May 18, 2019

முஸ்லிம்களை தாக்கியது சரி, என்பவர்கள் கையை உயர்த்துங்கள்


இங்கு சிங்கள மொழியினால் ஆன ஒரு பதிவை இட்டிருக்கின்றேன்.சுனந்த தேசப்பிரிய அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் இதனை சேர்த்திருந்தார்கள்.

பிரியந்த அப்புஹாமி என்பவரின் பதிவை அவர் மேற்கோள்காட்டி எழுதியிருக்கின்றார்.பிரியந்த அப்புஹாமி என்பவர் இவ்வருடம் 2019 இல் சாதாரணதர பரிட்சைக்கு தோற்றவிருக்கும் தனது மகளின் வகுப்பில் நடந்த சம்பவத்தை பின்வருமாறு எழுகின்றார்.

அது வரலாற்றுப்பாட வகுப்பு. அந்த 20பேர் கொண்ட தனது மகளின் பிரத்தியேக வகுப்பில், ஆசிரியர், அம்மாணவர்களிடம் முஸ்லிம்களை தாக்கியது சரி என்பவர்கள் கையை உயர்த்துங்கள் என்று கேட்டு மாணவர்களின் மனநிலையை அறிய முயற்சித்திருக்கின்றார்.

18 மாணவர்கள் கையை உயர்த்தியிருக்கின்றார்கள்.இவரின் மகளும் அவரின் நண்பியும் மட்டும் கையை உயர்த்தவில்லை.நாத்தாண்டிய,கொட்டாரமுள்ள பிரதேச முஸ்லிம்கள் அண்மையில் தாக்கப்பட்டார்கள்.இவர்களை அண்டிவாழும் மாரவில,வென்னப்புவ பிரதேச மாணவர்களே இவ்வகுப்பில் கலந்துகொள்பவர்கள்.இவர்களே கையை உயர்த்தியிருக்கின்றார்கள்.

இந்த மனநிலையிலுள்ள மாணவர்கள் பெற்றோர்களாக மாறும்வயதில் எமது நாடு எப்படி இருக்கும் என்று பிரியந்த அப்புகாமியும் ,சுனந்த தேசப்பிரியவும் அங்கலாய்கின்றர். உண்மையும் அதுதான்.எதிர்காலம் எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு அச்சத்தையே பதிலாக தருகின்றது.

உலமா சபைத்தலைவர் ரிஸ்வி முப்தி இன்னும் பலரும் சர்வமத நிகழ்சியொன்றில் மிழகுவர்த்தியை ஏந்தியிருக்கின்றனர். இன்னொரு படத்தில் முஸ்லிம் குமரிகள் வெசாக்கூடு கட்டுகின்றனர். இன்னொரு படத்தில் வெசாக்கொடிகளினால் முஸ்லிம் இளைஞர்கள் நகரை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றனர்.இதைக்காணும்போது, இவை எல்லாமே தற்காலிகமாக எம்மை நாம் சமாதானப்படுத்திக்கொள்ள செய்யும் முயற்சியாகவே இருக்கப்போகின்றது என்பதனை நான் உணர்கின்றேன்.இதற்கு மேலுள்ள இடுகை எனக்கு உறுதுணையாகின்றது. 

பல்லின சமூகத்தில்,எமது இன்றைய அச்சநிலைக்கு நாம் முஸ்லிம்கள் மட்டும்தான் பொறுப்பா? என்றால் இல்லவேயில்லை என்று அடித்துச்சொல்வேன்.

எல்லாவற்றிற்கும் பின்னால் அல்லாஹ்வின் நியதி இருக்கின்றது.ஒரு இலை விழுகின்றது என்றாலும் சரியே.ஆனால் “நீங்கள் ஒட்டகத்தைக்க்ட்டிவிட்டு அதன் பாதுகாப்பைப்பற்றி பிராத்தியுங்கள்” என்று ரசூல் (ஸல்) அவர்களின் சுன்னாவை மறந்தவர்களாக நாம் இருக்கின்றோம் என்பதனையிட்டு சிந்திக்கக்கடமைப்பட்டிருக்கின்றோம்.

பெரும்பான்மை சிங்கள மாணவர்களை நெறிப்படுத்தும்வகையில் பாடப்புத்தகங்களில் திருப்திப்படும்படியாக முஸ்லிம்களைப்பற்றி எதுவுமே இல்லை.அடியும் உதையும் அங்கே இருந்துதான் வருகின்றது.முழுக்க முழுக்க வரலாற்றுப்புத்தகங்களில் சிங்கள மக்களின் வரலாறே எழுதப்பட்டிருக்கின்றது.எனதூரில் இருக்கும் கல்லுக்கு பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம்,ஒன்றாக உண்டு உறங்கி எழும் 20 இலட்சம் முஸ்லிம்களுக்கு வழங்க்கப்பட்டில்லை என்பது எனது கணிப்பாகும்.பிந்திய அரசாங்க காலத்தில் இச்சிறிய மலைக்கு போராட்டமே நடந்தது.

முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இலங்கையில் வாழ்ந்தாலும் முஸ்லிம் சமுதாயத்தின் அடிப்படைகள்,நம்பிக்கைபற்றி போதியளவு விடயம் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டிருந்தால் இனங்களுகிடையே புரிந்துணர்வு ஏற்பட வாய்ப்பாயிருந்திருக்கும்.இதுபற்றி ஆராய்ந்து அரசாங்கத்திற்கு ஆலோசனை சொல்லி செயற்படுத்துமளவிற்கு தூரநோக்குடைய தேறிய அரசியல்வாதிகளோ,அரச உயர் பதவிகளில் முஸ்லிம்களோ இல்லை என்பதுதான் இதற்கான காரணமாகும்.கணித விஞ்ஞானக்கல்விகளுடன் சமூக விஞ்ஞானமும் எல்லா மாணவர்களுக்கும் கற்பிப்பதே இதற்கான தீர்வாகும்..

முஸ்லிம் என்றாலே தாடியும் தொப்பியும் ஜுப்பாவும் கூடிய ஒருவன்,வியாபாரி,நாங்கு திருமணம் முடிப்பான்,பன்றி இறைச்சி சாப்பிடான்,அதிகமாக பிள்ளை பெற்றுக்கொள்வான்,பெண்கள் முகத்தை மூடி கருப்பு ஆடை அணிவார்கள் ஆகிய பின்பங்களைத்தான் அந்நிய சமூகத்தாரிடம் கேட்டால் சொல்வார்கள்.மாறாக இவர்களின் கடவுள் முகம்மதா? அல்லாவா? என்பதுகூட எஞ்சியுள்ள 90% மக்களுக்குத்தெரியாது.

விரலை ஆட்டுவது சரியா? பிழையா ? ,தாடியின் நீளம் எப்படியிருக்கவேண்டும் என்பதைபற்றி வாதப்பிரதிவாதங்களை விட்டுவிட்டு எமது சமூகத்தின் இறுப்பிற்கும் பாதுகாப்பிற்கும்,பல்லின சமூகமொன்றில் இஸ்லாம் முஸ்லிம்களிடம் விரும்புவது என்ன என்பது பற்றி சிந்த்திப்போம்.

Akbar Rafeek

7 கருத்துரைகள்:

உருப்படியான வேலைகளை இவனுக எப்பதான் பன்னுவானுக.ரோட்டுக்கு ரோடு மேடை போட்டு ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு கதைகளை கூறி,இறுதியில் மானம் கெட்டவனுகல் தங்களுக்குள் அடித்துக் கொண்டு,இறுதியில் பொலிசுக்கும்,கோட்டுக்கும் போய் இறுதியில் அது paper,T.V ல் நாறி ஒட்டுமொத்த Muslim சமூகமே அடுத்த மதத்தவர்கலிடம் காட்டிக் கொடுக்கப்படும்.

This is a worrying trend. All parties must take responsibility for this. Sri Lankan government too have been complicit on this issue. they have been marginalising Muslims for a long time now. Since MR came to power second time. Since then they have been intentionally ignoring us, there is a plot to harm Muslim community in many front. Yet, 22 Muslim MPs have done nothing. They behave as if they do not know anything. One by one Muslim mosques are destroyed since 2011 and yet they did not do anything. One by one Muslim villages are destroyed and yet, they did not do anything. Still they are power hungry.. Secondly, Muslim community do not have enough people to guide and advice.. Consider how many AGAs we have today? how many SSPs we have ? How many high level policy makers we have in all departments in Sri Lanka. We do not know what is going on in Sri Lanka. Unless, we have top people in all sections of Sri Lankan government apparatus we would not know what is going on in Sri Lanka. Our people are keen to make quick money and make some of us bright students as Doctors, Engineers. and yet, they could do little to know about problems of our communities..
If history books does not include about Muslim history,, Who is responsible about it? Where have been our educationalists? where have been our academics? where have been our MPS? where have been our community leaders? so, it is our fault that we missed it. Sinhalese officials in Education department are not bad to include them, Who write those history? who has got skills to do that.. Do we have any history books about Muslim leaders, Muslim villages, Muslim schools and Muslim contributions: Let Islamic groups fight one another//.... for some more time until Muslim community is wiped out? Let Salafi groups get funding from Saudi to build more wells until our community is wiped out? So, do not blame Sinhalese community alone for this. Yes, some politicians are bad but 95 Sinhalese are good. Remember we have been living among them for the last 1200 years and still we live with them. We know how kind are them and yet, some politics has gone wrong....
we could amend this if we have good people among us to speak to them and work with them.. It is a big ask. but we could do it if we plan it all from now..
For instance, We should introduce some comparative religious studies in Sri Lanka from schools to learn about others.. That must be done soon... That is why these kinds have said it is right to harm Muslims. They do not about us at all we do not know about them at all. that is why?

Dear Unknown,

A beautiful analysis of the PLIGHT of the Muslim community, Alhamdulillah. "The Muslim Voice" also wishes to add the following to your observatiions/comments please.
Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The ACMC is busy making money, the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society and Muslim Media organizations in Sri Lanka land their leaders will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut. Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

Mr Noor Nizam. You have been a strong supporter of MIHINDA FAMILY. NOW, YOU CAN SEE WHAT THEY HAVE DONE TO MUSLIM COMMUNITY..

Sirantha vidayangal, Ithan piragavathu emadu thalamaigal ithai paththi sindippargala. Idu ovvaru Sri Lankan muslimudaya poruppagum. Inda vidayangalai mel mattaththil kondu poyi serpathukku muyatchchi edukka vendum.

Post a comment