Header Ads



முக்கிய பயங்கரவாதிகள் இருவர், வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களை நடத்­திய, தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் அடிப்­ப­டை­வாத அமைப்பின் முக்­கி­யஸ்­தர்கள் என கரு­தப்­படும் இரு பயங்­க­ர­வா­திகள் வெளி­நா­டொன்­றுக்கு தப்பிச் சென்று அங்கு தலை­ம­றை­வாக இருப்­ப­தாக உள­வுத்­துறை தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ளது.

குறித்த இரு­வரும் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களின்   பின்­ன­ணியில் இருந்து செயற்­பட்­டி­ருக்க வேண்டும் என நம்பும் விசா­ர­ணை­யா­ளர்கள், அவர்கள் இரு­வ­ரையும் கைது செய்து நாட்­டுக்கு அழைத்­து­வர  திட்டம் வகுத்­துள்­ள­தா­கவும், அது தொடர்பில் இரா­ஜ­தந்­திர மட்ட செயற்­பா­டுகள் இடம்­பெ­று­வ­தா­கவும் பாது­காப்பு அமைச்சின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். 

இந்த தாக்­கு­தல்­க­ளுடன் நேர­டி­யாக தொடர்­பு­பட்ட அனை­வரும் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே பின்­ன­ணியில் செயற்­பட்ட அனை­வரும் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர். அதன்­ப­டியே அவர்­களைக் கைது செய்யும் நட­வ­டிக்­கை­களில் ஒரு அங்­க­மாக இவ்­வி­ரு­வரும்  கைது செய்­யப்­ப­ட­வுள்­ளனர். அத்­துடன், தடை செய்­யப்­பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் எனும் அடிப்­ப­டை­வாத அமைப்பின் பல முக்­கி­யஸ்­தர்கள் சிக்­கி­யுள்ள நிலையில் விசா­ர­ணைகள் தொடர்­வ­தாக அந்த அதி­காரி சுட்­டிக்­கா­ட­டினார்.

இத­னி­டையே, தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை நெறிப்­ப­டுத்­தி­ய­தாக நம்­பப்­படும் தற்­கொலை குன்­டு­தா­ரி­களில் ஒரு­வ­ரான மொஹம்மட் சஹ்ரான் ஹாஷிமின் மிக பிர­தான சகாக்­க­ளுக்கு சொந்­த­மான தெமட்­ட­கொட மஹ­வில கார்டன் வீடு முற்­றாக சி.ஐ.டி.யின்  பொறுப்பின் கீழ் கொன்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.  குறித்த வீட்­டிலும் தற்­கொலை தக­கு­தல்கள் நடாத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், அது தொடர்பில் தெமட்­ட­கொடை பொலி­சா­ரிடம் இருந்து சிஐ.டி. விசா­ர­ணை­களைப் பொறுப்­பேற்று நேற்று கொழும்பு பிர­தான நீதி­வா­னுக்கு அறி­ரிக்கை சமர்ப்­பித்­தது. இதன்­போதே வீட்டை பொறுப்­பேற்­ற­தாக சி.ஐ.டி. நீதி­வா­னுக்கு தெரி­வித்­தது.

இவ்­வாறு சி.ஐ.டி.யால் பொறுப்­பேற்­கப்­பட்ட சொகுசு வீடா­னது, சஹ்­ரா­னுடன் ஷங்­ரில்லா ஹோட்­டலில் தாக்­குதல் நடாத்­திய மொஹம்மட் இப்­ராஹீம் மொஹம்மட் இல்ஹாம் மற்றும் சினமன் ஹோட்­டலில் தாக்­குதல் நடத்­திய மொஹம்மட் இப்­ராஹீம் மொஹம்மட் இன்சாப் ஆகியோர் வசித்த, அவர்­க­ளது தந்­தை­யான பிர­பல கோடீஸ்­வர வர்த்­தகர் மொஹம்மட் இப்­ரா­ஹீ­முக்கு சொந்­த­மா­ன­தாகும்.   மொஹம்மட் இப­ராஹீம் உள்­ளிட்ட 19 பேர் தெமட்­ட­கொடை குன்­டுத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் சி.ஐ.டி.யின் மனிதப் படு­கொ­லைகள் குறித்த விசா­ரணைப் பிரிவில் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­ப­டு­வ­தாக நேற்று மன்றில் ஆஜ­ரான சி.ஐ.டி. அதி­காரி நீதி­வா­னுக்கு அறி­வித்தார்.

தெமட்­ட­கொடை தாக்­கு­தலில் இறந்­த­வர்­களின் டி.என்.ஏ. சோத­னைகள் ஊடாக மரண விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்த உத்­த­ர­விட்ட நீதிவான் இந்த தாக்­குதல் சம்­பவம் தொடர்­பி­லான வழ்­ககை எதிர்­வரும் 14 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்தார்.


No comments

Powered by Blogger.