் அல்லாஹ்வின் சாபம் நிச்சயம் உண்டாகும் உண்டாகட்டும் யா அல்லாஹ் முஸ்லிம் பெண்களின் கற்பை பாதுகாத்துடு காபிர்களை அழித்துடு யா அல்லாஹ்....

    ReplyDelete
  5. திருப்பி நாம் ஏன் என்று கேட்டால் தீவிரவாதிகள் என்பார்கள்.இவர்கள்தான் உண்மையான தீவிரவாதிகள். தமிழ் பாடசாலைகைளை புரக்கணித்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு போங்கள். இந்த நாய்கள் இப்படித்தான் செய்யும்

    ReplyDelete
  6. நல்ல முஸ்லிம் அழிந்து
    ாேவாய் என்று பிராத்திக்கமாட்டான்

    ReplyDelete
  7. நல்ல முஸ்லிம் அழிந்து
    ாேவாய் என்று பிராத்திக்கமாட்டான்

    ReplyDelete

Powered by Blogger.