Header Ads



அபாயா விவகாரம் - மனோ கனேசனும், பொய்யான திருகுதாளங்களும்

 -Arm Jiffry -

புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் பர்தா அணிந்து அப்பாடசாலைக்குச் செல்வதற்கு இடையூறு செய்யப் பட்ட12 ஆசிரியைகளுள் எனது மிக நெருங்கிய உறவுக்காரரும் ஒருவராவார்.

இங்கே கூறப்படும் உடற் பரிசோதனை, கைப்பை என்ப
ன புதிதாகப் புனையப்பட்ட கற்பனைக் கதை . பொலிஸ் அதிகாரியைப் பயன்படுத்தி உண்மைப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு நியாயப்படுத்தும் எத்தனிப்புக்குத் துணைபோகும், நான் பெரிதும் மதிக்கும் அமைச்சர்களுள் ஒருவரான மனோகணேஷன் அவர்களை எண்ணி கவலையடைகிறேன்.

பிரச்சினை "அபாயா அணிந்து வந்தால் அனுமதிக்க மாட்டோம். 

சாரியுடன் வந்தால் மட்டுமே அனுமதிப்போம் .இல்லையேல் வேறு பாடசாலையைப் பாருங்கள் " (ஆதாரம் காணொலி ) . மேல் மாகாண ஆளுநர் அவர்களுக்கு பிரச்சினை நடத்துகொண்டிருக்கும் போது நானும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தை எத்திவைத்தேன்.

மாவை 2.30 மணியளவில் ஆளுநர் அவர்கள் தனது காரியாலயத்துக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் , பாடசாலை அதிபர் , மாகாண கல்விச் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், வலயத்தின் கல்வி அதிகாரி, ஆளுநரின் செயலாளர் ஆகியோரை அழைத்து பிரச்சினையை அலசி ஆராய்ந்தார். 

அப்யோது அதிபர் பர்தா அணிந்து வருவதை பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்களும் பெற்றோர்கள் சிலரும் தடுத்ததை ஒப்புக் கொண்டது மட்டுமல்லாது, இந்த 12 ஆசிரியைகளுக்கும் இடமாற்றம் செய்வதை அங்கீகரித்து தன்னையும் இடமாற்றம் செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

உண்மை நிலை இவ்வாறிருக்க முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்க எடுக்கும் முயற்சிக்கும்,  பொய்யாகப் புனையப்படும் திருகுதாளங்களுக்கும் ஆடாமல் இப்பாடசாலை மாணவர்களின் எதிர்கால கல்வி நிலைகுறித்து அவசரமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி கவனம் செலுத்துங்கள்.

3 comments:

  1. நேற்றே நான் சொல்லிவிட்டேன்,அமைச்சர் முழுப் பூசனிக்காயை சோரில் மறைக்கின்ரார் என.அவருக்கு உள் மனதில் மிகப் பெரும் கவலை,எமக்கு 1983 ஆண்டு ஜீலை போல எதுவும் நடக்கவில்லை என.இனி அந்த பாடசாலைக்கு மீண்டும் 12 ஆசிரியர்களும் திரும்பி போக வேண்டாம்.இனி ஒவ்வொரு Muslim பாடசால்சியிலும் சாரி க்கு எதிராக தடை விதியுங்கல்.sri Lanka வில் முகம் மூடுவதுதான் தடை.அபாயா அனிவதோ தலயை மூடுவதோ தடையல்ல.நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள போது புவக்பிட்டி காடையர்கல் எவ்வாறு சட்டத்தினை தாங்கள் கையில் எடுத்தார்கள்,ஏன் போலிசார் அந்த காடையர் கூட்டத்துக்கு எதிராக அவசரகால சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவில்லை.பாதிக்கப்பட்ட 12 ஆசிரியர்களும் வீடியோ ஆதாரத்தை கொண்டு அந்த காடையர் கூட்டத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுங்கள்.(அமைச்சர் மனோ கனேசன் அவர்களே தமிழ் பாரழுமன்ர உறுப்பினர்களிடையே எங்களுக்கு இவ்வளவு காலமும் உங்கள் மீது மதிப்பும் ,மரியாதையும் இருந்தது ஆனால் உங்களின் அண்மைக் கால நடவடிக்கைகளும்,நேற்றைய கருத்துக்களும்,அவை அனைத்தையும் தவிடு பொடியாக்கிவிட்டன்.) நன்ரி உங்களுக்கு.

    ReplyDelete
  2. முஸ்லிம் ஆசிரியைகள் இனி எந்த நிலையிலும் இந்த தோட்ட காட்டான் பாடசாலைக்கு சென்று கற்பிக்க கூடாது. அங்கு தோட்டக்காட்டான்களால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்

    ReplyDelete
  3. Mr. Mano, you have lost your image and reputation among Moslems. Now you are dead body.

    ReplyDelete

Powered by Blogger.