Header Ads



மோசமாக நடந்துகொள்ள வேண்டாம், தயாசிறிக்கு கடுமையான எச்சரிக்கை

சபையில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தை வழங்குங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவும்  விதிகளை மீறி என்னால் காலம் வழங்க முடியாது எனச் சபாநாயகரும் சபையில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஜனநாயக தலைவர் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் எனவும் கூறி இறுதியாகச் சபாநாயகரைச் சமாதானப்படுத்தினார் தயாசிறி எம்.பி 

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் தயாசிறி ஜெயசேகர எம்.பியின் கேள்வி நேரத்தில் அவர் சபையில் இருக்காத காரணத்தினால் அடுத்த அடுத்த கேள்விகளுக்குச் சபாநாயகர் அனுமதி வழங்கினார். 

பின்னர் இரண்டாம் சுற்றுக் கேள்வி நேரத்தில் சபைக்கு வந்த தயாசிறி ஜெயசேகர எம்.பி தனது கேள்விக்கான இடமளிக்க வேண்டும் என்  கோரியதற்கு அமைய அவருக்கான கேள்வி கேட்கப்பட்டது, எனினும் பதில் தெரிவிக்க இருந்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பதிலை சரிப்படுத்துவதாகக் கூறினார். 

இதனையடுத்து தயாசிறி ஜெயசேகர எம்.பி தனக்கான பதிலைத் தெரிவிக்க வேண்டும் எனச் சபையில் வாதாடினார். எனினும் அதற்கு இடமளிக்காத சபாநாயகர் தன்னால் ஒருபோதும் சபை விதிமுறைகளை மீற முடியாது நீங்கள் ஒவ்வொரு நாளும் இவ்வாறு மோசமாக நடந்துகொள்ள வேண்டாம் என்று கடுமையாக எச்சரித்தார். இதன்போது தயாசிறி எம்.பி சபாநாயகரை கடுமையாக விமர்சித்தார். 

பின்னர் கேள்வி நேரங்கள் முடிந்தவுடன் இறுதியாக ஒழுங்குப் பிரச்சினைக்கான அனுமதியை வழங்கிய சபாநாயகர் தயாசிறி எம்.பியை பேச இடமளித்தார். 

No comments

Powered by Blogger.